புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

கடந்த மாதம் டாடா ஹாரியர் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதன் 7 சீட்டர் மாடலையும் களமிறக்குவதற்கான பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவி

டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

கடந்த மாதம் டாடா ஹாரியர் எஸ்யூவியின் 5 சீட்டர் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஓரளவு வரவேற்பை பெற்றிருக்கும் நிலையில், அதன் 7 சீட்டர் மாடலையும் களமிறக்குவதற்கான பணிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிரம் காட்டி வருகிறது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

தற்போது 7 சீட்டர் ஹாரியர் எஸ்யூவி சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டபோது எடுக்கப்பட்ட ஸ்பை படங்களும் ஆட்டோகார் இந்தியா தளத்தில் வெளியாகி இருக்கின்றன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

டாடா ஹாரியர் எஸ்யூவியானது லேண்ட்ரோவர் டி-8 பிளாட்ஃபார்மின் அடிப்படையிலான ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது. மேலும், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட 2.0 டிசைன் தாத்பரிய கொள்கையில் வடிவமைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடல் தற்்போது எச்7எக்ஸ் என்ற குறியீட்டுப் பெயரில் அழைக்கப்படுகிறது. இது புதிய பெயரில் வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. டாடா ஹாரியர் 5 சீட்டர் மாடலைவிட 62 மிமீ கூடுதல் நீளம் கொண்டதாக இருக்கும்.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடலானது கூடுதல் அகலமுடைய டயர்கள், புதிய அலாய் வீல்கள் உள்ளிட்டவற்றுடன் வர இருக்ககிறது. எல்இடி பகல்நேர விளக்குகள், ஸ்போர்ட்டியான பம்பர், டெயில் லைட்டுகள் மற்றும் எலெக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்ட அம்சங்களை பெற்றிருக்கும்.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

புதிய டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடலானது உயர்தர அம்சங்களை கொண்ட இன்டீரியருடன் வர இருக்கிறது. லெதர் இருக்கைகள், லெதர் ஃபினிஷ் செய்யப்பட்ட டேஷ்போர்டு அமைப்பு, பெரிய தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆகியவற்றை பெற்றிருக்கும்.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

புதிய டாடா எச்7எக்ஸ் எஸ்யூவியில் இரண்டு ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் கேமரா மற்றும் சென்சார்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். பிரேக் அசிஸ்ட், டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம், டெர்ரெயின் மேனேஜ்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட தொழில்நுட்ப வசதிகளும் இடம்பெற இருக்கின்றன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

புதிய டாடா ஹாரியர் 7 சீட்டர் மாடலிலும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின்தான் பயன்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், இந்த எஞ்சிசன் 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும். 5 சீட்டர் ஹாரியரைவிட 30 பிஎச்பி கூடுதல் பவரை வெளிப்படுத்தும் திறனுடன் வருகிறது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடலின் ஸ்பை படங்கள்!

அடுத்த மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் இந்த புதிய 7 சீட்டர் ஹாரியர் எஸ்யூவி பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இந்த ஆண்டிலேயே நம் நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும். டொயோட்டா ஃபார்ச்சூனர், ஃபோர்டு எண்டெவர் எஸ்யூவி மாடல்களுடன் போட்டி போடும்.

Most Read Articles
English summary
Tata Motors is set to introduce the seven-seater Harrier SUV in India. The seven-seater SUV, based on the Harrier will be showcased at the 2019 Geneva Motor Show.
Story first published: Friday, February 22, 2019, 11:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X