டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் எஞ்சின் குறித்த விபரம் வெளியாகி இருக்கிறது. அதன் விபரங்களை இப்போது பார்க்கலாம்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

கடந்த மாதம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட டாடா ஹாரியர் எஸ்யூவி வாடிக்கையாளர் மத்தியில் மிதமான வரவேற்பை பெற்றிருக்கிறது. புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி டீசல் மாடலில் மட்டுமே வந்துள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

இந்த மாடலில் இருக்கும் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படுகிறது. இந்த சூழலில், விற்பனையை வலுப்படுத்துவதற்காக பெட்ரோல் எஞ்சின் ஆப்ஷனையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்கான திட்டத்தை டாடா மோட்டார்ஸ் கையில் எடுத்துள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

அதன்படி, டாடா ஹாரியர் எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்தப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. இதுகுறித்து ஆட்டோகார் புரோஃபஷனல் தளத்திற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்பப் பிரிவு தலைவர் ராஜேந்திர பெட்கர் பேட்டி அளித்துள்ளார்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

அதில், டாடா ஹாரியர் எஸ்யூவியில் விரைவில் பெட்ரோல் எஞ்சின் தேர்வு வழங்கப்படும். இந்த எஞ்சின் சொந்த தயாரிப்பாகவும் இருக்கலாம் அல்லது எங்களது கூட்டணி நிறுவனத்திடமிருந்து சப்ளை பெறப்படலாம்," என்று கூறி இருக்கிறார்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

மேலும் அவர் கூறுகையில்," தற்போது எங்களது கார் மாடல்களில் பயன்படுத்தப்படும் 3 சிலிண்டகள் கொண்ட 1.2 லிட்டர் ரெவோட்ரான் பெட்ரோல் எஞ்சினை உருவாக்கும்போதே, அதனை 4 சிலிண்டர் எஞ்சினாகவும் மாற்றும் வகையிலேயே வடிவமைத்தோம்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

அதாவது, மோடுலர் பிளாட்ஃபார்ம் என்ற அடிப்படையிலேயே உருவாக்கினோம். இந்த 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சினில் ஒரு சிலிண்டர் சேர்த்து 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினாகவும் உருவாக்குவது குறித்தும் ஆய்வு செய்து வருகிறோம்," என்று கூறி இருக்கிறார்.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

எனவே, டாடா ஹாரியர் எஸ்யூவியில் 1.6 லிட்டர் பெட்ரோல் எஞ்சினை பயன்படுத்துவதற்கு டாடா மோட்டார்ஸ் அதிக முக்கியத்துவம் கொடுத்து வருவதாக தெரிய வந்துள்ளது. இது டர்போசார்ஜர் துணையுடன் இயங்கும் என்றும் உறுதியாகி இருக்கிறது. டாடா ஹாரியர் மட்டுமின்றி, டாடா எச்7எக்ஸ் எஸ்யூவி மாடலிலும் இதே எஞ்சினை ஆப்ஷனை வழங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

மேலும், டாடா ஹாரியர் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் கொடுப்பதையும் ராஜேந்திர பட்கர் உறுதி செய்துள்ளார். இதுவரை கிடைத்த தகவல்களின்படி, ஹூண்டாய் நிறுவனத்திடம் இருந்து சப்ளை பெறப்படும் 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ்தான் டாடா ஹாரியர் மற்றும் எச்7எக்ஸ் ஆகிய எஸ்யூவி மாடல்களில் வழங்கப்படும் என்று தெரிகிறது.

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பெட்ரோல் மாடல் விபரம் கசிந்தது!

தற்போது டாடா ஹாரியர் எஸ்யூவியின் 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் 138 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும் விதத்தில் உள்ளது. மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் மட்டுமே கிடைக்கிறது. டாடா ஹாரியர் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட் ரூ.12.69 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது.

Most Read Articles
English summary
According to media reports, Tata Harrier may get 1.6-ltr petrol engine soon.
Story first published: Thursday, February 28, 2019, 18:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X