கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகிறது புதிய டாடா நெக்ஸான் - விபரம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகிறது புதிய டாடா நெக்ஸான் - விபரம்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் வாடிக்கையாளர்களின் மதிப்புக்குரிய தேர்வுகளில் ஒன்றாக டாடா நெக்ஸான் மாறி இருக்கிறது. கிராஷ் டெஸ்ட்டில் சிறந்த பாதுகாப்பு தர மதிப்பீட்டை பெற்றது முதல் இந்த காரின் மதிப்பு கூடுதலாகி இருப்பது விற்பனை மூலமாக தெரிந்து கொள்ளலாம்.

கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகிறது புதிய டாடா நெக்ஸான் - விபரம்!

ஆனால், புதிய வரவுகளால் சந்தைப் போட்டி அதிகரித்து வருவதால், நெக்ஸான் காரில் கூடுதல் சிறப்பம்சங்களை கொடுக்க இருக்கிறது டாடா.அதன்படி, வாடிக்கையாளர்களின் கருத்துக்களின் அடிப்படையில் சில வசதிகளை தொடர்ந்து சேர்த்து வருகிறது.

கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகிறது புதிய டாடா நெக்ஸான் - விபரம்!

அந்த வகையில், க்ரூஸ் கன்ட்ரோல் வசதியுடன் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது தெரியவந்துள்ளது. தற்போது க்ரூஸ் கன்ட்ரோல் வசதி கொண்ட டாடா நெக்ஸான் கார்கள் சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளது.

கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகிறது புதிய டாடா நெக்ஸான் - விபரம்!

இந்த க்ரூஸ் கன்ட்ரோல் வசதியானது விலை உயர்ந்த டாப் வேயண்ட்டுகளில் வழங்கப்படும். அதாவது, டாடா நெக்ஸான் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் வேரியண்ட்டுகளில் இந்த க்ரூஸ் கன்ட்ரோல் வசதி அளிக்கப்படும்.

கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகிறது புதிய டாடா நெக்ஸான் - விபரம்!

வரும் பண்டிகை காலத்தில் இந்த புதிய மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது. அத்துடன், தற்போது டாடா நெக்ஸான் கார் 8 வண்ணத் தேர்வுகளில் வழங்கப்பட்டு வருகிறது. புதிய மாடலில் மேலும் சில புதிய வண்ணத் தேர்வுகள் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகிறது புதிய டாடா நெக்ஸான் - விபரம்!

எஞ்சின் தேர்வுகளில் மாற்றம் இருக்காது. தற்போது வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகளில் கிடைக்கும். இதில், பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும்.

கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகிறது புதிய டாடா நெக்ஸான் - விபரம்!

டீசல் எஞ்சின் அதிகபட்சமாக 108 பிஎச்பி பவரையும், 260 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினும் 6 ஸ்பீடு மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். எஸ்யூவிகளில் சிறப்பான மைலேஜை வழங்கும் மாடலாகவும் பெயர் பெற்றிருக்கிறது.

கூடுதல் அம்சங்களுடன் அறிமுகமாகிறது புதிய டாடா நெக்ஸான் - விபரம்!

டாடா நெக்ஸான் எஸ்யூவி கார் ரூ.6.58 லட்சம் முதல் ரூ.11 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைக்கிறது. மாருதி பிரெஸ்ஸா, ஹூண்டாய் வெனியூ, மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார்களுடன் போட்டி போடும்.

Image Courtesy: Siddharth Patil/Facebook

More from DriveSpark

Article Published On: Friday, August 2, 2019, 18:03 [IST]
English summary
India based vehicle manufacturer Tata Motors has been proactively listening to customers and doing everything they can to implement suggestions. We know that the company is working on updating the Nexon SUV. New spy images show that the company is currently testing the cruise control module.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+