விற்பனையில் கெத்து காட்டும் டாடா ஹாரியர்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது

கடந்த ஜூன் மாத விற்பனையில் மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய கார்களை டாடா ஹாரியர் வீழ்த்தியுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

விற்பனையில் கெத்து காட்டும் டாடா ஹாரியர்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் உச்சகட்ட எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த டாடா ஹாரியர் கார் கடந்த ஜனவரி மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. லான்ச் செய்யப்பட்ட உடனேயே இந்திய மார்க்கெட்டில் டாடா ஹாரியர் நன்கு பிரபலமாகி விட்டது. எனவே ஆரம்பம் முதலே அதன் விற்பனை சிறப்பாக இருந்து வருகிறது.

விற்பனையில் கெத்து காட்டும் டாடா ஹாரியர்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது

இது எஸ்யூவி ரக கார் ஆகும். மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் உள்ளிட்ட கார்களுடன் டாடா ஹாரியர் போட்டியிட்டு வருகிறது. இந்த சூழலில் கடந்த ஜூன் மாத விற்பனையில், மஹிந்திரா எக்ஸ்யூவி500 மற்றும் ஜீப் காம்பஸ் ஆகிய இரண்டு போட்டியாளர்களையும் வீழ்த்தி அசத்தியுள்ளது டாடா ஹாரியர். டாடா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் 1,216 ஹாரியர் கார்களை விற்பனை செய்துள்ளது.

விற்பனையில் கெத்து காட்டும் டாடா ஹாரியர்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது

ஆனால் அதே கால கட்டத்தில் மஹிந்திரா நிறுவனத்தால் 1,129 எக்ஸ்யூவி500 கார்களையும், ஜீப் நிறுவனத்தால் வெறும் 791 காம்பஸ் கார்களையும் மட்டுமே இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்ய முடிந்துள்ளது. இந்திய மார்க்கெட்டில் கடந்த சில மாதங்களாக அனைத்து நிறுவனங்களின் கார்கள் விற்பனையும் மந்தமாக இருந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

விற்பனையில் கெத்து காட்டும் டாடா ஹாரியர்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது

இதனிடையே வரும் நாட்களில் இந்த செக்மெண்ட்டில் போட்டி அனல் பறக்க போவது உறுதி. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி மோட்டார் நிறுவனம் சமீபத்தில்தான் ஹெக்டர் எஸ்யூவி காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கு வெறும் 23 நாட்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட முன்பதிவுகள் குவிந்துள்ளன.

விற்பனையில் கெத்து காட்டும் டாடா ஹாரியர்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது

யாரிஸ் - மாருதி சியாஸ் மற்றும் ஹோண்டா சிட்டி கார்களுக்கான டொயோட்டாவின் பதில்! டெஸ்ட் டிரைவ் செய்து பார்க்க வேண்டுமா?

எனவே இந்தியாவின் ஒரு சில நகரங்களில் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவி காருக்கான காத்திருப்பு காலம் 7 மாதங்களை கடந்துள்ளது. எம்ஜி ஹெக்டர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளதால், தற்போது இந்த செக்மெண்ட்டில் உள்ள மற்ற கார்களின் விற்பனை குறைவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.

விற்பனையில் கெத்து காட்டும் டாடா ஹாரியர்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது

இதுதவிர கியா நிறுவனமும் செல்டோஸ் எஸ்யூவி காரை வரும் மாதங்களில் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது. கியா செல்டோஸ் எஸ்யூவி கார், ஹூண்டாய் கிரெட்டா மட்டுமல்லாது, டாடா ஹாரியர், மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட கார்களுடனும் போட்டியிடவுள்ளது.

விற்பனையில் கெத்து காட்டும் டாடா ஹாரியர்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது

டாடா ஹாரியர் எஸ்யூவி காரில், 2.0 லிட்டர் KRYOTEC இன்ஜின் வழங்கப்பட்டுள்ளது. இதே இன்ஜின்தான் இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஜீப் காம்பஸ் மற்றும் எம்ஜி ஹெக்டர் ஆகிய கார்களிலும் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. டாடா ஹாரியர் காரில் இந்த 4-சிலிண்டர், டர்போசார்ஜ்டு டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவர் மற்றும் 350 என்எம் டார்க் திறனை வழங்கவல்லது.

விற்பனையில் கெத்து காட்டும் டாடா ஹாரியர்... மஹிந்திரா எக்ஸ்யூவி500, ஜீப் காம்பஸ் கார்களை வீழ்த்தியது

டாடா நிறுவனம் ஹாரியர் காரில் தற்போதைய நிலையில் 6 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனை மட்டுமே வழங்கி வருகிறது. இதனிடையே டாடா நிறுவனம் டீசல் இன்ஜினை மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு ஏற்ப மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறது. இந்தியாவில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளன. இதுதவிர 6 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷனையும் டாடா நிறுவனம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Tuesday, July 9, 2019, 18:19 [IST]
English summary
Tata Harrier Sales Beat Mahindra XUV500, Jeep Compass In June 2019. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+