ஹெக்ஸா உற்பத்தி நிறுத்தமா? - டாடா மோட்டார்ஸ் விளக்கம்!

ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தப்படுவதாக வெளியான தகவல்கள் குறித்து டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தமா?

டாடா ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தப்பட இருப்பதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. ஹெக்ஸா காருக்கு பதிலாக ஹாரியர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல் அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் அந்த செய்திகளில் கூறப்பட்டது.

டாடா ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தமா?

இந்த செய்தி ஹெக்ஸா கார் உரிமையாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. புதிதாக ஹெக்ஸா கார் வாங்கிய வாடிக்கையாளர்கள் பலரும் சமூக வலைதளங்களிலும் உதிரிபாகங்கள் கிடைப்பது குறித்த தங்களது கவலையைும், ஏமாற்றத்தையும் வெளிப்படுத்தி வந்தனர்.

டாடா ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தமா?

இந்த தகவலால் ஹெக்ஸா காரின் விற்பனையும் அடியோடு பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டது. இந்த நிலையில், இந்த தகவல் குறித்து டாடா மோட்டார்ஸ் விளக்கம் அளித்துள்ளது.

டாடா ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தமா?

அதில், எங்கள் நிறுவனத்தின் பொறியியல் வல்லமையை எடுத்துக் காட்டும் தயாரிப்பாக ஹெக்ஸா விளங்குகிறது. ஹெக்ஸா கார் மீது வாடிக்கையாளர் வைத்திருக்கும் மதிப்பும், அன்பும் மதிப்பிட முடியாதது.

டாடா ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தமா?

இந்த நேரத்தில், ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தப்படுவதாக வெளியான தகவல் யூக அடிப்படையிலானது. ஒவ்வொரு ஹெக்ஸா வாடிக்கையாளரும் எங்களுக்கு முக்கியமானவர்கள். எனவே, இந்த விளக்கத்தை அளிக்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டாடா ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தமா?

ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தப்படாது என்று டாடா மோட்டார்ஸ் குறிப்பிட்டு மறுப்பு தெரிவிக்கவில்லை. மாறாக, அந்த செய்தி யூக அடிப்படையிலானது என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. எனவே, இன்னும் குழப்பம் முழுமையாக தீர்ந்தபாடில்லை.

டாடா ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தமா?

பாரத் ஸ்டேஜ் -6 மாசு உமிழ்வு விதிகள் வர இருப்பதையடுத்து, ஹெக்ஸா காரில் பயன்படுத்தப்படும் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்த இயலாத நிலை இருப்பதாக தகவல்கள் வெளியானது.

டாடா ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தமா?

மேலும், ஹெக்ஸா கார் உற்பத்தி நிறுத்தப்பட உள்ளதாகவும், அதற்கு மாற்றாக பஸ்ஸார்டு 7 சீட்டர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் அளித்துள்ள விளக்கம் ஹெக்ஸா வாடிக்கையாளர்களுக்கு மன நிம்மதியை தருவதாக அமைந்துள்ளது.

Most Read Articles
English summary
Tata Motors has issued statement on reports of Hexa to be discontinued soon.
Story first published: Monday, July 15, 2019, 12:02 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X