கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியின் புதிய வேரியண்ட் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

மஹிந்திரா எக்ஸ்யூவி300 மற்றும் ஹூண்டாய் வெனியூ கார்களின் வருகை காரணமாக, டாடா நெக்ஸான் எஸ்யூவிக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. எனவே, போட்டியாளர்களைவிட சிறந்த மதிப்பை வழங்கும் விதத்தில் பல கூடுதல் சிறப்பம்சங்களை நெக்ஸான் காரில் அப்டேட் செய்து வருகிறது டாடா மோட்டார்ஸ்.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இதுவரையில் டாப் வேரியண்ட்டுகளில் 6.5 அங்குல தொடுதிரை சாதனத்திற்கு பதிலாக, 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. டாடா நெக்ஸான் எஸ்யூவியின் எக்ஸ்இசட், எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட்ஏ ப்ளஸ் ஆகிய வேரியண்ட்டுகளில் இந்த பெரிய தொடுதிரை அமைப்பு கிடைக்கும்.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

இந்த இன்ஃபோடெயின்மென்ட் சாதனம் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே செயலிகளை சப்போர்ட் செய்யும். போன் அழைப்புகள், நேவிகேஷன் மற்றும் மியூசிக் சிஸ்டத்தை வாய்ஸ் கமாண்ட் மூலமாக கட்டுப்படுத்தும் வசதியையும் அளிக்கும். வாட்ஸ் அப் மற்றும் குறுந்தகவல்களை வாய்மொழியாகவே பதில் அனுப்ப முடியும்.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

தவிரவும், நெக்ஸான் எஸ்யூவியின் XT வேரியண்ட்டிற்கு பதிலாக கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய XT+ என்ற புதிய வேரியண்ட் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

நெக்ஸான் எக்ஸ்டி ப்ளஸ் பெட்ரோல் வேரியண்ட்டிற்கு ரூ.8.02 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும், எக்ஸ்டி ப்ளஸ் டீசல் வேரியண்ட்டிற்கு ரூ.8.87 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையும் நிர்ணயிக்கப்பட்டு இருக்கிறது. ரூ.7,000 கூடுதல் விலையில் வந்துள்ளது.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

டாடா நெக்ஸான் எக்ஸ்டி ப்ளஸ் வேரியண்ட்டில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், பகல்நேர விலக்குகள், 8 ஸ்பீக்கர்கள் மற்றும் யுஎஸ்பி, ஆக்ஸ்போர்ட் மற்றும் புளூடூத் வசதியுடன் கூடிய மியூசிக் சிஸ்டம் வழங்கப்படுகிறது.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

ஓட்டுனர் இருக்கையின் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்யும் வசதி மற்றும் ரியர் ஏசி வென்ட்டுகள் இடம்பெற்றுள்ளன. ஆனால், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல், ஷார்க் பின் ஆன்டென்னா இல்லை என்பது கவனிக்க வேண்டிய விஷயம்.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

டாடா நெக்ஸான் எஸ்யூவியில் வேறு எந்த மாற்றங்களும் இல்லை. இந்த காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. இந்த எஞ்சின் தேர்வுகளுடன் மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளும் வழங்கப்படுகின்றன.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

டாடா நெக்ஸான் காரின் மேம்படுத்தப்பட்ட புதிய மாடலும் விரைவில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாடலில் க்ரூஸ் கன்ட்ரோல் வசதியும், பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகளும் அளிக்கப்படும் என்று தெரிகிறது.

கூடுதல் அம்சங்களுடன் டாடா நெக்ஸான் எஸ்யூவியில் புதிய வேரியண்ட் அறிமுகம்!

வரும் பண்டிகை காலத்தையொட்டி மேம்படுத்தப்பட்ட டாடா நெக்ஸான் கார் வர இருக்கிறது. அதற்கு முன்னதாகவே, தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் அவசரமாக விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. டாடா நெக்ஸான் கார் சிறந்த பாதுகாப்பு அம்சங்களை பெற்றிருப்பதும் குறிப்பிடத்தக்கது.

More from DriveSpark

Article Published On: Monday, August 5, 2019, 11:14 [IST]
English summary
Tata Motors has introduced the Nexon with a larger 7.0-inch touchscreen system instead of the 6.5-inch version. The 7.0-inch infotainment screen is available on the Nexon XZ, XZ+ and XZA+ variants.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+