மூன்று இருக்கை அமைப்புகளுடன் டாடா ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது புதிய தயாரிப்பு மாடலான ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகப்படுத்த அனைத்து விதங்களிலும் தயாராகி வருகிறது. ஹெரியரின் இந்த 7 இருக்கை வெர்சன் காருக்கு காஸினி என பெயரிட்டுள்ள இந்த நிறுவனம் இந்த காரை சமீபத்தில் மீண்டும் சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தியுள்ளது.

மூன்று இருக்கை அமைப்புகளுடன் டாடா ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

கிட்டத்தட்ட ஹெரியரின் 5 இருக்கை வெர்சனின் தோற்றத்தில் இந்த கார் இருப்பது சோதனை ஓட்ட புகைப்படங்களை வைத்து பார்க்கும்போது தெரிய வருகிறது. இதன் ஓஆர்விஎம் அமைப்பு தற்போதைய ஹெரியர் மாடல் மற்றும் இதுவரை சோதனை ஓட்டத்தில் ஈடுப்படுத்தப்பட்ட அனைத்து காஸினி கார்களை விடவும் சிறிதாகவே காணப்படுகிறது.

மூன்று இருக்கை அமைப்புகளுடன் டாடா ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

இதனால் ஓட்டுனரின் காண முடியாத பகுதியின் அளவு குறைகிறது. ஹெரியரின் இந்த 7 இருக்கை வெர்சனை 2019 செப்டம்பரில் நடைபெற்ற ஜெனிவா மோட்டார் கண்காட்சியில் பஸ்ஸார்ட் என்கிற பெயரில் டாடா நிறுவனம் அறிமுகப்படுத்தி இருந்தது. ஆனால் காஸினி என்பது தான் இந்திய மார்க்கெட்டில் பெரும்பாலானோர் விரும்பும் பெயராக உள்ளதால் இந்த பெயரை தான் டாடா நிறுவனம் ஹெரியரின் 7 இருக்கை வெர்சனுக்கு சூட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மூன்று இருக்கை அமைப்புகளுடன் டாடா ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

டாடா நிறுவனத்தின் தனித்துவமான மாடல் காராக விளங்கவுள்ள இந்த ஹெரியர் 7 இருக்கை வெர்சன் டாடா ஹெக்ஸா மாடலுக்கும் மேலே நிலை நிறுத்தப்படவுள்ளது. தற்போதைய ஹெரியர் காரில் இருந்து வேறுப்படுத்தப்பட்ட பின்புற டிசைனுடன் இந்த 7 இருக்கை வெர்சன் அறிமுகமாகவுள்ளது. இதன் டெயில்-லைட் மெல்லியதானதாக கொடுக்கப்பட்டுள்ளது.

மூன்று இருக்கை அமைப்புகளுடன் டாடா ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

5-இருக்கை ஹெரியர் வெர்சனை விட 62 மிமீ கூடுதல் நீளம், மூன்று இருக்கை வரிசைகளை கொண்ட கேபின் போன்றவை இந்த 7 இருக்கை வெர்சனில் சிறப்பம்சங்களாக உள்ளன. இத்துடன் பனோராமிக் சன்ரூஃப், 18 இன்ச் அலாய் சக்கரங்களும் ஹெரியரின் இந்த புதிய வெர்சனில் கொடுக்கப்பட்டுள்ளன.

மூன்று இருக்கை அமைப்புகளுடன் டாடா ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

5 இருக்கை வெர்சன் காரில் உள்ள 2.0 லிட்டர் கிரியோடெக் டீசல் என்ஜினை தான் இந்த எஸ்யூவி காரிலும் டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. ஆனால் அதனை விட இந்த புதிய வெர்சனின் வெளியிடும் ஆற்றல் சிறிது வித்தியாசப்படும். அதேநேரம் இந்த டீசல் என்ஜின் பிஎஸ்6 தரத்திற்கு அப்டேட் செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த 7 இருக்கை வெர்சன் அதிகப்பட்சமாக 170 பிஎச்பி பவரையும் 350 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தவுள்ளது.

மூன்று இருக்கை அமைப்புகளுடன் டாடா ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

ட்ரான்ஸ்மிஷன் தேர்வாக இதன் என்ஜினுடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. இந்த புதிய ஹெரியர் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவியில் ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷன் தேர்வையும் கூடுதலாக வழங்குவதற்கான பணிகள் நடைபெற்று வருவதாக டாடா நிறுவனம் கூறியுள்ளது. இதனால் ஹெரியரின் 5 இருக்கை வெர்சனுக்கு முன்னதாகவே ஆட்டோமேட்டிக் ட்ரான்ஸ்மிஷனை 7 இருக்கை வெர்சன் கார் பெறவுள்ளது.

மூன்று இருக்கை அமைப்புகளுடன் டாடா ஹெரியரின் 7 இருக்கை வெர்சன் எஸ்யூவி சோதனை ஓட்டம்...

டாடா நிறுவனத்தில் இருந்து வாடிக்கையாளர்கள் அதிகம் எதிர்பார்த்திருக்கும் மாடல்களுள் ஒன்றாக ஹெரியரின் இந்த 7 இருக்கை வெர்சன் எஸ்யூவி கார் விளங்குகிறது. ஃபோர்டு எண்டெவர், மஹிந்திரா அல்டுராஸ் ஜி4 மற்றும் டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற மாடல் கார்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் அறிமுகமாகவுள்ள இந்த காரின் விலை 5 இருக்கை வெர்சனை விட சற்று கூடுதலாக தான் இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Monday, November 25, 2019, 15:12 [IST]
English summary
Tata Harrier 7-Seater SUV (Cassini) Spied Testing With New Updates: Spy Pics & Details
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+