மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் டாடா ஹாரியர்... சமூக வலை தளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் அறிமுகமான டாடா ஹாரியர், அடிக்கடி விபத்தில் சிக்கி கொண்டுள்ளது. சமீபத்தில் விபத்துக்குள்ளான டாடா ஹாரியரின் வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் டாடா ஹாரியர்... சமூக வலை தளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் சமீபத்திய தயாரிப்பு ஹாரியர் (Tata Harrier). கடந்த ஜனவரி மாத கடைசியில்தான், டாடா ஹாரியர் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. வாடிக்கையாளர்கள் வழங்கி வரும் அமோக வரவேற்பின் காரணமாக, மார்க்கெட்டில் டாடா ஹாரியர் காருக்கான டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது.

மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் டாடா ஹாரியர்... சமூக வலை தளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

கடந்த பிப்ரவரி மாதம் மட்டும் 1,449 ஹாரியர் கார்களை டாடா நிறுவனம் விற்பனை செய்துள்ளது. இதுதவிர டாடா ஹாரியர் காருக்கு முன்பதிவும் குவிந்து வருகிறது. தற்போது வரை டாடா ஹாரியர் காருக்கு, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புக்கிங்குகள் குவிந்து விட்டன. எனவே டாடா ஹாரியருக்கு மார்க்கெட்டில் நல்ல ஓபனிங் கிடைத்துள்ளது.

மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் டாடா ஹாரியர்... சமூக வலை தளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

ஆனால் டாடா ஹாரியர் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகிறது. இந்த வகையில் சமீபத்தில் விபத்தில் சிக்கிய டாடா ஹாரியர் கார் ஒன்றின் வீடியோ தற்போது சமூக வலை தளங்களில் வைரலாக பரவி கொண்டுள்ளது. இந்த விபத்தில் டாடா ஹாரியரின் முன்பகுதி முற்றிலும் நொறுங்கி போய் விட்டது. விபத்தில் சிக்கிய டாடா ஹாரியர் டெமோ கார் (Demo Car) ஆகும்.

மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் டாடா ஹாரியர்... சமூக வலை தளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இது காரை வாங்க விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கானது. இதன் பின்பகுதியில் தற்காலிக நம்பர் பிளேட்டை பார்க்க முடிகிறது. அத்துடன் இதன் பக்கவாட்டில், #AboveAll என எழுதப்பட்டுள்ளது. #AboveAll என்பது டாடா ஹாரியர் காரின் அதிகாரப்பூர்வ ஹேஷ்டேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் டாடா ஹாரியர்... சமூக வலை தளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

இந்த விபத்திற்கான உறுதியான காரணம் என்னவென்று தெரியவில்லை. எனினும் அதிவேகத்தில் செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்து மரத்தில் மோதியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. அதேபோல் இந்த விபத்தில் யாருக்காவது காயம் ஏற்பட்டதா? என்பதும் உறுதியாக தெரியவில்லை. ஆனால் விபத்து நடந்தவுடன் காரின் முன்பகுதியில் உள்ள 2 ஏர் பேக்குகள் விரிவடைந்துள்ளன.

மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் டாடா ஹாரியர்... சமூக வலை தளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

அனேகமாக இது டாடா ஹாரியர் காரின் டாப் எண்ட் வெர்ஷனாக இருக்கலாம் என கூறப்படுகிறது. இதன் டாப் வெர்ஷனில் ஏராளமான பாதுகாப்பு வசதிகள் உள்ளன. இதில், 6 ஏர் பேக்குகள், எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி ப்ரோகிராம், எலெக்ட்ரானிக் ட்ராக்ஸன் கண்ட்ரோல் சிஸ்டம், கார்னர் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உள்பட ஏராளமான வசதிகள் உள்ளன.

மீண்டும் மீண்டும் விபத்தில் சிக்கும் டாடா ஹாரியர்... சமூக வலை தளங்களில் வைரலாகும் அதிர்ச்சி வீடியோ

டாடா ஹாரியர் காரானது, எஸ்யூவி வகையை சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதனிடையே டாடா ஹாரியர் டெமோ கார் விபத்தில் சிக்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. அதனை நீங்கள் கீழே காணலாம்.

வெளியே தெரியவந்துள்ள அளவில் பார்த்தால் இது டாடா ஹாரியரின் 2வது விபத்து. கடந்த சில நாட்களுக்கு முன்பாக மற்றொரு டாடா ஹாரியர் எஸ்யூவி கார் விபத்தில் சிக்கியிருந்தது. இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால் அதுவும் டெமோ கார்தான். டாடா ஹாரியர் எஸ்யூவி காரில், 2.0 லிட்டர் KRYOTEC இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 140 பிஎஸ் பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது.

More from DriveSpark

Article Published On: Saturday, March 16, 2019, 16:53 [IST]
English summary
Tata Harrier SUV Crashed Again: Video. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+