டாடா ஹாரியர் கார் உரிமையாளரின் மகிழ்ச்சிக்கு காரணம் இதுதான்: வாயை பிளக்க வைக்கும் முதல் சர்வீஸ் பில்
டாடா ஹாரியர் காருக்கு வழங்கப்பட்ட இலவச அப்டேட் குறித்த பில் மற்றும் அதுகுறித்த தகவலை வாடிக்கையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளர். இதுகுறித்த சிறப்பு தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடா நிறுவனத்தின் பல தயாரிப்புகள் புகழ்வாய்ந்ததாக இருக்கின்றன. அதிலும், அதிக சிறப்பு கொண்டதாக வருடத்தின் ஆரம்பத்தில் விற்பனைக்கு அறிமுகமான டாடா ஹாரியர் எஸ்யூவி ரக கார் இருக்கின்றது.

டாடாவின் பெரும்பாலான தயாரிப்பிற்கு நமது இந்தியச் சந்தையில் அதிக வரவேற்பு உண்டு. ஆனால், இந்த டாடா ஹாரியர் காருக்கு முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு டிமாண்ட் நிலவி வருவதாக முன்னதாக வெளியாகிய செய்திகள் நமக்கு தகவல் தெரிவிக்கின்றன.
இத்தகைய சிறப்பு வாய்ந்த காரை வாங்கிய ஒருவர், அதன் முதல் சர்வீஸ் பில் குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அதுகுறித்த தகவலை தான் இங்கு நாம் பார்க்கவிருக்கின்றோம்.

சர்வீஸ் பில்லில் என்ன சிறப்பு இருக்கு அதை ஏன் இங்கு பார்க்க வேண்டும் என்று தானே கேட்கிறீர்கள்.... அப்படி கேட்பவர்களுக்கான பதில்தான் கீழே உள்ளது. அதேசமயம், அந்த தகவலை படித்தால் நிச்சயம் நீங்களே வாயை பிளப்பீர்கள். அந்தவகையில் வாயைப்பிளந்த வாடிக்கையாளரில் ஒருவர்தான் அந்த பிள்ளை இங்கு பதிவிட்டுள்ளார்.

இந்த பில் குறித்த தகவலை நாம் பார்ப்பதற்கு முன்னதாக, ஓர் சிறிய தகவல் இங்கே.... அது, டாடா நிறுவனம், எப்போதுமே கஸ்டமர்களின் குறைகளுக்கு உடனடி குறல் கொடுக்கும் நிறுவனமாக விளங்கி வருகின்றது. அந்தவகையில், முன்னதாக விற்பனைச் செய்யப்பட்ட சில மாடல் கார்களில், குறை இருப்பதாக கண்டறிந்த, அந்த கார்களின் உரிமையாளர்கள் சர்வீஸின் புகாராக தெரிவித்து வந்தனர்.

அதே புகாரை மேலும் சில வாடிக்கையாளர்களும் கொடுத்ததைத் தொடர்ந்து, டாடா நிறுவனம் உடனடியாக, அவர்களின் குறையைத் தீர்க்கும் விதமாக, பாதிக்கப்பட்ட கார்களை திரும்பி வருமாறு அழைப்பு விடுத்து, அவற்றை இலவசமாக அப்டேட் செய்து கொடுத்தது. இவ்வாறு, ஒரு முறை அல்ல பலமுறை வாடிக்கையாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதில் டாடா நிறுவனம் ஐந்து நட்சத்திரம் பெற்ற நிறுவனமாக இருந்து வருகின்றது.

அந்தவகையிலான, ஓர் நடவடிக்கையைத்தான் தற்போது டாடா நிறுவனம், இந்த ஹாரியர் காரில் செய்திருக்கின்றது. அத்துடன், இந்த அப்டேட்டுகளை அதன் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் டாடா நிறுவனம், மிகவும் அமைதியான முறையில் இலவசமாக வழங்கி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

இந்த நடவடிக்கையின்மூலம், இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டத்திற்கான சாப்ஃட்வேர் அப்டேட், ஸ்டியரிங் வீல் மெக்கானிஸம் மாற்றியமைத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இத்துடன், அதிக திறன் கொண்ட மற்றும் சாஃப்ட் டச்சிற்கு ஏதுவாக அதன் க்ளட்ச் பேட்டிற்கு அப்டேட் வழங்கப்படுகின்றது.

இத்தகைய அப்டேட்டுகளை இலவசமாக பெற்றதற்கான பில்லைதான், டாடா ஹாரியர் காரின் உரிமையாளர் உத்சவ் ஷர்மா வெளியிட்டுள்ளார். இதனை நீங்கள் கீழே காணலாம். மேலும் இதுகுறித்த தகவலை ரஷ்லேன் ஆங்கில தளம் இதுகுறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

முன்னதாக நாம் கூறியதைப்போன்றே, இந்த நடவடிக்கையை, அதன் வாடிக்கையாளர்கள் சிலர் அளித்த புகாரைத் தொடர்ந்தே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இதனடிப்படையிலேயே பெரும் விலையிலான பாகங்களை, இலவசமாக வழங்கியுள்ளது.

அந்தவகையில், தற்போது டாடா நிறுவனம் இலவசமாக அப்டேட் செய்திருக்கும் கிளட்ச் பெடல் ஸ்பிரிங்கின் விலை மட்டுமே ரூ. 15 ஆயிரம் ஆகும். இதனை ஜிஎஸ்டி சேர்த்து வாங்கினால், ரூ. 17.5 ஆயிரம் என்ற விலையைப் பெறுகின்றது. இத்தகைய மதிப்பிலான பொருளை டாடா நிறுவனம், அதன் வாடிக்கையாளர்கள் திருப்திக்காக இலவசமாக வழங்கியுள்ளது.

டாடா நிறுவனத்தின் இந்த ஹாரியருக்கு அதிக வரவேற்பு கிடைக்க அதன் ஸ்டைல் மற்றும் 2.0 டிசைனே முக்கிய காரணமாக இருக்கின்றது. இதற்காக, இந்த காரை அந்நிறுவனம் லேண்ட் ரோவர் டி8 ஆர்க்கிடெக்சரில் உருவாக்கியுள்ளது.

இந்த ஹாரியர் எஸ்யூவி காரில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 140 பிஎச்பி பவரையும், 350என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இயங்குகின்றது.
அதேசமயம் இந்த கார், எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸஇசட் ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

டாடா நிறுவனம் சமீபத்தில்தான் இந்த காரின் விலையை அதிரடியாக உயர்த்தியது. அந்தவகையில், ரூ. 31 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் வரையிலான விலை உயர்வை ஹாரியர் கார் பெற்றுள்ளது. இதனால், ரூ. 12.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட ஹாரியரின் ஆரம்ப நிலை கார் தற்போது ரூ. 12.99 லட்சம் என்ற புதிய விலையில் விற்பனைச் செய்யப்பட்டு வருகின்றது. இவ்வாறு, இந்த வரிசையில் இருக்கும் அனைத்து வேரியண்டுகளும் புதிய விலை உயர்வைப் பெற்றிருக்கின்றன.


Click it and Unblock the Notifications