டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

அல்ட்ராஸ் காரின் சிறப்பம்சங்கள் மற்றும் வாங்குவதற்கான நடைமுறைகளை கூகுள் அசிஸ்டென்ட் மூலமாக பெறும் வசதியை டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தி உள்ளது. 

டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

கடும் போட்டி நிறைந்த பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டாடா அல்ட்ராஸ் கார் விரைவில் விற்பனைக்கு களமிறங்க உள்ளது. ராஜஸ்தான் மாநிலம், ஜெய்சால்மரில் நடந்த நிகழ்ச்சியில் டாடா அல்ட்ராஸ் கார் நேற்று பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது.

டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

ஏராளமான சிறப்பம்சங்களுடன் இந்த கார் போட்டியாளர்களை ஒரு கை பார்க்க இருக்கிறது. இந்த நிலையில், டாடா அல்ட்ராஸ் காரை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு கூகுள் மூலமாக பிரத்யேக வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து இந்த வசதியை டாடா மோட்டார்ஸ் வழங்குகிறது. அதாவது, அல்ட்ராஸ் காரின் சிறப்பம்சங்கள் மற்றும் காரை வாங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் விதமாக இந்த வசதி அமையும்.

டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

அல்ட்ராஸ் வாய்ஸ் பாட் என்ற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கும் இந்த வசதி மூலமாக காரின் சிறப்பம்சங்களை ஸ்மார்ட்ஃபோனில் கூகுள் அசிஸ்டென்ட் வசதியை பயன்படுத்தி வாய்மொழி உத்தரவுகள் மூலமாக இந்த கார் பற்றிய பல்வேறு விஷயங்களை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

கூகுள் அசிஸ்டென்ட் வசதியை பயன்படுத்தி, Ok Google, Talk To Altroz என்ற கூறினால், அல்ட்ராஸ் காரின் வெளிப்புற மற்றும் உட்புறத் தோற்றம், அதில் இருக்கும் சிறப்பம்சங்களை ஒவ்வொன்றாக பார்க்க முடியும். அத்துடன், கார் வாங்குவதற்கான முன்பதிவு, ஷோரூம் தேர்வு, டெஸ்ட் டிரைவ் செய்து பார்ப்பதற்கான முன்பதிவு உள்ளிட்டவற்றையும் இதன் வழியாக செய்ய இயலும்.

Most Read: இந்தியாவில் டொயோட்டா நிறுவன கார்கள் விற்பனை கடும் சரிவு... எவ்வளவு குறைந்துள்ளது தெரியுமா?

டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

மேலும், இந்த வசதியை அல்ட்ராஸ் காரின் ஆன்ட்ராய்டு ஆட்டோ அல்லது ஆப்பிள் கார் ப்ளே செயலிகள் மூலமாகவும் பயன்படுத்தி பல்வேறு தகவல்களை பெறுவதற்கு வழி செய்யும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. கார் வாங்குவதற்கு முன், பின் இந்த அல்ட்ராஸ் வாய்ஸ் பாட் வசதியை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

Most Read: ஸ்கோடா கரோக் எஸ்யூவி இந்திய அறிமுக விபரம் வெளியானது!

டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

இந்த புதிய அல்ட்ராஸ் வாய்ஸ் பாட் வசதி வாடிக்கையாளர்களுக்கு புதிய அனுபவத்தையும், எளிதாக தகவல்களையும், கட்டுப்பாட்டு வசதிகளையும் அளிக்கும் என்று டாடா மோட்டார்ஸ் தெரிவித்துள்ளது. இதனை செம்மைப்படுத்தி, அதிக வசதிகளை சேர்க்கவும் திட்டமிட்டுள்ளதாக கூகுள் இந்தியா நிறுவனத்தின் ஆட்டோமொபைல் பிரிவு அதிகாரி தெரிவித்துள்ளார்.

Most Read: அனைத்து கார்களின் விலையையும் அதிரடியாக அதிகரிக்கும் மாருதி சுசுகி...

டாடா அல்ட்ராஸ் காருக்கு கூகுளில் கொடுக்கப்படும் பிரத்யேக தொழில்நுட்ப வசதி!

மாருதி பலேனோ, ஹூண்டாய் எலைட் ஐ20 கார்களின் ஆதிக்கத்தில் இருக்கும் இந்தியாவின் பிரிமீயம் ஹேட்ச்பேக் கார் மார்க்கெட்டில் டாடா அல்ட்ராஸ் களமிறங்கி சந்தையைப் பிடிப்பதற்கு அதிக மதிப்பை வழங்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதன்படி, இந்த கூகுள் அசிஸ்டென்ட் வசதியும் முக்கியமானதாக இருக்கும்.

Most Read Articles

English summary
Tata Motors have announced the launch of Atroz voice BoT feature using the Google Assistant to ease the buying experience for its customers.
Story first published: Wednesday, December 4, 2019, 11:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X