வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

டாடா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வந்த சிறப்பம்சத்தை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

டாடா நிறுவனம் நீண்ட எதிர்பார்ப்பில் இருந்த ஹாரியர் எஸ்யூவி ரக காரை, நடப்பாண்டின் ஆரம்பத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. முன்னதாக, இந்த காரை கடந்த 2018ம் ஆண்டு நடைபெற்ற வாகன கணகாட்சியில் அறிமுகம் செய்யப்பட்டது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அப்போது, எச்5எக்ஸ் என்ற பெயரில் அந்த கார் அறிமுகம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்தே, அந்த கார் இந்தியாவில் ஹாரியர் என்ற பெயரில் களமிறக்கப்பட்டது.

அதேசமயம், முன்னதாக கான்செப்ட் மாடலாக அறிமுகம் செய்யப்பட்டபோது, ஹாரியர் காரில் பனோரமிக் சன் ரூஃப் அம்சத்துடன் காட்சியளித்தது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

ஆனால், இந்த கார் உற்பத்தி மாடலாக தயார் செய்யப்பட்டபோது, பனோரமிக் சன்ரூஃப் அம்சம் இடம்பெறவில்லை. இது, ஹாரியர் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. மேலும், இது பல வாடிக்கையாளர்கள் மத்தியில் வருத்தத்தை ஏற்படுத்தியது. அதேசமயம், தற்போதைய காலகட்டத்தில் சன்ரூஃப் அம்சம் என்பது மிகவும் தேவையான துணைப் பொருளாக மாறி வருகின்றது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இதன்காரணமாகவே, அண்மைக் காலங்களாக இந்தியாவில் அறிமுகமான மற்றும் அறிமுகமாக காத்திருக்கும் பல கார்கள் சன்ரூஃப் அம்சத்துடன் தயார் செய்யப்படுகின்றது. அந்தவகையில், ஹூண்டாய் க்ரெட்டா, கியா செல்டோஸ், ஜீப் காம்பஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுக்கு சன்ரூஃப் மற்றும் பனோரமிக் சன்ரூஃப் ஆப்ஷன் வழங்கப்பட்டு வருகின்றது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

யாரிஸ் — மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

ஆனால், டாடா நிறுவனத்தின் ஹாரியர் காரிலே இந்த சிறப்பம்சம் தற்போது வரை இல்லாமல் இருப்பது மிகப் பெரிய குறையாக இருக்கின்றது. ஆகையால், வாடிக்கையாளர்கள் சிலர் இந்த ஆப்ஷனை ஹாரியர் காரில் வழங்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இந்நிலையில், வாடிக்கையாளர்களின் இந்த கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், டாடா நிறுவனம், சன்ரூஃபை அக்ஸசெரீஸாக வழங்க முடிவு செய்துள்ளது. மேலும், அதனை ரூ. 95,066 என்ற விலையில் விற்பனைச் செய்ய அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அதேசமயம், இதனை புதிதாக விற்பனைச் செய்யப்பட உள்ள ஹாரியர் காரில் ஆப்ஷனலாக வழங்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, டாடா நிறுவனத்தின் விநியோகஸ்தர்கள் அதற்கான ஆர்டர்களை ஏற்க தொடங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

டாடா நிறுவனம், இந்த புதிய அக்ஸசெரீஸ் சன்ரூஃபை ரூ. 96,066 என்ற விலையில் விற்பனைச் செய்தாலும், அதனை ஹாரியர் காரில் பொருத்த தனியாக சர்வீஸ் கட்டணம் பெறப்படுகின்றது. இத்துடன், இந்த சன்ரூஃபிற்கு நிறுவப்பட்ட அன்றைய தேதியிலிருந்து இரண்டாண்டுகள் வாரண்டி உத்தரவாதமும் வழங்கப்பட உள்ளது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

டாடா ஹாரியர் காருக்கு அதன் விற்பனை அறிமுகத்திலிருந்தே அமோகமான டிமாண்ட் நிலவி வருகின்றது. அந்தவகையில், இந்த எஸ்யூவி ரக காரின் 10 ஆயிரம் யூனிட்கள் கடந்த காலங்களில் விற்பனைச் செய்யப்பட்டதாக டாடா நிறுவனம் அறிவித்திருந்தது. இது நடப்பாண்டின் இறுதிக்குள் 20 ஆயிரத்திற்கும் அதிமாக உயரலாம் என கூறப்படுகின்றது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இதேபோன்று, அண்மையில் அறிமுகமான எம்ஜி நிறுவனத்தின் ஹெக்டார் விற்பனையில் இமாலய அளவிலான வரவேற்பைப் பெற்று வருகின்றது. அந்தவகையில், விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட இரண்டு மாத காலத்திலேயே ஒரு ஆண்டிற்கான புக்கிங்குகளை இந்த கார் பெற்றிருக்கின்றது. அவ்வாறு, தற்போது வரை 21 ஆயிரம் ஹெக்டார் யூனிட்டுகளுக்கான புக்கிங்கள் பெறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இதன்காரணமாக, எம்ஜி நிறுவனம் ஹெக்டார் காருக்கான புக்கிங்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இதேபோன்று, கடந்த பத்து நாட்களுக்கு முன்பு அறிமுகம் செய்யப்பட்ட கியா நிறுவனம், செல்டோஸ் காருக்கும் வரலாறு காணாத அளவில் புக்கிங்குகள் வழங்கப்பட்டு வருகின்றது. அந்தவகையில், இதுவரை 6 ஆயிரம் செல்டோஸ் காருக்கான புக்கிங்குகள் பெறப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

இதனால், இந்திய எஸ்யூவி கார்களின் சந்தையில் மிகப் பெரிய போட்டி நிலவ ஆரம்பித்துள்ளது. ஆகையால், டாடா நிறுவனம் அண்மைக் காலங்களாக புதிய அப்டேட்டுகளை ஹாரியர் வழங்கி வருகின்றது. அந்தவகையில், சமீபத்தில் ஹாரியர் எஸ்யூவி காரை ட்யூவன் டோன் ஆப்ஷனில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்தே, சன்ரூஃப் ஆப்ஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

மேலும், ஹாரியர் காரை அந்நிறுவனம் 7 சீட்டர் வெர்ஷனிலும் டாடா நிறுவனம் அறிமுகம் செய்ய இருக்கின்றது. இந்த ரகத்திலான காரைதான், அந்நிறுவனம் அண்மைக் காலங்களாக பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றது. இந்த ரகத்திலான ஹாரியரைதான் டாடா முதலில் அறிமுகம் செய்திருந்தது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

தற்போது விற்பனையில் இருக்கும் டாடா ஹாரியர் கார், 2.0 டிசைன் மற்றும் லேண்ட் ரோவர் டி8 ஆர்க்கிடெக்சரில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த ஹாரியர் எஸ்யூவி கார் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்டி மற்றும் எக்ஸஇசட் ஆகிய நான்கு விதமான வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்கின்றது.

வாடிக்கையாளர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்த டாடா... உற்சாகத்தில் ரசிகர்கள்!!

அதேபோன்று, ஹாரியர் கார் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் தேர்வில் மட்டுமே கிடைக்கின்றது. அது, 140 பிஎச்பி பவரையும், 350என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும் திறனைக் கொண்டுள்ளது. இந்த எஞ்ஜின் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸில் இயங்குகின்றது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 30, 2019, 20:19 [IST]
English summary
Tata Harrier Officially Launched Sunroof Rs 95k. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+