மாருதி வழியில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் டாடா!

மாருதியை தொடர்ந்து டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் சிறிய வகை டீசல் கார் உற்பத்தியை நிறுத்த இருப்பதாக தெரிவித்துள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

மாருதி வழியில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் டாடா!

அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு வர இருக்கின்றன. இதற்கு தக்கவாறு கார் எஞ்சின்களை மேம்படுத்தும் முயற்சியில் அனைத்து கார் நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன. இந்த சூழலில், பெட்ரோல் எஞ்சின்களை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்தும் முயற்சியில் கார் நிறுவனங்கள் ஈடுபட்டுள்ளன.

மாருதி வழியில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் டாடா!

ஆனால், டீசல் கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுவதால் பல நிறுவனங்களும் டீசல் கார் உற்பத்தியை தொடர்வது குறித்து தீவிரமாக பரிசீலித்து வருகின்றன. குறிப்பாக, சிறிய வகை டீசல் கார் எஞ்சின்களை மேம்படுத்துவதற்கான முதலீடு அதிகமாக இருக்கும் என்பதால், கார் விலையை அதிகமாக நிர்ணயிக்க வேண்டி இருக்கும்.

மாருதி வழியில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் டாடா!

எனவே, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கு முடிவு செய்துள்ளதாக மாருதி கார் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதே வழியில் டாடா மோட்டார்ஸ் நிறுவனமும் இப்போது டீசல் கார் உற்பத்தியை கைவிடுவதற்கு திட்டமிட்டுள்ளது.

மாருதி வழியில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் டாடா!

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் பயன்படுத்தப்படும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சினை மேம்படுத்துவதை தவிர்க்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது. அதேபோன்று, போல்ட், ஸெஸ்ட் உள்ளிட்ட கார்களில் 1.3 லிட்டர் டீசல் எஞ்சினை பயன்படுத்தி வருகிறது.

மாருதி வழியில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் டாடா!

மாருதி போன்றே, இந்த எஞ்சினை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஃபியட் நிறுவனத்திடமிருந்து சப்ளை பெற்று வருகிறது. இந்த எஞ்சினை மேம்படுத்தப் போவதில்லை என்று ஃபியட் ஏற்கனவே தெரிவித்துள்ளது. எனவே, டாடா கார்களில் பயன்படுத்தப்படும் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் மற்றும் 1.3 லிட்டர் டீசல் எஞ்சின் ஆகியவை உற்பத்தியிலிருந்து விலக்கப்பட இருக்கிறது.

மாருதி வழியில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் டாடா!

மேலும், பட்ஜெட் கார் சந்தையில் 80 சதவீதம் அளவுக்கு பெட்ரோல் கார்களே விற்பனையாகின்றன. எனவே, இந்த ரகத்தில் டீசல் கார்களுக்கான மவுசு குறைவாக இருப்பதும், அதிக முதலீடு செய்வது பலன் தராது என்ற முடிவுக்கு டாடா மோட்டார்ஸ் வந்துள்ளது.

மாருதி வழியில் டீசல் கார் உற்பத்தியை நிறுத்தும் டாடா!

எனினும், டாடா நெக்ஸான் எஸ்யூவியில் 1.5 லிட்டர் டீசல் எஞ்சினும், டாடா ஹாரியர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டீசல் எஞ்சினும், டாடா ஹெக்ஸா காரில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சினும் பயன்படுத்தப்படுகிறது. இந்த எஞ்சின்களை டாடா மோட்டார்ஸ் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக மேம்படுத்திவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
English summary
Tata Motors may stop small diesel cars production by next year.
Story first published: Monday, May 6, 2019, 12:04 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X