டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே வசதி அறிமுகம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் கூடுதல் வசதி அளிக்கப்படுகிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே வசதி அறிமுகம்!

கடந்த ஜனவரியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவி மிக சவாலான விலையில் விற்பனைக்கு களமிறக்கப்பட்டது. இதனால், இதன் ரகத்தில் கொடுக்கும் பணத்திற்கு மிகவும் மதிப்பு வாய்ந்த மாடலாக வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே வசதி அறிமுகம்!

எனினும், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வு, சன்ரூஃப் மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதிகள் இல்லை என்பது பெரும் குறையாகவும், ஏமாற்றமாகவும் பார்க்கப்பட்டு வருகிறது. இந்த குறைகளை ஒவ்வொன்றாக போக்கும் முயற்சியில் டாடா மோட்டார்ஸ் இறங்கி இருக்கிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே வசதி அறிமுகம்!

அதன்படி, டாடா ஹாரியர் எஸ்யூவியின் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டமானது இனி ஆப்பிள் கார் ப்ளே செயலியையும் சப்போர்ட் செய்யும் அப்டேட் அளிக்கப்படுகிறது. டாடா டீலர்களில் இந்த அப்டேட் செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால், ஆப்பிள் சாதனங்களை பயன்படுத்தும் டாடா ஹாரியர் உரிமையாளர்களுக்கு இது சிறந்த வசதியாக அமையும்.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே வசதி அறிமுகம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் எக்ஸ்டி வேரியண்ட்டில் அளிக்கப்படும் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் மற்றும் எக்ஸ்இசட் வேரியண்ட்டில் அளிக்கப்படும் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் என இரண்டிற்கும் இந்த அப்டேட் வழங்கப்படுகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே வசதி அறிமுகம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் எக்ஸ்டி வேரியண்ட் ரூ.14.96 லட்சத்திலும், எக்ஸ்இசட் வேரியண்ட் ரூ.16.3 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் கிடைக்கிறது. பேஸ் மாடல்களில் இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் வசதி அளிக்கப்படவில்லை.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே வசதி அறிமுகம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே அப்டேட்டை தொடர்ந்து, விரைவில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது ஹூண்டாய் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆப்பிள் கார் ப்ளே வசதி அறிமுகம்!

இதுதவிர, வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

Most Read Articles
English summary
According to AutoCarIndia, Tata has now given the Harrier it's first official update. The mid-spec variant called the Harrier XT and the top-spec Harrier XZ now feature touchscreen infotainment systems that are Android Auto and Apple CarPlay compatible. The software update will happen at dealer levels across the country.
Story first published: Friday, May 3, 2019, 14:35 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X