மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்.. ஆகஸ்ட்டில் விற்பனையான டாப்-10 கார்கள்

2019 ஆகஸ்ட்டில் அதிகம் விற்பனையான முன்னணி நிறுவன கார்களின் லிஸ்ட்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவாறு உள்ளன. அந்த வகையில் தற்போது டாடா மோட்டார்ஸின் டாப்-10 கார்களின் பெயர்கள் வெளிவந்துள்ளன.

மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... ஆகஸ்ட்டில் விற்பனையான டாப்-10 கார்களின் லிஸ்ட் இதோ

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் விற்பனையில் கடந்த மாதம் முதலிடத்தை பிடித்துள்ள கார் டாடா டியாகோ. கடந்த ஆகஸ்ட்டில் 3,037 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த கார் மாடல், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் 9,277 யூனிட்கள் விற்பனையாகி இருந்தது. ஒப்பிடுகையில், கடந்த ஆண்டு ஆகஸ்ட்டை விட 67.27 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... ஆகஸ்ட்டில் விற்பனையான டாப்-10 கார்களின் லிஸ்ட் இதோ

இந்த காருக்கு அடுத்தப்படியாக இரண்டாவது இடத்தில் டாடா நெக்ஸான் உள்ளது. கடந்த மாதத்தில் இந்த கார் 2,275 விற்பனையை பதிவு செய்துள்ளது. இருந்தப்போதிலும் இந்த எண்ணிக்கை கடந்த ஆண்டை விட குறைவு தான்.

மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... ஆகஸ்ட்டில் விற்பனையான டாப்-10 கார்களின் லிஸ்ட் இதோ

மூன்றாவது இடத்தில் 833 யூனிட்கள் விற்பனையாகி டாடா டிகோர் உள்ளது. ஸ்டாண்டர்ட், இவி என இரு வடிவங்களில் விற்பனையாகிவரும் இந்த காரும் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... ஆகஸ்ட்டில் விற்பனையான டாப்-10 கார்களின் லிஸ்ட் இதோ

இந்திய மார்கெட்டில் 635 யூனிட்கள் விற்பனையாகி டாடா ஹாரியர் நான்காவது இடத்தை பிடித்தாலும் இந்த வருட துவக்கத்தில் அறிமுகமான இந்த கார் மற்ற மாதங்களுடன் ஒப்பிடும்போது மிக பெரிய வீழ்ச்சியை அடைந்துள்ளது. மிட்-சைஸ் எஸ்யூவி மாடலான இதற்கு போட்டியாக, கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டார் என பல சிறப்பம்சங்களை கொண்ட கார்கள் சந்தைக்கு வந்ததும் இந்த மிக பெரிய வீழ்ச்சிக்கு காரணம்.

Rank Models Aug-19 Aug-18 YoY diff %
1 Tata Tiago 3,037 9,277 -67.26
2 Tata Nexon 2,275 4,499 -49.43
3 Tata Tigor 833 1,646 -49.39
4 Tata Harrier 635 - -
5 Tata Zest 294 964 -69.50
6 Tata Hexa 136 759 -82.08
7 Tata Safari 83 515 -83.88
8 Tata Bolt 23 127 -81.89
9 Tata Sumo - 623 -
10 Tata Nano - 10 -
மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... ஆகஸ்ட்டில் விற்பனையான டாப்-10 கார்களின் லிஸ்ட் இதோ

இந்த வரிசையில் ஐந்தாவது இடம் டாடா ஜெஸ்ட் காருக்கு கிடைத்துள்ளது. ஆகஸ்ட்டில் 294 யூனிட்கள் விற்பனையாகியுள்ள இந்த கார் இந்திய மார்க்கெட்டில் நீண்ட வருடங்களாக விற்பனை செய்யப்பட்டு வருவதால் வாடிக்கையாளர்கள் இந்த காரை பெரிதாக கண்டுகொள்வது இல்லை.

மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... ஆகஸ்ட்டில் விற்பனையான டாப்-10 கார்களின் லிஸ்ட் இதோ

டாடா ஹெக்ஸா, சஃபாரி மற்றும் போல்ட் இந்த லிஸ்ட்டில் முறையே 136, 83, 23 யூனிட்கள் விற்பனையாகி 6வது, 7வது, 8வது இடங்களை பிடித்துள்ளன. இதற்கு அடுத்த இரு இடங்களை பிடித்துள்ள டாடா சுமோ மற்றும் டாடா நானோ கார்கள் தயாரிப்பதை டாடா நிறுவனம் நிறுத்திவிட்டது.

மேலும் இவ்விரு கார்களிலும் தற்போது அனைத்து எஸ்யூவி கார்களும் உட்படுத்தப்பட்டு வரும் மாசு உமிழ்வு மற்றும் பாதுகாப்பு உள்ளிட்ட டெஸ்ட்டுகளுக்கு ஏற்றாற் போல் அப்டேட்டும் செய்யப்படவில்லை. இதில் டாடா சுமோ காரை 25 ஆண்டுகளுக்கு பிறகு தயாரிப்பதை டாடா நிறுவனம் நிறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது. அதன் விவரம் கீழேயுள்ள லிங்கில் உள்ளது.

மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்துவரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம்... ஆகஸ்ட்டில் விற்பனையான டாப்-10 கார்களின் லிஸ்ட் இதோ

ஆட்டோமொபைல்களின் விற்பனை கடந்த 10 மாதங்களாகவே மிக பெரிய வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. இதில் அதிக அளவில் அடிப்பட்டது, டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தான். அதை இந்த செய்தியில் கொடுக்கப்பட்டுள்ள அட்டவணையை பார்த்தாலே தெரியும்.

Most Read Articles
English summary
Tata Car Sales In August: A Model-Wise Sales Performance Report
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X