மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியின் மின்சார மாடல் மிக விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

காம்பேக்ட் எஸ்யூவி மார்க்கெட்டில் டாடா நெக்ஸான் மிகச் சிறந்த தேர்வுகளில் ஒன்றாக இருந்து வருகிறது. டிசைன், நவீன தொழில்நுட்ப வசதிகள், செயல்திறன் மிக்க எஞ்சின் தேர்வுகளுடன் மிகச் சரியான விலையில் கிடைப்பதால் இந்த எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

இந்த நிலையில், டாடா டிகோர் எலெக்ட்ரிக் காரை அண்மையில் விற்பனைக்கு அறிமுகம் செய்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம், அடுத்து பேட்டரியில் இயங்கும் டாடா நெக்ஸான் எஸ்யூவியையும் அறிமுகம் செய்ய தயாராகிவிட்டது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

டாடா நெக்ஸான் மின்சார கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதை, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மின்சார போக்குவரத்துப் பிரிவு உயர் அதிகாரி சைலேஷ் சந்திரா இன்று உறுதி செய்துள்ளார். அடுத்த ஆண்டின் ஜனவரி - மார்ச் இடையிலான முதல் காலாண்டில் புதிய டாடா நெக்ஸான் மின்சார கார் விற்பனைக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவித்துள்ளார்.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

மேலும், ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் இடையிலான விலையில் புதிய டாடா நெக்ஸான் மின்சார மாடல் வர இருப்பதும் தெரிய வந்துள்ளது. இதனால், ஹூண்டாய் கோனா மற்றும் விரைவில் வர இருக்கும் எம்ஜி இ-இசட்எஸ் எலெக்ட்ரிக் கார்களுக்கு கடும் போட்டியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

வரும் பிப்ரவரி மாதம் நடைபெற இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு, தொடர்ந்து வரும் மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என்று தெரிகிறது.

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த ஸிப்ட்ரான் மின்சார கார் தொழில்நுட்பத்துடன் வரும் முதல் டாடா கார் என்ற பெருமையையும் நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடல் பெற இருக்கிறது.

MOST READ: எடப்பாடியின் கைராசி... ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் காரின் விற்பனை ஆஹா, ஓஹோ!

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

டாடா நெக்ஸான் காரின் ஸிப்ட்ரான் தொழில்நுட்ப தொகுப்பில் இடம்பெற இருக்கும் திறன் வாய்ந்த பேட்டரி மற்றும் மின் மோட்டார் இணைந்து அதிசிறந்த செயல்திறனை வெளிப்படுத்தும் என்ற ஆவல் இருந்து வருகிறது. இதன் பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும்.

MOST READ: ஷோரூமில் இருந்து விலை உயர்ந்த பைக்கை நைசாக லவட்டி சென்ற பலே கொள்ளையன்... எப்படி தெரியுமா?

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

டாடா நெக்ஸான் மின்சார எஸ்யூவியில் இடம்பெறும் பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வரை வாரண்டியும் வழங்கப்படும். இந்த பேட்டரியானது தூசு மற்றும் தண்ணீர் புகாத அமைப்புடன் ஐபி67 என்ற தர நிர்ணயத்திற்கு இணையாக இருக்கும்.

MOST READ: ஆபத்தில் உதவிய ஜீப்: போலீஸார் செய்த நன்றி கடனால் உரிமையாளர் அதிர்ச்சி!

மிக விரைவில் விற்பனைக்கு வருகிறது டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் மின்சார மாடலானது அடுத்த ஆண்டு மத்தியில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. அதற்கு முன்னதாகவே, புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் மாடலானது விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது குறிப்பிடத்தக்கது. மஹிந்திரா எக்ஸ்யூவி300 எஸ்யூவியின் எலெக்ட்ரிக் மாடலும் 300 கிமீ தூரம் ரேஞ்ச் கொண்டது குறிப்பிடத்தக்கது.

Most Read Articles

English summary
Tata Motors has revealed that the Nexon EV will be launched in India by before March, 2020.
Story first published: Thursday, October 3, 2019, 13:49 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X