லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

லேண்ட்ரோவர் எஸ்யூவியில் இருப்பது போன்ற வசதிகளுடன் டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் வர இருப்பது தெரிய வந்துள்ளது.

லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

கடந்த மாதம் டாடா ஹாரியர் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லேண்ட்ரோவர் டி-8 பிளாட்ஃபார்மை தழுவிய உருவாக்கப்பட்ட ஒமேகா என்ற கட்டமைப்பில் இந்த எஸ்யூவி ரக கார் உருவாக்கப்பட்டுள்ளது.

லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

இந்த நிலையில், அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்தில் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றிருப்பதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், டாடா ஹாரியர் எஸ்யூவியின் அடிப்படையிலான 7 சீட்டர் எஸ்யூவி மாடலையும் டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது. ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த 7 சீட்டர் ஹாரியர் எஸ்யூவி பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

தற்போது இந்த 7 சீட்டர் ஹாரியர் எஸ்யூவி இந்தியாவில் மிக தீவிரமான சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் வேறு பெயரில் வர இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இந்த ஆண்டு இறுதியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

இந்த நிலையில், டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலில் லேண்ட்ரோவரில் இருப்பது போன்ற சில முக்கிய அம்சங்கள் இடம்பெற்றிருப்பது தெரிய வந்துள்ளது. இது வாடிக்கையாளர்களின் ஆவலைத் தூண்டும் விதமாக அமைந்துள்ளது.

லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலில் டயல் மூலமாக கியர்களை மாற்றும் வசதி கொடுக்கப்பட்டு இருக்கிறது. அதேபோன்று, எலக்ட்ரானிக் பார்க்கிங் பிரேக் வசதியும் இந்த காரில் இடம்பெற்றிருக்கிறது. லேண்ட்ரோவர் எஸ்யூவி மாடல்களில் இடம்பெற்றிருக்கும் இந்த சிறப்பு வசதிகள் இப்போது டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடலிலும் இடம்பெற்றிருக்கின்றன.

லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

மேலும், அனைத்து இண்டிகேட்டர்களும் ஒளிர்வதற்கான ஹசார்டு லைட் சுவிட்சும், இந்த எஸ்யூவியில் கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த கட்டுப்பாட்டு அமைப்பு முன் இருக்கைகளுக்கு நடுவில் இடம்பெற்றிருப்பதாகவும் தெரிய வருகிறது.

லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

டாடா ஹாரியர் 5 சீட்டர் மாடலைவிட 7 சீட்டர் மாடலில் டெயில்கேட் எனப்படும் பின்புற கதவு அமைப்பு முற்றிலும் புதிய டிசைனில் இடம்பெற இருக்கிறது. அத்துடன், கூடுதலாக மூன்றாவது வரிசை இடம்பெறுவதற்காக காரின் நீளமும் அதிகரிக்கப்பட்டு இருப்பதால், இதன் கதவுகள் ஏறி, இறங்குவதற்கு வசதியாக அமைக்கப்பட்டு இருக்கிறது.

லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடலில் இருக்கும் அதே 2.0 லிட்டர் ஃபியட் டீசல் எஞ்சின்தான் 7 சீட்டர் மாடலிலும் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், 7 சீட்டர் மாடலில் இருக்கும் இந்த எஞ்சின் 170 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறனை பெற்றிருக்கும். டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடலில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் இடம்பெற இருக்கிறது.

லேண்ட்ரோவருக்கு இணையான வசதிகளுடன் வரும் டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல்!

இந்த ஆண்டு இறுதியில் வர இருக்கும் இந்த புத்தம் புதிய டாடா எஸ்யூவி தற்போது H7X என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. இந்த 7 சீட்டர் எஸ்யூவியானது டொயோட்டா ஃபார்ச்சூனர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4, ஃபோர்டு எண்டெவர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு போட்டியாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, March 1, 2019, 14:31 [IST]
English summary
Tata Harrier (H7X)To Get Rotary Gear Selector And Electronic Parking Brake features like Landrover models.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+