கருஞ்சிறுத்தை போல வரும் புதிய டாடா ஹாரியர்... வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல்!

கடந்த ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. எனினும், புதிய எம்ஜி ஹெக்டர் மற்றும் கியா செல்டோஸ் போன்ற மாடல்களால் கடுமையான சந்தைப் போட்டியை எதிர்கொண்டுள்ளது. இதனை தவிர்க்கும் விதமாக, பல்வேறு அப்டேட்டுகளை ஹாரியர் எஸ்யூவியில் கொடுத்து வருகிறது டாடா மோட்டார்ஸ்.

கருஞ்சிறுத்தை போல வரும் புதிய டாடா ஹாரியர்... வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல்!

இந்த நிலையில், பண்டிகை காலத்தில் கார் வாங்க திட்டமிட்டிருப்போரின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், முழுவதுமான கருப்பு வண்ண தேர்வில் ஹாரியர் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

கருஞ்சிறுத்தை போல வரும் புதிய டாடா ஹாரியர்... வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல்!

ஆல் பிளாக் எடிசன் மாடலாக வரும் இந்த காரின் வெளிப்புறம் மற்றும் உட்புறம் என அனைத்திலுமே கருப்பு வண்ணமும், கருப்பு வண்ண பாகங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பார்ப்பதற்கு கருஞ்சிறுத்தை போல தோன்றும் இந்த புதிய வண்ணத் தேர்வு வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கருஞ்சிறுத்தை போல வரும் புதிய டாடா ஹாரியர்... வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல்!

அடுத்த மாதம் இந்த ஆல் பிளாக் எடிசன் டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. வெளிப்புறத்தில் 17 அங்குல அலாய் வீல்கள், ஸ்கிட் பிளேட் ஆகியவை உள்பட அனைத்து பாகங்களுமே கருப்பு வண்ணத்தில் காட்சி தருகிறது.

கருஞ்சிறுத்தை போல வரும் புதிய டாடா ஹாரியர்... வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல்!

அதேபோன்று, உட்புறத்தில் டேஷ்போர்டு, இருக்கைகள் என அனைத்துமே கருப்பு வண்ணத்தில் கொடுக்கப்பட்டு இருக்கின்றன. அதேநேரத்தில், க்ரோம் பட்டைகள், டோர் பேடுகள் மற்றும் ஏசி வென்ட் அலங்காரங்கள் ஆகியவை மட்டும் அழகை கூட்டுவதற்காக சேர்க்கப்பட்டு இருக்கிறது.

கருஞ்சிறுத்தை போல வரும் புதிய டாடா ஹாரியர்... வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல்!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

டாடா ஹாரியர் எஸ்யூவியானது அட்லஸ் பிளாக், காலிஸ்டோ காப்பர், தெர்மிஸ்டோ கோல்டு, ஆர்கஸ் ஒயிட், டெலிஸ்டோ க்ரே மற்றும் ஏரியல் சில்வர் ஆகிய 6 வண்ணங்களில் கிடைக்கிறது. இதுதவிர்த்து, கருப்பு வண்ணத் தேர்விலும் வர இருக்கிறது.

கருஞ்சிறுத்தை போல வரும் புதிய டாடா ஹாரியர்... வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல்!

வேறு எந்த தொழில்நுட்ப மாற்றங்கள் இல்லை. இந்த காரில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரை வெளிப்படுத்தும் திறன் கொண்டதாக இருக்கும். மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைக்கிறது.

கருஞ்சிறுத்தை போல வரும் புதிய டாடா ஹாரியர்... வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல்!

எனினும், பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்படும்போது, இந்த எஞ்சின் 170 பிஎச்பி பவரை அளிக்கும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. அத்துடன், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வும் எதிர்பார்க்கப்படுகிறது.

கருஞ்சிறுத்தை போல வரும் புதிய டாடா ஹாரியர்... வாடிக்கையாளர்கள் மத்தியில் ஆவல்!

டாடா ஹாரியர் எஸ்யூவி ரூ.13 லட்சம் முதல் ரூ.16.76 லட்சம் வரையிலான விலையில் விற்பனை செய்யப்படுகிறது. எம்ஜி ஹெக்டர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ், ஹூண்டாய் க்ரெட்டா ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் விலையிலும், ரகத்திலும் போட்டியிடுகிறது.

Source: Autocarindia

Most Read Articles

English summary
Tata Motors is one of the few manufacturers that keeps updating and upgrading the very successful Harrier SUV. The company tries to implement almost all customer feedback, and in an attempt to stay in the game, they're ready to launch an all-black edition of the Harrier.
Story first published: Wednesday, July 31, 2019, 13:31 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X