புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

டாடா ஹாரியர் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட்டிற்கு காத்திருப்பு காலம் மிக அதிகமாக இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

கடந்த ஜனவரி 23ந் தேதி டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. புதிய டாடா ஹாரியர் எஸ்யூவி டீசல் எஞ்சின் தேர்வில் XE, XM, XT மற்றும் XZ ஆகிய 4 வேரியண்ட்டுகளில் விற்பனைக்கு வந்தது. இதில், XE பேஸ் வேரியண்ட்டிற்கு ரூ.12.69 லட்சம் என்ற மிக சவாலான விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

போட்டியாளர்களைவிட குறைவான விலையில் வந்ததால், புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்துள்ளது. ரூ.30,000 முன்பணத்துடன் புக்கிங் ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், இதுவரை 10,000க்கும் மேற்பட்ட முன்பதிவுகளை பெற்றுள்ளது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

மேலும், பிப்ரவரியில் 1,449 ஹாரியர் எஸ்யூவிகள் விற்பனையாகிய நிலையில், கடந்த மாதம் 2,492 ஹாரியர் எஸ்யூவிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதனால், ஹாரியர் எஸ்யூவிக்கான வரவேற்பு ஸ்திரமாக இருப்பது தெரிய வந்துள்ளது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

இந்த நிலையில், டாடா ஹாரியர் பேஸ் வேரியண்ட்டை புக்கிங் செய்தவர்களுக்கு 4 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக சொல்லப்படுகிறது. ஹாரியர் பேஸ் வேரியண்ட்டை அதிகம் பேர் முன்பதிவு செய்ததால், காத்திருப்பு காலம் ஏற்பட்டுள்ளதாக அல்லது உற்பத்தி சொற்ப எண்ணிக்கையில் இருப்பதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதா என்று தெரியவில்லை.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

ஏனெனில், பொதுவாக நடுத்தர விலையிலான வேரியண்ட்டுகளுக்கே அதிக முன்பதிவு கிடைக்கும். இதனால், பேஸ் வேரியண்ட்டின் உற்பத்தி குறிப்பிட்ட கால இடைவெளியில் மட்டுமே செய்யப்படும். அதுவும் பேஸ் வேரியண்ட் வெள்ளை வண்ணத்தில் மட்டுமே கிடைக்கிறது.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

குறிப்பிட்ட இடைவெளியில்தான் வெள்ளை வண்ண கார்கள் உற்பத்தி செய்யப்படும். அதன் அடிப்படையில் காத்திருப்பு காலம் அதிகரித்து இருப்பதாக கருதலாம். அதேநேரத்தில், பிற வேரியண்ட்டுகளுக்கு 2 முதல் 3 மாதங்கள் வரை காத்திருப்பு காலம் இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

எனினும், டாடா ஹாரியர் பேஸ் வேரியண்ட்டிலேயே பல சிறப்பம்சங்கள் உள்ளன. குறிப்பாக, புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகளக் உள்ளன. 16 அங்குல ஸ்டீல் சக்கரங்கள் வழங்கப்படுகின்றன. இன்டிகேட்டர்களுடன் சைடு மிரர்கள், பக்கவாட்டில் பாடி கிளாடிங் சட்டங்களும் உள்ளன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

இந்த எஸ்யூவியில் டில்ட் மற்றும் டெலிஸ்கோப்பிக் ஸ்டீயரிங் வீல், பவர் விண்டோ, மேனுவல் ஏசி மற்றும் ரியர் ஏசி வென்ட்டுகள், படுல் விளக்குகள், கூலிங் கிளாஸ் மற்றும் குடைக்கான ஹோல்டர்கள், அட்ஜெஸ்ட் வசதியுடன் டிரைவர் இருக்கை ஆகியவை முக்கிய வசதிகளாகவும் இருக்கின்றன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

பேஸ் வேரியண்ட் உள்பட அனைத்து வேரியண்ட்டுகளிலும் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர், ஆட்டோ டோர் லாக் மற்றும் பெரிமெட்ரிக் அலாரம் ஆகியவை நிரந்தர பாதுகாப்பு அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

புதிய டாடா ஹாரியர் எஸ்யூவிக்கு நீளும் காத்திருப்பு காலம்!

மொதத்தில் டாடா ஹாரியர் எஸ்யூவியின் பேஸ் வேரியண்ட் கொடுக்கும் பணத்திற்கு மதிப்பு வாய்ந்த மாடலாகவே கூறலாம். அடுத்தடுத்த வேரியண்ட்டுகளில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 17 அங்குல அலாய் வீல்கள், டாப் வேரியண்ட்டில் 6 ஏர்பேக்குகள், ஸினான் எச்ஐடி புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், 9 ஸ்பீக்கர்களுடன் ஜேபிஎல் சவுண்ட் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றுள்ளன.

More from DriveSpark

Article Published On: Thursday, April 11, 2019, 16:04 [IST]
English summary
According to media reports, Tata Harrier SUV waiting period stands at 4 months for base variant.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+