டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

அப்டேட்: கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவல், அதிகாரப்பூர்வமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திடம் இருந்து பெறப்பட்டது. இது, அண்மையில் டாக்ஸி காரின் தோற்றத்தில் ஸ்பை செய்யப்பட்ட டாடா ஹாரியர் குறித்த தகவல் ஆகும்.

அந்தவகையில் டாடா நிறுவனம் கூறியதாவது, "கீழே காட்சிக்குள்ளாகி இருக்கும் டாடா ஹாரியர் கார், ஓர் செல்ஃப் -டிரைவிங் நிறுவனம் வாங்கப்பட்டுள்ளது. இதனை போக்குவரத்து விதியின்படி, டாக்ஸி பர்மிட்டில் பதிவு செய்ய அந்நிறுவனம் விண்ணப்பித்துள்ளது. செல்ஃப் டிரைவிங்கிற்கு காரை பதிவு செய்ய இதுவே வழியாகும். இதுபோன்ற விண்ணப்பத்தைத்தான், கீழே மஞ்சள் எழுத்துடன் கூடிய நம்பர் பிளேட்டில் காட்சியளித்திருக்கும் ஹாரியர் செய்துள்ளது".

டாடா நிறுவனத்தின் புகழ்வாய்ந்த மாடல்களில் ஒன்றானா ஹாரியர், வாடகை டாக்ஸி சேவையில் களமிறக்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

இந்திய நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவானான டாடா மோட்டார்ஸ் நிறுவனம், பட்ஜெட் ரக வாகனங்களை தயாரிப்பதில் தலை சிறந்து விளங்கி வருகின்றது. அந்தவகையில், பல்வேறு வாகனங்களை இந்திய சந்தையில் அந்த நிறுவனம் களமிறக்கியுள்ளது.

ஆகையால், கால் டாக்ஸி துறையில் இயங்கி வரும் பெரும்பாலான வாகனங்கள், டாடா நிறுவனத்தின் தயாரிப்புகளாகவே இருக்கின்றன.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

அந்தவகையில், சில மாதங்களுக்கு முன்பு டாடா நிறுவனம் அறிமுகம் செய்த டாடா ஹாரியர் எஸ்யூவி ரக கார், டாக்ஸி சேவையில் பயன்படுத்துவது குறித்த புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதுகுறித்த புகைப்படம் மற்றும் தகவலை ஆங்கில ஊடகமான டீம் பிஎச்பி வெளியிட்டுள்ளது. இதில், டாடா ஹாரியர் கார், மஞ்சள் நிற பதிவெண்ணுடன் சாலையில் பயணிப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

தற்போது ஸ்பை செய்யப்பட்டிருக்கும் இந்த கார்தான் இந்தியாவின் முதல் டாக்ஸி சேவையில் களமிறங்கியிருக்கும் டாடா ஹாரியர் கார் என கூறப்படுகின்றது. இதனை, புகழ்வாய்ந்த ஓரிக்ஸ் எனும் டாக்ஸி சேவை நிறுவனம், வாடகைக்காக வாங்கியிருப்பது தெரியவந்துள்ளது. மேலும், இந்தியாவின் முதல் டாக்ஸி ஹாரியர் தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் இயக்கப்பட்டு வருகின்றது.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

ஓரிக்ஸ் நிறுவனம், செல்ஃப் டிரைவ் மற்றும் டாக்ஸி சேவையில் கார்களை வாடகைக்கு வருகின்றது. அந்தவகையில், இந்நிறுவனம் டொயோட்டா இடியோஸ் முதல் உயர்தர வாகனங்களான பிஎம்டபிள்யூ 5 செரீஸ் மற்றும் மெர்சிடிஸ் பென்ஸ் வரையிலான கார்களை வாடகைக்கு வழங்கி வருகின்றது. இதைத்தொடர்ந்தே, டாடா நிறுவனத்தின் ஹாரியர் காரை இந்த சேவையில் களமிறக்கியுள்ளது.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

தற்போது, ஸ்பை செய்யப்பட்டிருக்கும் ஹாரியர் மட்டுமின்றி இந்த நிறுவனத்தின் கூடுதலான ஹாரியர் கார்கள் வாங்கப்பட்டுள்ளன. இருப்பினும், புகைப்படத்தில் காட்சியளிக்கும் ஹாரியரே அதன் முதல் மஞ்சள் நிற நம்பர் பிளேட் கொண்ட காராக இருக்கின்றது. மேலும், காட்சிக்குள்ளாகியிருக்கும் ஹாரியர், எக்ஸ் எம் வேரியண்டாகும். இது, கடைநிலை மாடலான எக்ஸ்இ வேரியண்டிற்கு மேலே இருக்கின்றது.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

ஓரிக்ஸ் நிறுவனத்தைத்தொடர்ந்து, ஜூம் கார் மற்றும் டிரைவர்ஸி உள்ளிட்ட டாக்ஸி சேவை நிறுவனங்களும் டாடா ஹாரியர் எஸ்யூவி காரை செல்ஃப் ரைடிங் சேவையில் வாடகைக்கு வழங்கவிருப்பதாக தெரிவித்துள்ளது. அவ்வாறு, இந்த காரை வரும் மாதங்களில் அந்த நிறுவனங்கள் அறிமுகம் செய்ய இருப்பதா தகவல் வெளியாகியுள்ளன.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அண்மையில்தான் இந்த ஹாரியர் எஸ்யூவி மாடலை ட்யூவல் டோன் ஆப்ஷனில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருந்தது. அந்தவகையில், ஆர்கஸ் ஒயிட் மற்றும் கலிஸ்டோ காப்பர் ஆகிய த தேர்வுகளில் ஹாரியர் எஸ்யூவி கார் தற்போது கிடைக்கின்றது.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

இதற்கு முன்னதாக, அந்நிறுவனம் ஹாரியர் காரின் விலை அதிரடியாக உயர்த்தி அறிவித்திருந்தது. அந்தவகையில், ரூ. 12.69 லட்சம் என்ற ஆரம்ப விலையில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் விலை மீது, ரூ. 35 ஆயிரம் உயர்தப்பட்டது. ஆகையால், விலை குறைவான மாடலாக இருந்த எக்ஸ்இ ஆரம்பநிலைய வேரியண்டின் விலை ரூ. 13 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்தது. தொடர்ந்து, இதற்கு அடுத்தபடியாக இருக்கும் எக்ஸ்எம் வேரிண்டின் விலை ரூ. 14.6 லட்சமாக உயர்ந்தது.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

இவ்வாறு, ஹாரியர் எஸ்யூவி மாடலின் அனைத்து வேரியண்ட்களும் ரூ. 31 ஆயிரம் முதல் ரூ. 35 ஆயிரம் விலை உயர்வைப் பெற்றுள்ளது. டாடா நிறுவனத்தின் இந்த புதிய மாடல் ஹாரியர் எஸ்யூவி-யில், ஃபியட் நிறுவனத்தின் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது 138பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறன் கொண்டது.

டாக்ஸி துறையில் கலக்கும் ஹாரியர்... இந்தியாவின் முதல் டாக்ஸி டாடா ஹாரியரின் புகைப்படம் கசிந்தன...

மேலும், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இல்லை.

இத்துடன், இந்த காரில் ஒரே புஷ்ஷில் வாகனத்தை ஸ்டார்ட்-ஸ்டாப் செய்யும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்று விதமான டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

Most Read Articles
English summary
Tata Harrier Hits The Taxi Service In India. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X