கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

கடும் சோதனைகளில் வெற்றி பெற்றதால், இந்தியாவின் டாடா நிறுவன காருக்கு, வெளிநாட்டு ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அனைத்து தரப்பு மக்களுக்கும் ஏற்ற வகையில் பல்வேறு கார்களை விற்பனை செய்து வருகிறது. டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்கள் இந்தியா மட்டுமல்லாது, உலகின் பல்வேறு நாடுகளிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அனைத்து நாடுகளிலும் அவை வாடிக்கையாளர்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளன.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

குறிப்பாக இந்தியாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவன கார்களுக்கு ரசிகர்கள் அதிகம். டாடா நிறுவன கார்கள் பாதுகாப்பு நிறைந்தவை என்பதும் இதற்கு ஒரு காரணம். கொடூரமான சாலை விபத்துக்களில் இருந்து பயணிகளின் உயிரை, டாடா நிறுவன கார்கள் பல முறை காப்பாற்றியுள்ளன. கட்டுமான தரம் என்ற விஷயத்தில் டாடா கார்கள் தலைசிறந்து விளங்குகின்றன.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

பல்வேறு சந்தர்ப்பங்களில் டாடா நிறுவன கார்கள் இந்தியாவிற்கும் பெருமை தேடி தந்துள்ளன. பொதுவாக இந்திய நிறுவனங்கள் தயாரிக்கும் கார்கள் அவ்வளவு பாதுகாப்பானவை கிடையாது என்றே சொல்லப்பட்டு வருகிறது. ஆனால் அந்த குறையை தகர்ந்து எறிந்து புதிய சாதனை படைத்த நிறுவனம் டாடா மோட்டார்ஸ்தான்.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

கடந்த சில மாதங்களுக்கு முன், குளோபல் என்சிஏபி (Global NCAP) அமைப்பு நடத்திய கிராஷ் டெஸ்ட்டில் டாடா நெக்ஸான் (Tata Nexon) கார், 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்று புதிய வரலாறு படைத்தது. குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில், 5 நட்சத்திர பாதுகாப்பு ரேட்டிங்கை பெற்ற முதல் ''மேட் இன் இந்தியா'' கார் டாடா நெக்ஸான்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

பொதுமக்கள் மட்டுமல்லாது இந்திய ராணுவமும் கூட டாடா நிறுவன வாகனங்களை பயன்படுத்தி வருகிறது. இந்திய ராணுவத்தில் சமீபத்தில் சேர்க்கப்பட்ட டாடா நிறுவன தயாரிப்பு சபாரி ஸ்ட்ரோம். இந்த சூழலில் வங்கதேச நாட்டின் ராணுவமும் வெகு விரைவில், இந்தியாவின் டாடா நிறுவன வாகனங்களை பயன்படுத்தவுள்ளது.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

ஆம், வங்கதேச ராணுவத்திற்கு 200 எஸ்யூவி ரக கார்களை சப்ளை செய்யும் மதிப்புமிக்க ஆர்டரை டாடா நிறுவனம் தற்போது பெற்றுள்ளது. இது தொடர்பான அறிவிப்பை டாடா நிறுவனம் நேற்று (ஜூலை 8) வெளியிட்டது. இதன்படி 200 டாடா ஹெக்ஸா 4×4 மாடல்களுக்கு வங்கதேச ராணுவம் ஆர்டர் கொடுத்துள்ளது.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

ராணுவத்தின் மிக கடுமையான சோதனைகளில் வெற்றி பெற்ற பிறகே, டாடா ஹெக்ஸா தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. வங்கதேச ராணுவத்தின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்வதுடன், அவர்களுக்கு தேவைப்படும் அனைத்து வசதிகளையும் டாடா ஹெக்ஸா பெற்றுள்ளது. எனவேதான் இந்த மதிப்புமிக்க ஆர்டரை டாடா மோட்டார்ஸ் வென்றுள்ளது.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

வங்கதேச ராணுவத்திடம் இருந்து டாடா நிறுவனத்திற்கு வந்த முதல் முக்கியமான ஆர்டர் இதுதான் என கூறப்படுகிறது. ஆனால் வங்கதேச மார்க்கெட்டிற்கு டாடா நிறுவனம் புதியது ஒன்றும் கிடையாது. டாடா நிறுவனம் கடந்த 2012ம் ஆண்டு முதல் வங்கதேசத்தில் பயணிகள் வாகனங்களை விற்பனை செய்து வருகிறது. டியாகோ, நெக்ஸான் உள்ளிட்ட கார்கள் அதன் லைன் அப்பில் உள்ளன.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

ஆனால் தற்போதைய நிலையில் வங்கதேசத்தில் தனி நபர்களுக்கு டாடா நிறுவனம் ஹெக்ஸா காரை விற்பனை செய்வது கிடையாது. எனவே தனி நபர்கள் இந்த காரை அங்கு வாங்க முடியாது. டாடா நிறுவனம் வங்கதேச ராணுவத்தின் பயன்பாட்டிற்கு என பிரத்யேகமாக 200 ஹெக்ஸா கார்களை உற்பத்தி செய்யவுள்ளது.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

இந்தியாவில் விற்பனை செய்யப்படும் வழக்கமான ஹெக்ஸா காருடன் ஒப்பிடுகையில் ராணுவத்திற்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்படவுள்ள மாடலில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சில மாற்றங்களை செய்யலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. டாடா ஹெக்ஸா காரில், 2.2 லிட்டர் டர்போசார்ஜ்டு வேரிகோர் 400 இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

கடும் சோதனைகளில் வெற்றி... டாடா கார்களை வெளிநாட்டு ராணுவம் தேர்வு செய்ததால் இந்தியாவிற்கு பெருமை...

148 பிஎச்பி பவர்/320 என்எம் டார்க் மற்றும் 156 பிஎச்பி பவர்/400 என்எம் டார்க் என இரண்டு வகையான பவர் அவுட்புட்டை கொடுக்கும் வகையில் இந்த இன்ஜின் ட்யூன் செய்யப்பட்டுள்ளது. இதில், குறைந்த பவர்அவுட் கொண்ட இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் மட்டுமே வழங்கப்படுகிறது. அதே சமயம் அதிக பவர்அவுட் கொண்ட இன்ஜின் உடன் டாடா நிறுவனம் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் மற்றும் ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்களை வழங்குகிறது.

Most Read Articles
English summary
Tata Motors Wins Order For 200 Hexa SUVs From Bangladesh Army. Read in Tamil
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X