டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

வாடிக்கையாளர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும், டாடா ஹாரியர் எஸ்யூவியின் ஆட்டோமேட்டிக் மாடல் எப்போது அறிமுகம் செய்யப்பட இருக்கிறது என்ற தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

கடந்த ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவி துவக்கத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. ஆனால், அண்மையில் வந்த எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் கார்கள் வருகையால் டாடா ஹாரியர் விற்பனை பாதிக்கப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

இந்த நிலையில், டாடா ஹாரியர் எஸ்யூவியானது தற்போது மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், ஆட்டோமேட்டிக் மாடல் வருகையை வாடிக்கையாளர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

அவர்களது எதிர்பார்ப்பு மிக விரைவில் நனவாகும் என்று தெரிகிறது. தற்போது கிடைத்திருக்கும் தகவலின்படி, டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடலானது அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

டாடா ஹாரியர் காரில் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் கொடுக்கப்பட இருக்கிறது. இந்த ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஹூண்டாய் கார் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

டாடா ஹாரியர் கார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி-8 எஸ்யூவி பிளாட்ஃபார்மின் அடிப்படையிலான ஒமேகா ஆர்க் பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழியில் வடிவமைக்கப்பட்ட முதல் கார் மாடல் என்பதுடன் பல்வேறு சிறப்பு அம்சங்களையும் பெற்றிருக்கிறது.

டாடா ஹாரியர் ஆட்டோமேட்டிக் மாடல் அறிமுக விபரம்!

டாடா ஹாரியர் மேனுவல் கியர்பாக்ஸ் மாடலைவிடை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடலின் விலை ரூ.1 லட்சம் வரை கூடுதலாக நிர்ணயிக்கப்படும் வாய்ப்புள்ளது. எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ், ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய மாடல்களுக்கு போட்டியாக இருக்கும். இதன் 7 சீட்டர் மாடலானது ஹசினி என்ற பெயரில் அடுத்த ஆண்டு துவக்கத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.

Source: Overdrive

Most Read Articles
English summary
According to a report, Tata Motors is planning to launch the Harrier automatic model by February next year.
Story first published: Wednesday, November 6, 2019, 12:15 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X