சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

சினிமா பட பாணியில் டாடா நிறுவனம் அதன் புத்தம் புதிய அல்ட்ராஸ் மாடல் காரின் டெயில் பகுதி வீடியோவை டீசராக வெளியிட்டுள்ளது. ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருக்கும் அதன் ரசிகர்களுக்கு இந்த டீசர், அதன்மீது மேலும் மோகத்தை அதிகரித்துள்ளது.

சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான டாடா மோட்டார்ஸ் கடந்த ஆண்டு நொய்டாவில் நடைபெற்ற சர்வதேச ஆட்டோ எக்ஸ்போவில் தனது புத்தம் புதிய ஹேட்ச்பாக் கான்செப்ட் மாடல் காரை காட்சிக்கு வைத்திருந்தது. பெயரிடப்படாத அந்த கார் 45எக்ஸ் பிரிமீயம் என்று அழைக்கப்பட்டது.

சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

இந்த புதிய 45எக்ஸ் கான்செப்ட் மாடல் காரை அடுத்த மாதம் ஜெனிவாவில் நடைபெறும் சர்வதேச வாகன கண்காட்சியில் டாடா நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக தற்போது இந்த காரை தீவிர சாலை பரிசோதனைக்கு உட்படுத்தி வருகிறது.

சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

இந்த நிலையில், இந்த புத்தம் புதிய ஹேட்ச்பாக் மாடல் காரின் பெயரை அந்நிறுவனம் அதிகாரப் பூர்வமாக அதன் டுவிட்டர் பக்கத்தில் கடந்த 25ம் தேதி அறிவித்தது. அவ்வாறு, அந்த காருக்கு அல்ட்ராஸ் என்னும் பெயரை டாடா நிறுவனம் சூட்டியிருந்தது. அல்பட்ராஸ் என்னும் கடல் பறவையின் பெயரைத் தழுவி இந்த புதிய மாடலுக்கு அல்ட்ராஸ் என்னும் பெயரை வைத்திருப்தாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

அல்பட்ராஸ் பறவைகள் பல நாட்கள் தொடர்ச்சியாக பறந்து கண்டம் விட்டு கண்டம் கடக்கும் திறன் கொண்டவை. அதேபோல், இந்த காரும் குறைந்த எரிபொருளில் நீண்ட மைலேஜ் கொடுக்கும் என்று கூறப்படுகிறது. ஆகையால், டாடா நிறுவனம் இந்த காருக்கு அல்ட்ராஸ் எனப் பெயரிடப்பட்டுள்ளது. பெயருக்கு ஏற்பவே அல்ட்ராஸ் பறவையைப் போல் காட்சியளிப்பது அதன் சிறப்பாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த புத்தம் புதிய அல்ட்ராஸ் காரின் டெயில் பகுதியின் கவர்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் வீடியோ டீசரை டாடா நிறுவனம் வெளியிட்டுள்ளது. அல்ட்ராஸின் ரம்மியமான தோற்றத்தை வெளிப்படுத்தும் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே பெரும் எதிர்பார்ப்புகளுடன் காத்திருக்கும் அதன் ரசிகர்களுக்கு இந்த டீசர், அதன்மீது மேலும் மோகத்தை அதிகரித்துள்ளது.

சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

அல்ட்ராஸ் காரை டாடா நிறுவனம் அதன் ஹாரியர் எஸ்யூவியைத் தொடர்ந்து இம்பேக்ட் 2.0 டிசைனில் உருவாக்கியுள்ளது. இதனால், ஹாரியர் எஸ்யூவியில் உள்ள டிசைன், அம்சங்கள் ஆகியவை இந்த மாடலிலும் இடம்பெற உள்ளன. மேலும், இந்த கார் டாடா மேட்டார்ஸ் நிறுவனத்தின் ஆல்ஃபாஆர்க் என்ற கட்டமைப்பு கொள்கைமூலம் உருவாக்கப்பட்டு உள்ளது.

சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

இதைத்தொடர்ந்து, இந்த காரில் பெரிய அளவிலான இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆட்டோமேடிக் கிளைமேட் கன்ட்ரோல், ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே உட்பட பல்வேறு அதிநவீன வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும், எல்இடி பகல்நேர மின் விளக்கு, எல்இடி ஹெட்லைட், ரம்மியமான எல்இடி டெயில் லைட், ஸ்டியரிங்கில் ஆடியோ கன்ட்ரோல்கள், கீ லெஸ் என்ட்ரி என பல்வேறு சொகுசு வசதிகளும் இதில் இடம் பெற்றுள்ளது.

சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

இந்த கார் பெட்ரோல், டீசல் என இரு எஞ்ஜின்களிலும் கிடைக்கும். அதன்படி, 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்ஜின் மற்றும் 1.5 லிட்டர் டீசன் என இரண்டு ஆப்ஷன்களில் இது வெளி வரும். இதில், டாடாவின் நெக்ஸானுக்குக் கொடுக்கப்பட்டுள்ள அதேபோன்ற எஞ்ஜின்கள் பொருத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நெக்ஸானில் உள்ள 1.2 லிட்டர், 3 சிலிண்டர் டர்போ பெட்ரோல் எஞ்ஜினானது, 108 பிஎச்பி பவரையும் 175என்எம் டார்க்யூவையும் வெளிப்படுத்துகிறது. இதேபோல், 1.5 லிட்டர் டர்போ எஞ்ஜினானது, 108பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க்யூவையும் வெளிப்படுத்துகிறது.

சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

மேலும், முக்கிய அம்சமாக 6 ஸ்பீடு கியர்பாக்ஸ், ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் இது கிடைக்கும். தொடர்ந்து, சிறப்பான பாதுகாப்பு வசதியை ஏற்படுத்துக் கொடுக்கும் வகையில் ஏர்பேக்ககுள், ரியர் பார்க்கிங் கேமிரா, சென்சார், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்டவை இதில் பொருத்தப்பட்டுள்ளன. இது பயணிகளின் பாதுகாப்பான மற்றும் சொகுசான பயணத்தை உறுதி செய்யும்.

சினிமா பாணியில் டீசர் வெளியிட்ட டாடா: அட்டகாசமாக இருப்பதாக ரசிகர்கள் பூரிப்பு!

இந்த டாடாவின் புத்தம் புதிய அல்ட்ராஸ் மாடல் கார் ரூ. 5.5 லட்சம் எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் சந்தையில் களமிறங்கினால், மாருதியின் பலேனோ, ஃபோக்ஸ்வேகனின் போலோ, ஹோண்டாவின் ஜாஸ் மற்றும் ஹூண்டாய் நிறுவனத்தின் எலைட் ஐ20 ஆகிய கார்களுடன் கடுமையான போட்டியைச் சந்திக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from DriveSpark

Article Published On: Wednesday, February 27, 2019, 18:59 [IST]
English summary
TATA Motors Released Altroz Rear Teaser Video. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+