புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

எலெக்ட்ரிக் கார்களுக்கான மார்க்கெட் சூடுபிடிக்கத் துவங்கி இருக்கிறது. அதிலும், எஸ்யூவி ரக எலெக்ட்ரிக் கார்களுக்கான வரவேற்பு அதிகம் இருக்கிறது. அண்மையில் வந்த ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு கிடைத்த வரவேற்பு சான்றாக மாறி இருக்கும் நிலையில், அடுத்து எம்ஜி நிறுவனத்தின் இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவியும் அண்மையில் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டு விரைவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

ஹூண்டாய் கோனா மற்றும் எம்ஜி இசட்எஸ் ஆகிய இரண்டு எலெக்ட்ரிக் கார்களுமே ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சம் வரையிலான பட்ஜெட் மார்க்கெட்டை சேர்ந்தவை. இந்த நிலையில், எஸ்யூவி ரகத்தில் விலை குறைவான தேர்வாக டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வர இருக்கிறது. இதனால், நெக்ஸான் எலெக்ட்ரிக் மீது அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

காரணம், இந்த புதிய எலெக்ட்ரிக் கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் இடையிலான பட்ஜெட்டில் வரும் என்று ஏற்கனவே டாடா மோட்டார்ஸ் அதிகாரி தெரிவித்திருப்பதால், இதுதான் விலை குறைவான எலெக்ட்ரிக் எஸ்யூவி மாடலாக இருக்கும் என்பதால், அதிக ஆவல் எழுந்துள்ளது.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

இந்த நிலையில், டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட இருக்கும் தேதி விபரம் வெளியாகி இருக்கிறது. அதன்படி, வரும் 19ந் தேதி இந்த கார் இந்தியாவில் பொது பார்வைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

டாடா நெக்ஸான் பெட்ரோல், டீசல் மாடல்கள் புதுப்பொலிவுடன் விரைவில் விற்பனைக்கு அறிமுகமாக இருக்கின்றன. இதன் அடிப்படையிலேயே இந்த புதிய எலெக்ட்ரிக் மாடலும் வர இருக்கிறது. அதாவது, டிசைன் அம்சங்கள் நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் மாடலை தழுவி இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

இந்த காரில் இரட்டை அறை அமைப்புடைய ஹெட்லைட் க்ளஸ்ட்டர்கள், யு வடிவிலான எல்இடி பகல்நேர விளக்குகள், புதிய க்ரில் அமைப்பு மற்றும் பம்பர் அமைப்புடன் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

இந்த காரில் முதல்முறையாக ஸிப்ட்ரான் என்ற தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. பேட்டரி, மின் மோட்டார் மற்றும் டிரான்ஸ்மிஷன் ஆகியவை ஆற்றல் வாய்ந்த தொழில்நுட்பத்தை இந்த ஸிப்ட்ரான் மூலமாக வழங்கும்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

இந்த காருக்காக பிரத்யேக ஸ்மார்ட்ஃபோன் செயலியும் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இதன்மூலமாக, காரின் பேட்டரியில் இருக்கும் சார்ஜ் அளவு, எவ்வளவு தூரம் பயணிக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பெற முடியும்.

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் அறிமுக தேதி விபரம்

இந்த காரில் கொடுக்கப்பட இருக்கும் லிக்யூடு கூல்டு லித்தியம் அயான் பேட்டரிகளை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும் என்று தெரிகிறது. இந்த பேட்டரிக்கு 8 ஆண்டுகள் வாரண்டி காலம் வழங்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் ஜனவரி - மார்ச் இடையிலான காலத்தில் இந்த புதிய நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. இது நிச்சயம் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த தேர்வாக அமையும் என்று நம்பலாம்.

Most Read Articles
English summary
Most awaited, Tata Nexon electric SUV to be unveiled in India on Dec 19, 2019.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X