பல லட்சம் மதிப்புள்ள காரை பரிசாக வழங்கும் டாடா... இதற்காக நீங்க செய்ய வேண்டியது இது மட்டும் தான்...!
பட்ஜெட் ரக கார்களைத் தயாரித்து வரும் டாடா நிறுவனம் ஐபிஎல் போட்டியை முன்னிட்டு ரூ. 16 லட்சம் மதிப்புள்ள எஸ்யூவி ரக ஹாரியர் காரை பரிசாக அளிக்க உள்ளது. இதனைப் பரிசாக பெற கிரிக்கெட் ரசிகர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

இந்தியன் பிரீமியர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டியானது, கடந்த 2008ம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த வருடத்திற்கான போட்டி இம்மாதம் 23ம் தேதியில் இருந்து ஆரம்பிக்க உள்ளது. இப்போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் உட்பட சில வெளிநாட்டு கிரிக்கெட் வீரர்களும் இணைந்து போட்டியிடுவார்கள். இதேபோன்று, இவர்களுடன் சில புதுமுக போட்டியாளர்களும் கலந்துகொண்டு விளையாடுவார்கள்.

சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி டேர் டெவில்ஸ், மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைஸஸ் ஹைதராபாத், ராஜஸ்தான் ராயல்ஸ் உள்ளிட்ட எட்டு அணிகளாக பிரிக்கப்பட்டு இந்த போட்டியானது நடைபெற்று வருகின்றது.

இந்த போட்டியில் விளையாடும் வீரர்களை ஐபிஎல் அணியின் உரிமையாளர்கள் ஏலம் மூலம் விலைக்கு வாங்கி தங்களது டீமுக்காக விளையாட வைப்பார்கள். இந்த ஏலத்தின்மூலம் சாதாரண வீரர்கள்கூட பல கோடி ரூபாய் மதிப்புள்ள வீரர்களாக நொடிப்பொழுதில் ஏலத்திப் வாங்கப்படுவார்கள். பாலிவுட் திரைப்பட பிரபலங்களான ஷாருக்கான், பிரீத்தி ஜிந்தா முதல் தொழில்அதிபர் அம்பானி வரை ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களாக இருந்து வருகின்றனர்.

இதுமட்டுமின்றி, போட்டியை சில தனியார் நிறுவனங்களும் இணைந்து அஃபிசியல் பார்ட்னராக தொகுத்து வழங்குவது வழக்கம். அவ்வாறு போட்டியை பார்ட்னர்ஷிப் செய்து வழங்கும் நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகளை முன்னிறுத்தி வைத்து விளம்பரம் தேடிக் கொள்வார்கள். இந்த விளம்பரத்தின்மூலம் பிரபலமடைவது மட்டுமின்றி போட்டிமூலம் சில ரெவன்யூவை ஈட்டுவார்கள்.

இந்த நிலையில், விவோ நடத்தும் 2019ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் அஃபிசியல் பார்ட்னராக டாடாவும் இணைந்துள்ளது. கடந்த வருடமும் ஐபிஎல் அணிக்கு அஃபிஷியில் பார்ட்னராக டாடா இருந்தது குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து, இந்த தொடரின்போது தனது புதிய மாடலான ஹாரியரை டாடா நிறுவனம் முன்நிறுத்த இருக்கிறது.

டாடா நிறுவனம் கடந்த வருடம் இதேபோன்று அஃபிஷியல் ஸ்பான்ஸராக இருந்தபோது ஓர் சிறப்பு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதாவது, ஐபிஎல் தொடரின்போது சிறந்த கேட்ச்சினைப் பிடிக்கும் பார்வையாளருக்கு கார் பரிசாக வழங்கப்படும் என அறிவித்திருந்தது. அதன்படி, டாடா நெக்ஸான் காருடன் குறிப்பிட்ட தொகையையும் டாடா நிறுவனம் வழங்கியது.

அதேபோன்று, இந்த வருடம் நடைபெறும் போட்டியின்போதும், அசாத்தியமான கேட்சைப் பிடிக்கும் ரசிகரைச் சிறப்பிக்கும் விதமாக அவருக்கு டாடா ஹாரியர் கார் பரிசாக வழங்கப்பட உள்ளது. மேலும், ஒரு லட்சம் வரை பரிசு தொகையாக வழங்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. டாடா பரிசாக வழங்க இருக்கும் காரானது, லேண்ட் ரோவர் அடிப்படையில், எச்5எக்ஸ் என்ற புதிய கான்செப்ட் மாடலில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்தது.

எஸ்யூவி ரகத்தில் உருவாக்கப்பட்டிருந்த அந்த கார் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதுவே பின்னர், ஹாரியர் என்ற பெயரில் சந்தையில் அறிமுகமானது. உயர்த்தப்பட்ட பேனட் அமைப்பு, வலிமையான முகப்பு தோற்றம் ஆகியவை இந்த காரின் சிறப்பாக பார்க்கப்படுகிறது. இதைத்தவிர்த்து, பேனட்டின் கீழ்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள ஹெட்லைட், முகப்பின் மேல்புறத்தில் உள்ள இரண்டு பகல்நேர எல்இடி மின்விளக்குகள் அதன் கவர்ச்சியை மேலும் கூட்டும் விதமாக அமைந்துள்ளது. இந்த பகல்நேர விளக்குகளே இன்டிகேட்டராகவும் செயல்படுகின்றது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவியில் பயன்படுத்தப்படும் ஃபியட் நிறுவனத்தின் அதே 2.0 லிட்டர் டர்போார்ஜ்டு டீசல் எஞ்சின்தான் புதிய டாடா ஹாரியர் எஸ்யூவியிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த எஞ்ஜின் 138பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க்யூவையும் வெளிப்படுத்தும். மேலும், இந்த எஞ்ஜினில் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் இல்லை. ஒரே புஷ்ஷில் வாகனத்தை ஸ்டார்ட் வசதி இந்த எஸ்யூவியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஈக்கோ, சிட்டி மற்றும் ஸ்போர்ட் என மூன்றுவிதமான டிரைவிங் மோடுகள் இதில் கொடுக்கப்பட்டுள்ளன.

இவ்வளவு சிறப்பம்சங்களைக் கொண்ட இந்த எஸ்யூவி ரக டாடா ஹாரியர் கார் ரூ.16 லட்சம் முதல் ரூ. 21 லட்சம் ஆன்ரோடு விலையில் விற்பனைக்கு வரும் என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமகா அறிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications








