டாடா நெக்ஸான் எலக்ட்ரிக் காரின் இந்திய அறிமுகம் தேதியுடன் வெளியானது...
டாடா மோட்டார்ஸ் விரைவில் நெக்ஸான் மாடலின் எலக்ட்ரிக் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தவுள்ளதாக ஏற்கனவே நமது தளத்தில் கூறியிருந்தோம். பிறகு இதன் அறிமுகம் அடுத்த மாதம் டிசம்பரில் நடைபெறவுள்ளது என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது இந்த காரின் அறிமுக தேதி டிசம்பர் 16 என நம்பத்தகுந்த வட்டாரங்களில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த மாதம் 16ஆம் தேதியில் நெக்ஸானின் இந்த எலக்ட்ரிக் கார் அறிமுகமானாலும் அடுத்த ஆண்டில் இருந்து தான் விற்பனை இந்திய மார்கெட்டில் துவங்கும் என தெரிகிறது. டாடா நிறுவனத்தின் ஜிப்ட்ரான் தொழிற்நுட்பத்தை கொண்ட முதல் எலக்ட்ரிக் காராக இந்த நெக்ஸான் கார் விற்பனையாக உள்ளது.

டாடா நிறுவனம் இந்த எலக்ட்ரிக் காரில் ஒரே சார்ஜில் 300 கிலோமீட்டர் ஓடக்கூடிய திறனை இதன் பேட்டரிக்கு வழங்கியுள்ளது. ஜிப்ட்ரான் தொழிற்நுட்பம் புகுத்தப்பட்டுள்ளதால், பேட்டரி மிக விரைவாக சார்ஜாகிவிடும். இதன் பேட்டரிக்கு 300 வோல்ட் திறன் கொண்ட எலக்ட்ரிக் மோட்டார் ஆற்றலை வழங்கும்.

இந்த நெக்ஸான் இவி காரின் பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டாருக்கு ஐபி67 சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இதனால் இவை இரண்டும் அவ்வளவு எளிதாக தூசி மற்றும் நீரால் பாதிப்பு அடையாது. இதனாலேயே டாடா நிறுவனம் இந்த பேட்டரி மற்றும் எலக்ட்ரிக் மோட்டார் அமைப்புக்கு எட்டு வருட உத்தரவாதத்தை வழங்கியுள்ளது.

மேலும் இந்நிறுவனம் ஏற்கனவே இந்தியா முழுவதும் 300 வேகமாக சார்ஜிங் செய்யக்கூடிய மையங்களை நிறுவ இருப்பதாக கூறியிருந்தது. இதன் வேலைகளும் அடுத்த மாதத்தில் இருந்து தொடங்கப்பட்டுவிட்டால் டாடா நிறுவனத்தின் எலக்ட்ரிக் கார்களின் விற்பனை சூடுப்பிடிக்க ஆரம்பித்துவிடும்.

இந்த நெக்ஸான் இவி கார் மட்டுமல்லாமல் அடுத்த வருட டிசம்பருக்குள் நான்கு எலக்ட்ரிக் கார்களை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்திவிட வேண்டும் என டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. நெக்ஸானின் பெட்ரோல் மற்றும் டீசல் வெர்சன் மாடல்களின் டிசைன்களில் தான் இந்த காரும் அறிமுகமாகவுள்ளது.

டிசைன்களில் எந்த மாற்றமும் இல்லாவிட்டாலும் க்ரில், பம்பர்ஸ், ஹூட் போன்ற பாகங்கள் சிறிய மாற்றத்தை கொண்டுள்ளன. மேலும் உட்புற பாகங்கள் தற்போதைய மாடலை விட அப்டேட்டாக வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்த அப்டேட்டில் முக்கிய அம்சமாக ஸ்மார்ட்போன்களை உபயோகிப்பதற்காக இணையதள வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்ஷோரூம்களில் ரூ.15 லட்சத்திலிருந்து விற்பனையாகலாம் என கணிக்கப்பட்டுள்ள நெக்ஸானின் இந்த இவி கார் சந்தையில் விரைவில் அறிமுகமாக உள்ள மற்ற எலக்ட்ரிக் கார்களான ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் இவி போன்ற மாடல்களுக்கு கடுமையான போட்டியினை கொடுக்கும் என்பது உறுதி.

இந்திய வாடிக்கையாளர்கள் அனைவரும் கவனிக்கும் மாடலாக மாறியுள்ள டாடாவின் இந்த நெக்ஸான் இவி எஸ்யூவி மாடலின் விலையும் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்திய போக்குவரத்து, பசுமையான சுற்றுச்சூழலுக்கு மாற இந்த எலக்ட்ரிக் கார் சிறந்த முறையில் உதவிக்கரமாக இருக்கும்.


Click it and Unblock the Notifications