விற்பனையில் ஒன்றாக மோதவரும் டாட்டா மற்றும் மாருதி...!!!

இந்தியாவில் புகழ்பெற்ற இரண்டு கார் நிறுவங்களான டாட்டா மற்றும் மாருதி கார்கள் நாளை விற்பனைக்கு ஒன்றாக களம் இறங்குகின்றன. இது குறித்த கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

விற்பனையில் ஒன்றாக மோதவரும் டாட்டா மற்றும் மாருதி...!!!

டாட்டா நிறுவனம் தனது தயாரிப்பான டாடா ஹாரியர் எஸ்யூவி காரையும், மாருதி நிறுவனம் புதிய மாருதி வேகன் ஆர் காரையும் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. இரண்டு எதிர் நிறுவனங்கள் ஒன்றாக தனது காரர்களை அறிமுகம் செய்வது மக்களிடையே விறுவிறுப்பை ஏற்படுத்தியுள்ளது.

விற்பனையில் ஒன்றாக மோதவரும் டாட்டா மற்றும் மாருதி...!!!

லேண்ட்ரோவர் டிஸ்கவரி எஸ்யூவி டிசைனை மையமாக வைத்து உருவாக்கப்பட்டது டாடா ஹாரியர் எஸ்யூவி. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் கொாள்கையில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடல் ஹாரியர் எஸ்யூவி என்பதும் குறிப்பிடத்தக்கது. ஹாரியர் எஸ்யூவி 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர்களில் விற்பனைக்கு வருகிறது.

விற்பனையில் ஒன்றாக மோதவரும் டாட்டா மற்றும் மாருதி...!!!

டாடா ஹாரியரின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 140 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது. ஹூண்டாய் மோட்டார்ஸின் 6 ஸ்பீடு கியர்பாக்ஸ் இதில் இணைக்கப்பட்டு இருக்கிறது. புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியில் மேம்படுத்தப்பட்ட பிரிமியம் ஆடியோ சிஸ்டம், இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மற்றும் உயர்தரமான அப்ஹோல்ஸ்ட்ரி போன்றவை இடம்பெற்றிருக்கும்.

MOST READ: வாடிக்கையாளர் சேவையை வேற லெவலுக்கு மாற்றிய மாருதி அரேனா கார் ஷோரூம்கள்...!!

விற்பனையில் ஒன்றாக மோதவரும் டாட்டா மற்றும் மாருதி...!!!

மாருதி நிறுவனத்தின் ஸ்விப்ட் காரை அடுத்து மாருதியில் அதிக விற்பனையாகும் கார் மாருதி வேகன் ஆர். டால் பாய் டிசைனில் வெளிவரும் வேகன் ஆர் கார்கள் இந்தியாவில் மாதத்திற்கு சுமார் 13,000 கார்கள் விற்பனையாகின்றன. தற்போது வெளிவரவுள்ள புதிய வேகன் ஆர் அதே டால் பாய் டிசைனுடன் புதிய மேன்படுத்தப்பட்ட அம்சங்களுடன் விற்பனைக்கு வருகிறது.

விற்பனையில் ஒன்றாக மோதவரும் டாட்டா மற்றும் மாருதி...!!!

கார் விற்பனை சந்தையில் நிலவி வரும் கடும் போட்டியை கருத்தில் கொண்டு பல புதிய மாற்றங்களை புதிய வேகன் ஆர் காரில் மாருதி நிறுவனம் கொண்டுவந்துள்ளது. புதிய டெயில் லேம்ப், வீல் கவர் டிசைன் மற்றும் வாடிக்கையார்களை கவரும் வகையில் வெளிப்புற தோற்றத்துடன் வருகிறது.

விற்பனையில் ஒன்றாக மோதவரும் டாட்டா மற்றும் மாருதி...!!!

புதிய மாருதி வேகன் ஆர் காரின் மூன்று சிலிண்டர்கள் கொண்ட 1.0 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 67 பிஎச்பி பவரையும், 90 என்எம் டார்க் திறனையும் வழங்கும். வேகன் ஆர் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாகஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் விற்பனைக்கு வருகிறது.

விற்பனையில் ஒன்றாக மோதவரும் டாட்டா மற்றும் மாருதி...!!!

டாடா ஹாரியர் எஸ்யூவி 16 முதல் 20 லட்சம் ரூபாய் விலைக்கு விற்பனைக்கு வரும் என தெரிகிறது. மேலும் மாருதி வேகன் ஆர் 4.50 முதல் 6 லட்சம் ரூபாய் விலைக்கு விற்பனைக்கு வரும் எனதகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த இரு மாறுபட்ட ரக கார்களுக்கு இடையே விறபனையில் கடும் போட்டி நிலவும் என எதிர்பாக்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, January 22, 2019, 15:35 [IST]
English summary
Tata Harrier Maruti WagonR Launch Tomorrow: Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+