கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

பண்டிகை காலத்தின் பெயரில் கார்களுக்கு அதிரடி சேமிப்புச் சலுகைகளை டாடா மோட்டார்ஸ் அறிவித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

ஆட்டோமொபைல் துறை மந்த நிலையால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறது. கடந்த மாதம் டாடா மோட்டார்ஸ் கார் விற்பனையில் 60 சதவீதம் வரை அடிவாங்கியது.

கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

இதனால், பெரும் கஷ்ட காலத்தை கடந்து வரும் டாடா மோட்டார்ஸ் வாடிக்கையாளர்களை கவரும் விதமாக பண்டிகை காலத்தின் பெயரில் தள்ளுபடி மற்றும் சேமிப்புச் சலுகைகளை அறிவித்துள்ளது.

Model Benefits Up To
Tata Hexa Rs 1,50,000
Tata Nexon Rs 85,000
Tata Tiago Rs 70,000
Tata Tiago NRG Rs 70,000
Tata Tigor Rs 1,15,000
Tata Harrier Rs 50,000
கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

டாடா நிறுவனத்தின் முன்னணி கார் மாடல்களாக டாடா ஹெக்ஸா, நெக்ஸான், டியாகோ, டிகோர் உள்ளிட்ட அனைத்து கார்களுக்கும் சிறப்புச் சேமிப்புச் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

புதிய டாடா ஹெக்ஸா காரை வாங்குவோர் கேஷ் ஆஃபர் என்ற பெயரில் ரூ.50,000 வரையிலும், பழைய காரை எக்ஸ்சேஞ்ச் செய்வோருக்கு ரூ.35,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.15,000 கார்ப்பரேட் போனசாகவும், குறிப்பிட்ட சேஸீகளுக்கு ரூ.50,000 வரையிலும் மொத்தமாக ரூ.1.50 லட்சம் வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

டாடா நெக்ஸான் காருக்கு ரூ.25,000 கேஷ் ஆஃபரும், ரூ.35,000 வரையில் எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.7,500 வரையில் கார்ப்பரேட் போனஸ் மற்றும் இதர வகையில் ரூ.30,000 என மொத்தம் ரூ.85,000 வரை சேமிக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

டியாகோ காருக்கு ரூ.25,000 கேஷ் ஆஃபரு்,, ரூ.15,000 எக்ஸ்சேஞ்ச் போனஸும், ரூ.5,000 கார்ப்பரேட் போனஸும், ரூ.25,000 வரை இதர சேமிப்புச் சலுகையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதிபட்சமாக ரூ.75,000 வரை தள்ளுபடி பெற முடியும்.

கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

டியாகோ என்ஆர்ஜி காருக்கு ரூ.20,000 வரை கேஷ் ஆஃபரும், ரூ.15,000 வரை எக்ஸ்சேஞ்ச் போனசாகவும், ரூ.5,000 வரை கார்ப்பரேட் போனசாகவும், ரூ.25,000 இதர சலுகையாகவும் மொத்தம் ரூ.65,000 மதிப்புடைய சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது.

கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

டாடா டிகோர் காம்பேக்ட் செடான் காருக்கு கேஷ் ஆஃபராக ரூ.30,000 வரையிலும், எக்ஸ்சேஞ்ச் போனசாக ரூ.25,000 வரையிலும், கார்ப்பரேட் போனசாக ரூ.12,000 வரையிலும், இதர சலகையாக ரூ.50,000 என மொத்தமாக ரூ.1.15 லட்சம் வரையிலான சேமிப்பை பெறும் வாய்ப்புள்ளது.

கார்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை ஆஃபர்களை வாரி வழங்கும் டாடா மோட்டார்ஸ்

பண்டிகை காலத்தை முன்னிட்டு வழங்கப்படும் இந்த சலுகைகள் மூலமாக விற்பனை ஊக்கம் பெறும் என்று டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன விற்பனைப் பிரிவு துணைத் தலைவர் எஸ்.என்.பர்மன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

More from DriveSpark

Article Published On: Saturday, September 14, 2019, 16:32 [IST]
English summary
Tata Motors has announced discounts of up to Rs. 1.5 lakh during this festive season to attract customers.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+