அசத்தலான அம்சங்களுடன் டாடா கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல் அறிமுகம்!
பண்டிகை காலத்தை முன்னிட்டு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் கூடுதல் சிறப்பம்சங்களுடன் 5 கார்களின் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

கார் விற்பனை படுத்துக் கொண்ட நிலையில், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் முயற்சிகளில் டாடா மோட்டார்ஸ் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. அண்மையில் தனது கார் மாடல்களுக்கு ரூ.1.50 லட்சம் வரையிலான சேமிப்புச் சலுகைகளை அறிவித்தது. இந்த நிலையில், தற்போது கூடுதல் ஆக்சஸெரீகள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுடன் ஸ்பெஷல் எடிசன் மாடல்களை வெளியிட்டு இருக்கிறது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஹாரியர், ஹெக்ஸா, டியாகோ, டிகோர் மற்றும் நெக்ஸான் ஆகிய முன்னணி கார் மாடல்களின் ஸ்பெஷல் எடிசன் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த மாடல்கள் புரோ எடிசன் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த ஐந்து கார்களின் புரோ எடிசனில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்களை காணலாம்.

டாடா ஹாரியர் புரோ எடிசன்
ஆட்டோமேட்டிக் சன்ரூஃப், ஷன் ஷேடுகள், முன்புற பார்க்கிங் சென்சார்கள், வயர்லெஸ் மொபைல் ஹோல்டர், மொபைல்போன் மூலமாக தகவல் பெறும் வசதியுடன் கூடிய டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், பல வண்ணங்களில் ஒளிரும் ஆம்பியன்ட் மூட் லைட்டிங், பானட் ஸ்கூப், பாடி க்ரோம் லைன், க்ரோம் பூச்சுடன் புகைப்போக்கி குழல் கொடுக்கப்பட்டுள்ளன. இந்த புரோ எடிசனுக்கு ரூ.1.09,999 கூடுதல் விலையாக செலுத்த வேண்டி இருக்கும்.

டாடா ஹெக்ஸா புரோ எடிசன்
ஆட்டோமேட்டிக் சன்ரூஃப், முன்புற பார்க்கிங் சென்சார்கள், வயர்லெஸ் மொபைல் ஹோல்டர், டயர் பிரஷர் மானிட்டரிங் சிஸ்டம், ஆம்பியன்ட் மூட் லைட்டிங் ஆகியவை கொடுக்கப்படுகின்றன. இந்த புரோ எடிசனுக்கு ரூ.99,999 கூடுதல் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா நெக்ஸான் புரோ எடிசன்
பாப் அப் சன்ரூஃப், மேக்னெட்டிக் சன் ஷேடு, ஆம்பியன்ட் மூடு லைட் சிஸ்டம், முன்புற பார்க்கிங் சென்சார்கள், வாகனத்தின் இருப்பிடம் மற்றும் நகர்வை கண்காணிக்கும் தொழில்நுட்பம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த மாடலுக்கு ரூ.37,999 விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா டிகோர் புரோ எடிசன்
இந்த மாடலில் சன்ரூஃப், ஆம்பியன்ட் மூட் லைட் சிஸ்டம், சன் ஷேடுகள், ஆர்ம் ரெஸ்ட், வாகனத்தை கண்காணிக்கும் சாதனம் ஆகியவை வழங்கப்படுகின்றன. இந்த மாடலுக்கு ரூ.29,999 கூடுதல் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா டியாகோ புரோ எடிசன்
சன்ரூஃப், ஆம்பியன்ட் மூட் லைட் சிஸ்டம், சன் ஷேடுகள், உட்புற ரியர் வியூ மிரரில் திரையுடன் இணைக்கப்பட்ட ரியர் வியூ கேமரா, ஆர்ம் ரெஸ்ட் ஆகியவை இந்த மாடலில் வழங்கப்படுகிறது. கூடுதலாக ரூ.29,999 விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications








