டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை... ரகசிய ரீகால்!

அப்டேட்: ஹெக்ஸா கார் தொடர்பாக டிரைவ்ஸ்பார்க் தளத்திற்கு டாடா நிறுவனம் அறிக்கை ஒன்றை வழங்கியுள்ளது. இதில், ''எஞ்சின் ஹெட்டை மாற்றி தருவதற்காக, ஹெக்ஸா கார்களை ரீ கால் செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்பதை தெளிவுபடுத்தி கொள்ள விரும்புகிறோம். எனவே தவறான தகவல்களால் ஹெக்ஸா வாடிக்கையாளர்கள் பதற்றம் அடைவதை தவிர்க்கும் விதமாக, டாடா மோட்டார்ஸிடம் இருந்து வந்த இந்த அதிகாரப்பூர்வ தகவலுடன் செய்தியை அப்டேட் செய்யும்படி உங்களை கேட்டு கொள்கிறோம்'' என கூறப்பட்டுள்ளது.

டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டுள்ளதையடுத்து, பிரச்னைக்குரிய கார்கள் திரும்ப அழைக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை... ரகசிய ரீகால்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் டீலர்களுக்கு ஒரு சுற்றறிக்கையை அனுப்பி இருக்கிறது. அதில், ஹெக்ஸா காரின் எஞ்சின் ஹெட் (சிலிண்டர் ஹெட்) பகுதியில் பிரச்னை இருப்பதால், அதனை மாற்றித் தருவதற்கு டீலர்களை அறிவுறுத்தி இருக்கிறது.

டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை... ரகசிய ரீகால்!

அதன்படி, வாடிக்கையாளர் ஒருவர் ஹெக்ஸா காரை வழக்கமான பரிசோதனைகளுக்காக டாடா சர்வீஸ் மையத்திற்கு சில தினங்களுக்கு முன் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது, ஹெக்ஸா காரின் எஞ்சின் ஹெட் பகுதியை மாற்றித் தர வேண்டும் என்று சர்வீஸ் சூப்பர்வைசர் கூறி இருக்கிறார்.

டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை... ரகசிய ரீகால்!

இந்த தகவலை அவர் டீம் பிஎச்பி தளத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். மேலும், இந்த தகவலுக்கு டீம் பிஎச்பி தளத்தை சேர்ந்த உறுப்பினர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர். சிலிண்டர் ஹெட் மாற்ற வேண்டும் என்பது குறித்து பலர் கவலை தெரிவித்துள்ளனர்.

டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை... ரகசிய ரீகால்!

டாடா ஹெக்ஸா கார் அறிமுகத்தின்போது, 8 லட்சம் கீமீ தூரம் வரை பல்வேறு சீதோஷ்ண நிலைகள் மற்றும் சாலை நிலைகளில் வைத்து சோதனை செய்யப்பட்டிருப்பதாக டாடா மோட்டார்ஸ் தெரிவித்தது. ஆனால், தற்போது எஞ்சின் ஹெட் மாற்றும் அளவுக்கு பிரச்னை இருப்பது ஏமாற்றம் அளிப்பதாக பலர் கூறி இருக்கின்றனர்.

டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை... ரகசிய ரீகால்!

இந்த பிரச்னை குறித்து டாடா மோட்டார்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை. அதேநேரத்தில், கடந்த 2017ம் ஆண்டு மே முதல் ஜூலை வரையில் தயாரிக்கப்பட்ட ஹெக்ஸா கார்களில் எஞ்சின் ஹெட் பிரச்னை இருப்பதாக தெரிய வருகிறது.

டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை... ரகசிய ரீகால்!

இந்தியாவில் பல முன்னணி கார் நிறுவனங்கள் இதுபோன்ற பிரச்னைகளின்போது, வாடிக்கையாளர் நலன் கருதி தாமாக முன்வந்து ரீகால் அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. ஆனால், டாடா மோட்டார்ஸ் இந்த பிரச்னை குறித்து இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.

டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை... ரகசிய ரீகால்!

டாடா ஹெக்ஸா காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் 148 பிஎச்பி பவரையம், 320 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஒரு மாடலிலும், 154 பிஎச்பி பவரையும்,, 400 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் மற்றொரு மாடலிலும் கிடைக்கிறது. 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனலாக கிடைக்கிறது.

டாடா ஹெக்ஸா கார் எஞ்சினில் பிரச்னை... ரகசிய ரீகால்!

வரும் 23ந் தேதி டாடா ஹாரியர் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த புதிய எஸ்யூவி வரும் இவ்வேளையில், ஹெக்ஸா காருக்கு ரீகால் செய்தால், டாடா தயாரிப்புகள் மீதான நம்பகத்தன்மையை குறைக்கும் என கருதி அந்நிறுவனம் மவுனம் சாதிப்பதாக கூறப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Thursday, January 10, 2019, 12:41 [IST]
English summary
Tata Motors might soon issue a recall of their Hexa SUV in the Indian market. According to sources from Team-BHP, Tata Motors have already shared a circular with thier service dealers regarding the Hexa recall.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+