புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது டாடா!

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலாக இந்த புதிய எஸ்யூவி மாடல் வர இருக்கிறது.

டாடாவின் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் கான்செப்ட் ஜெனிவா மோட்டார் ஷோவில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது டாடா!

கடந்த மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலாக இந்த புதிய எஸ்யூவி மாடல் வர இருக்கிறது. எச்7எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் குறிப்பிடப்பட்டு வந்த இந்த எஸ்யூவி தற்போது பஸ்ஸார்டு என்ற பெயரில் கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது டாடா!

இந்த புதிய எஸ்யூவி டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்படுகிறது. டாடாவின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொள்கையின் கீழ் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது டாடா!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் என்பதால் முகப்பு மற்றும் பின்புற டிசைன் ஒரே மாதிரியாக இருக்கும். கூடுதல் இருக்கைக்காக நீளம் அதிகரிக்கப்பட்டு இருப்பதால் பக்கவாட்டு டிசைனில் மாறுதல் செய்யப்பட்டு இருக்கிறது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது டாடா!

இந்த எஸ்யூவி 2,741 மிமீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. அதாவது, டாடா ஹாரியர் எஸ்யூவியின் அதே வீல் பேஸ் நீளம்தான் இதுவும் பெற்றிருக்கிறது. ஆனால், நீளம் 62 மிமீ கூட்டப்பட்டு இருக்கிறது. மூன்றாவது வரிசை இருக்கைக்காக உட்புறத்தில் மாறுதல்களும், பாடியின் நீளமும் சற்று அதிகரிக்கப்பட்டு வர இருக்கிறது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது டாடா!

டாடா பஸ்ஸார்டு எஸ்யூவியின் கான்செப்ட்டில் 18 அங்குல அலாய் வீல்கள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. புதிய ஃபுட் போர்டுகள், ரூஃப் ரெயில்கள் கொடுக்கப்பட இருக்கின்றன. உட்புற அமைப்பில் பெரிய வித்தியாசங்கள் இருக்காது என்று தெரிகிறது.

புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது டாடா!

புதிய டாடா பஸ்ஸார்டு எஸ்யூவி கான்செப்ட் மாடலில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

புதிய 7 சீட்டர் எஸ்யூவி கான்செப்ட்டை அறிமுகப்படுத்தியது டாடா!

இந்த ஆண்டு பிற்பாதியில் டாடா அல்ட்ராஸ் ஹேட்ச்பேக் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதற்கு அடுத்ததாக டாடா பஸ்ஸார்டு எஸ்யூவியின் தயாரிப்பு நிலை மாடல் புதிய பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன.

புதிய டாடா பஸ்ஸார்டு எஸ்யூவியானது டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் மற்றும் மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

More from DriveSpark

Article Published On: Thursday, March 7, 2019, 11:20 [IST]
English summary
Tata Motors has unveiled their seven-seater 'Buzzard' concept SUV at the ongoing 2019 Geneva Motor Show. The Tata Buzzard (seven-seater H7X) concept SUV is among the four new models premiered at the International Motor Show event.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+