டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

முழுக்க முழுக்க கருப்பு வண்ணத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த எஸ்யூவியின் சிறப்பம்சங்கள் உள்ளிட்ட முக்கிய விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

பண்டிகை காலத்தில் கார் விற்பனை கணிசமாக உயரும். இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்வதற்கு அனைத்து கார் நிறுவனங்களுமே, புதிய மாடல்களையும், ஸ்பெஷல் எடிசன் மாடல்களையும் அறிமுகம் செய்வது வழக்கம். அந்த வகையில், எம்ஜி ஹெக்டர், கியா செல்டோஸ் கார்களால் கடும் நெருக்கடியில் இருக்கும், டாடா ஹாரியர் எஸ்யூவியில் புதிய வண்ணத் தேர்வு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் முழுவதும் கருப்பு வண்ணத்தில் காட்சி அளிக்கிறது. இதனால், இந்த காருக்கு ஹாரியர் டார்க் எடிசன் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடலானது விலை உயர்ந்த XZ தேர்வில் மட்டுமே வந்துள்ளது. மேலும், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் XZ வேரியண்ட்டிற்கான அதே ரூ.16.76 லட்சம் என்ற எக்ஸ்ஷோரூம் விலையிலேயே விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

வெளிப்புறத்தில் பார்ப்பதற்கு கருஞ்சிறுத்தை போன்று முரட்டுத்தனமாக காட்சி அளிக்கிறது. க்ரில், பம்பர், ஸ்கிட் பிளேட்டுகள், 17 அங்குல அலாய் வீல்கள் என அனைத்துமே கருப்பு வணம்ணத்தில் கொடுக்கப்பட்டுள்ளன. ஹெட்லைட்டில் மட்டும் சாம்பல் வண்ண அலங்கார ஆக்சஸெரீகள் இடம்பெற்றுள்ளன. முன்புற ஃபென்டரில் டார்க் என்ற ஸ்பெஷல் எடிசன் பேட்ஜ் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

வெளிப்புறத்தை போன்றே, உட்புறத்திலும் முழுக்க முழுக்க கருப்பு வண்ண இன்டீரியர் தீம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. டேஷ்போர்டில் விசேஷமான அலங்காரம் இடம்பெற்றிருப்பது இதற்கு மதிப்பு கூட்டுகிறது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

கான்ட்ராஸ்ட் தையலுடன் கூடிய கருப்பு வண்ண லெதர் இருக்கைகள் இந்த காரை மிக பிரிமீயமாக காட்டுகிறது. உட்புற கதவு கைப்பிடிகளில் விசேஷமான லெதர் ஃபினிஷ் செய்யப்பட்டு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. சாதாரண எக்ஸ்இசட் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வசதிகளும், சிறப்பம்சங்களும் இதிலும் இடம்பெற்றிருக்கிறது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

டாடா ஹாரியர் டார்க் எடிசனில் வேறு எந்த தொழில்நுட்ப மாற்றங்களும் இல்லை. இந்த காரில் 2.0 லிட்டர் க்ரையோடெக் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 140 எச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இதனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் விரைவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக இந்த 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மேம்படுத்தப்பட்டு வர இருக்கிறது. அப்போது இந்த எஞ்சின் 170 எச்பி பவரை வெளிப்படுத்தும் விதத்தில் ட்யூனிங் செய்யப்பட்டு இருக்கும்.

டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்தது... விபரம்!

பண்டிகை காலத்தில் மிட்சைஸ் எஸ்யூவி வாங்க திட்டமிட்டு இருப்போருக்கு புதிய டாடா ஹாரியர் டார்க் எடிசன் மாடல் நிச்சயம் கூடுதல் மதிப்புடன் சிறந்த தேர்வாக அமையும். எம்ஜி ஹெக்டர், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஜீப் காம்பஸ் கார்களுடன் போட்டி போடுகிறது.

More from DriveSpark

Article Published On: Saturday, August 31, 2019, 10:30 [IST]
English summary
Tata has launched the Harrier Dark Edition, with prices starting at Rs 16.76 lakh for the top-spec XZ variant (ex-showroom, Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+