டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் கார்கள், டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கி வருகின்றன. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ஹாரியர் எஸ்யூவி காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. அதன்பின் ஒவ்வொரு மாதமும் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் விற்பனை படிப்படியாக அதிகரித்து கொண்டே வருகிறது.

டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

தற்போது இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி கார்களில் ஒன்றாக டாடா ஹாரியர் உருவெடுத்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு மார்ச் மாத விற்பனையில் தனது போட்டியாளர்களான மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களை டாடா ஹாரியர் வீழ்த்தியது.

டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

இதன் மூலம் ஹூண்டாய் கிரெட்டாவிற்கு பிறகு மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது எஸ்யூவி கார் என்ற பெருமையை டாடா ஹாரியர் பெற்றது. இந்த சூழலில் கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் மாத விற்பனையிலும் டாடா ஹாரியர் அசத்தியுள்ளது.

டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 2,075 டாடா ஹாரியர் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதே சமயம் கடந்த ஏப்ரலில் 1,508 மஹிந்திரா எக்ஸ்யூவி500 கார்களும், 1,204 ஜீப் காம்பஸ் கார்களும் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளன.

டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

இதன் மூலம் மார்க்கெட்டில் அதிகம் விற்பனையாகும் இரண்டாவது எஸ்யூவி என்ற பெருமையை டாடா ஹாரியர் தக்க வைத்து கொண்டுள்ளது. முதல் இடத்தில் ஹூண்டாய் கிரெட்டா எஸ்யூவி (10,487 யூனிட்கள் விற்பனை) உள்ளது.

டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

பிரம்மாண்டமான தோற்றம், மிக சவாலான விலை ஆகிய காரணங்களால்தான் டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் புகழ் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. டாடா ஹாரியர் காரின் ஆரம்ப விலை 12.69 லட்ச ரூபாய் ஆகும்.

டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

இது மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் ஆரம்ப விலையை காட்டிலும் சுமார் 18 ஆயிரம் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரின் ஆரம்ப விலை 12.88 லட்ச ரூபாய். மறுபக்கம் ஜீப் காம்பஸ் காரின் ஆரம்ப விலை 15.60 லட்ச ரூபாயாக உள்ளது.

டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

மேற்கண்டவை அனைத்தும் டெல்லி எக்ஸ் ஷோரூம் விலையாகும். டைமன்சன் என எடுத்து கொண்டால், மற்ற அனைத்து போட்டியாளர்களை காட்டிலும் டாடா ஹாரியர் நீளமானதாக உள்ளது. அத்துடன் நீளமான வீல் பேஸையும் கொண்டுள்ளது.

டாடா ஹாரியரிடம் மீண்டும் மீண்டும் அடி வாங்கும் மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ்...

டாடா ஹாரியர் எஸ்யூவி காரின் நீளம் 4,598 மிமீ. வீல் பேஸ் 2,741 மிமீ. அதாவது ஜீப் காம்பஸ் காரை காட்டிலும் 105 மிமீ-யும், மஹிந்திரா எக்ஸ்யூவி500 காரை காட்டிலும் 41 மிமீ-யும் நீளமானது. ஆனால் டாடா ஹாரியர் காரில், ஒரே ஒரு இன்ஜின் ஆப்ஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. இது 2.0 லிட்டர் டீசல் இன்ஜின் ஆகும். இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதில், 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, May 7, 2019, 21:22 [IST]
English summary
Tata Harrier Sales In April 2019 — Beats Competition Two Months In A Row. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+