டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் நேற்று வெளியிடப்பட்டது. தனிநபர் பயன்பாட்டுக்கு ஏற்ற பல்வேறு சிறப்பம்சங்களுடன் மிக சரியான பட்ஜெட்டில் எதிர்பார்க்கப்படும் இந்த கார் வாடிக்கையாளர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த காரின் வேரியண்ட்டுகளில் இடம்பெற்றிருக்கும் வசதிகள் விபரத்தை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் எக்ஸ்எம், எக்ஸ்இசட் ப்ளஸ், எக்ஸ்இசட் ப்ளஸ் லக்ஸ் ஆகிய மூன்று வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது. பேஸ் வேரியண்ட்டிலேயே மிக அசத்தலான வசதிகளை கொடுத்துள்ளது டாடா மோட்டார்ஸ். விரிவானத் தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

நெக்ஸான் எலெக்ட்ரிக் எக்ஸ்எம்

விலை குறைவான இந்த வேரியண்ட்டில் ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் ஏசி சிஸ்டம், டிரைவ் மோடுகள், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், கார்னரிங் ஸ்டெபிளிட்டி கன்ட்ரோல் சிஸ்டம், கனெக்டெட் கார் அப்ளிகேஷன், புஷ் பட்டன் ஸ்டார்ட், பவர் விண்டோஸ் வசதி, எலெக்ட்ரிக் டெயில் கேட் திறப்பு வசதி, 16 அங்குல ஸ்டீல் சக்கரங்களுடன் வீல் கவர் ஆகியவை கொடுக்கப்படுகிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

இசட்எஸ் ப்ளஸ்

இந்த நடுத்தர விலை கொண்ட வேரியண்ட்டில் கூடுதலாக கான்ட்ராஸ் கலர் ரூஃப் (கூரையில் பிரத்யேக வர்ண பூச்சு), 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள், 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா, லெதர் உறையுடன் கூடிய ஸ்டீயரிங் வீல் ஆகியவை உள்ளன.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

தவிரவும், ரிவர்ஸ் கேமராவுடன் பார்க்கிங் அசிஸ்ட், கார் வளைவில் திரும்பும்போது அந்த திசையை நோக்கி வெளிச்சத்தை பாய்ச்சும் கார்னரிங் வசதியுடன் பனி விளக்குகள், கையில் கடிகாரம் போல கட்டிக் கொள்ளக்கூடிய சாவிகொத்து ஆகியவை கொடுக்கப்படும். இந்த வேரியண்ட்டையே வாடிக்கையாளர்கள் அதிகம் தேர்வு செய்வதற்கான வாய்ப்பு உள்ளது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

இசட்எக்ஸ் ப்ளஸ் லக்ஸ்

விலை உயர்ந்த இந்த வேரியண்ட்டில் கூடுதலாக எலெக்ட்ரிக் சன்ரூஃப், ஆட்டோமேட்டிக் ஹெட்லைட்டுகள், ஆட்டோமேட்டிக் ரெயின் சென்சிங் வைப்பர்கள், லெதர் இருக்கைகள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. அதிக வசதிகளை எதிர்பார்ப்பவர்களுக்கு இது சிறந்த சாய்ஸாக அமையும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

பேட்டரி திறன்

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் காரில் 30.2kWh திறன் வாய்ந்த பேட்டரி தொகுப்பு கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும் வாய்ப்பை வழங்கும்.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

மின் மோட்டார்

இதன் மின் மோட்டார் அதிகபட்சமாக 129 பிஎஸ் பவரையும், 245 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 0 - 100 கிமீ வேகத்தை 9.9 வினாடிகளில் எட்டிவிடும். மிகச் சிறப்பான செயல்திறனை கொண்ட எலெக்ட்ரிக் கார் மாடலாக வர இருக்கிறது.

டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் வேரியண்ட் வாரியாக வசதிகள் விபரம்

எதிர்பார்க்கும் விலை

புதிய டாடா நெக்ஸான் எலெக்ட்ரிக் கார் ரூ.15 லட்சம் முதல் ரூ.17 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி மற்றும் விரைவில் வரும் எம்ஜி இசட்எஸ் எலெக்ட்ரிக் எஸ்யூவிகளைவிட விலை குறைவான தேர்வாக இருக்கும்.

More from DriveSpark

Article Published On: Friday, December 20, 2019, 10:51 [IST]
English summary
Tata Nexon electric SUV has been unveiled yesterday. Here are the variant wise features on the Tata Nexon EV.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+