1,600 தொழிலாளர்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்பும் டாடா மோட்டார்ஸ்..

இந்திய ஆட்டோமொபைல் துறை கிட்டத்தட்ட 1 வருடமாகவே மிகுந்த சரிவை கண்டு வருகிறது. இதற்கு டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மட்டும் என்ன விதிவிலக்கா. இதனை சமாளிக்க தனது 1,600 தொழிலாளர்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வை வழங்கி அதிரடி நடவடிக்கையில் இந்நிறுவனம் இறங்கியுள்ளது.

பயணிகள் மற்றும் சரக்கு வாகனங்களின் தயாரிப்பு பிரிவு என வெவ்வேறான துறைகளில் உள்ள 1,600 தொழிலாளர்களுக்கு தான் கட்டாய ஓய்வு அளிக்கப்படவுள்ளது. இந்த நடவடிக்கைக்கு அவர்களுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான சம்பளமும் ஒரு காரணம் தான்.

1,600 தொழிலாளர்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்பும் டாடா மோட்டார்ஸ்..

டாடா நிறுவனம் இந்த 1,600 தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு முடிவை எடுத்தது மட்டுமில்லாமல் சில மாதங்களுக்கு முன்பு ஜாகுவார்- லேண்ட் ரோவர் கார் தயாரிப்பிற்காக கூடுதலாக தொழிலாளர்களை சேர்த்திருந்தது.

டாடா நிறுவனம் தனது தொழிலாளர்களுக்கு மொத்த விற்பனை தொகையில் 5.9 சதவீதத்தில் இருந்து 10.7 சதவீதத்தை சம்பளமாக கடந்த ஜூலை- செப்டம்பர் காலாண்டு இடைவெளியில் வழங்கியுள்ளது. கடந்த ஆண்டில் 109.4 கோடி ரூபாய் இலாபத்துடன் செயல்பட்டு வந்த இந்நிறுவனம் இந்த வருடத்தில் சுமார் 44 சதவீத வீழ்ச்சியுடன் ரூ.1,281.97 கோடி நஷ்டத்துடன் செயல்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டை விட இந்தாண்டு சரக்கு வாகனங்களின் விற்பனை 59 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மொத்த விற்பனையுடன் ஒப்பிட்டு பார்த்தால் சரக்கு வாகனங்களின் வீழ்ச்சி 41.2 சதவீதமாகும். ஆனால் இந்த நஷ்டம் மற்றும் வீழ்ச்சியை எல்லாம் அடுத்த பொருளாதார ஆண்டில் அறிமுகப்படுத்தப்படவுள்ள பிஎஸ்6 வாகனங்களின் விற்பனை சரி செய்துவிடும் என டாடா நிறுவனம் நம்பிக்கையுடன் உள்ளது.

1,600 தொழிலாளர்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்பும் டாடா மோட்டார்ஸ்..

தொழிலாளர்களின் சம்பளத்தையும் கணிசமாக குறைத்து கொண்டு வரும் இந்நிறுவனம், கடந்த 2017ஆம் ஆண்டிலும் இதுபோல் சில தொழிலாளர்களுக்கு கட்டாய ஓய்வு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது. நிரந்தர தொழிலாளர்களும் டாடா நிறுவனம் அளிக்கும் சில சலுகைகளுடன் ஒய்வை ஏற்காதவர்களும் டாடா நிறுவனத்தின் இந்த கட்டாய ஓய்வு திட்டத்தில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர்.

தொழிற்சாலைகளில் உள்ள பல துறைகளின் தொழிலாளர்களுக்கு டாடா நிறுவனம் இந்த விஆர்எஸ் திட்டத்தை வழங்கியிருந்தாலும் என்ஜினீயரிங் பிரிவில் உள்ள தொழிலாளர்களின் எண்ணிக்கையை குறைக்க தான் நேரடியாக தீவிரம் காட்டி வருகிறது. அதிலும், இன்னும் சில மாதங்களில் ஓய்வு பெறவுள்ள வயதான என்ஜினீயரிங் தொழிலாளர்களை தான் சில சலுகைகளுடன் வீட்டிற்கு அனுப்ப தீவிரம் காட்டி வருகிறது.

1,600 தொழிலாளர்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்பும் டாடா மோட்டார்ஸ்..

அடுத்த ஆண்டு ஏற்படவுள்ள அதிகளவிலான கார்களின் தேவைக்கு மத்தியில் தொழிலாளர்களுக்கு அதிகளவில் சம்பளத்தை ஒதுக்க இயலாது என்பதால் தான் டாடா நிறுவனம் இவ்வாறான முடிவை எடுத்துள்ளதாக பொருளாதார வல்லுனர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். பிஎஸ்6 கார்களின் மிக முக்கியமான தயாரிப்பு வேலைகள், அவற்றின் அறிமுகத்திற்கு சில வாரங்களுக்கு முன்பு தான் தொடங்கப்படவுள்ளன. இதனால் டாடா நிறுவனத்தின் இந்த முடிவு மிக சரியே எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.

டாடா நிறுவனத்தின் இந்த விஆர்எஸ் திட்டம் 2023ஆம் ஆண்டு வரை தொடரும் என்றே தெரிகிறது. இந்த ஒழுங்குமுறையால் கார்களின் தரம் உயரும் என்றாலும் தேவை ஏற்படும் நேரத்தில் இந்த ஒழுங்குமுறை எதிர்மறையான விமர்சனங்களையும் உருவாக்கக்கூடும். கடந்த ஏப்ரல் மாதத்தில் புதிய பாதுகாப்பு அம்சங்களை கார்களில் புகுத்தியிருந்த டாடா நிறுவனம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் பிஎஸ்6-க்கு இணக்கமான தயாரிப்புகளை வெளியிடவுள்ளது.

1,600 தொழிலாளர்களுக்கு வலுக்கட்டாயமாக ஓய்வளித்து வீட்டிற்கு அனுப்பும் டாடா மோட்டார்ஸ்..

இவை மட்டுமில்லாமல் சராசரியான எரிபொருள் திறனுக்காக சில கடுமையான சட்டங்களை 2022ஆம் ஆண்டிலும், ட்ரைவிங் உமிழ்வு சோதனைகளை 2023ஆம் ஆண்டிலும் இந்நிறுவனம் கொண்டுவரவுள்ளது. இதனால் நிறைய பிரிவுகளில் உள்ள கார்கள் விலையுயர்ந்த அந்தஸ்த்தையும், வாடிக்கையாளர்களின் அதிகப்படியான தேவையையும் பெறவுள்ளன.

ஆட்டோமொபைல் துறை சந்தித்துவரும் கடுமையான பொருளாதார நெருக்கடியால் தான், டாடா நிறுவனம் இவ்வாறு 1,600 தொழிலாளர்களுக்கு கட்டாயமாக ஓய்வளிக்கவுள்ளது. இந்த நெருக்கடிக்கு தொடர்ச்சியாக அடுத்த ஆண்டில் அமலாகவுள்ள புதிய மாசு உமிழ்வு விதிக்கு ஏற்ப வாகனங்களை தயாரிக்க வேண்டும் என்பதால் டாடா நிறுவனத்தின் நிலைமை மிகவும் மோசமாகியுள்ளது.

More from DriveSpark

Article Published On: Monday, December 2, 2019, 13:39 [IST]
English summary
Tata Motors To Offer Voluntary Retirement Scheme To 1,600 Employees: Engineering To Be Hit Worst
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+