ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

போட்டியாளர்களுக்கு மிக சவாலான விலையில், புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. முழுமையான தகவல்களை தொடர்ந்து காணலாம்.

ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

கடந்த ஆண்டு நடந்த சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில், டாடா எச்5எக்ஸ் என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்த எஸ்யூவி கான்செப்ட்தான் இப்போது டாடா ஹாரியர் என்ற பெயரில் தயாரிப்பு நிலை மாடலாக வந்துள்ளது. இந்த புதிய எஸ்யூவி கார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் டி-8 பிளாட்ஃபார்மின் அடிப்படையிலான ஒமேகா பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்டு இருக்கிறது.

ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி 4,598 மிமீ நீளமும், 1,894 மிமீ அகலமும்,1,706 மிமீ உயரமும் கொண்டுள்ளது. அதேபோன்று, 2,741 மிமீ வீல் பேஸ் பெற்றிருக்கிறது. 5 சீட்டர் மாடலாக வந்திருக்கும் இந்த எஸ்யூவி சிறப்பான உட்புற இடவசதியை அளிக்கும். இந்த காரில் 425 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதி உள்ளது. 50 லிட்டர்கள் கொள்ளளவு உடைய பெட்ரோல் டேங்க் உள்ளது.

ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போ டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் 2 வீல் டிரைவ் சிஸ்டத்தில் மட்டுமே வந்துள்ளது.

ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

அதேநேரத்தில், டெர்ரெயின் ரெஸ்பான்ஸ் சிஸ்டம் இடம்பெற்றுள்ளது. மேலும், சிட்டி, ஸ்போர்ட் மற்றும் ஈக்கோ ஆகிய மூன்று டிரைவிங் மோடுகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 8.8 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. ஜேபில் நிறுவனத்தின் 9 ஸ்பீக்கர்கள் கொண்ட மியூசிக் சிஸ்டம் உள்ளது. இந்த இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ ஆகிய செயலிகளையும், ஸ்மார்ட்போன் மிரர் லிங்க் இணைப்பு வசதியையும் வழங்கும்.

ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

இந்த காரில் மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், ஆட்டோமேட்டிக் க்ளைமட் கன்ட்ரோல் ஏசி, ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள், க்ரூஸ் கன்ட்ரோல், ஓட்டுனர் இருக்கைய அட்ஜெஸ்ட் செய்து கொள்ளும் வசதி, 7.0 அங்குல திரையுடன் கூடிய செமி டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் உள்ளிட்ட வசதிகள் உள்ளன.

ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் 6 ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஹில் ஹோல்டு மற்றும் டிசென்ட் அசிஸ்ட், ரோல்ஓவர் மிட்டிகேஷன், கார்னர் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல், எலெக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி புரோகிராம் மற்றும் எலெக்ட்ரானிக் டிராக்ஷன் கன்ட்ரோல் சிஸ்டம் ஆகிய பாதுகாப்பு அம்சங்களும் உள்ளன.

ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியானது ரூ.12.69 லட்சம் முதல் ரூ.16.25 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கும். புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி XE, XM, XT மற்றும் XZ ஆகிய நான்கு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

ரூ.12.69 லட்சத்தில் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம்!

ஹூண்டாய் க்ரெட்டா, ஜீப் காம்பஸ், மஹிந்திரா எக்ஸ்யூவி500 ஆகிய எஸ்யூவி மாடல்களுடன் விலை மற்றும் ரகத்தின் அடிப்படையில் போட்டி போடுகிறது. இந்த ஆண்டிலேயே இதன் 7 சீட்டர் மாடலும் விற்பனைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Wednesday, January 23, 2019, 14:03 [IST]
English summary
New Tata Harrier launched in India.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+