டாடா நெக்ஸானையும் விட்டு வைக்காத பப்ஜி: வீடியோ

டாடா நிறுவனத்தின் நெக்ஸான் காரையும் விட்டுவைக்காமல் மொபைல் விளையாட்டான பப்ஜி ஆக்கிரமித்துள்ளது. இது தொடர்பான வீடியோ இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது. இது குறித்த தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா நெக்ஸானையும் விட்டு வைக்காத பப்ஜி: வீடியோ

பப்ஜி மொபைல் கேம் அயர்லாந்து நாட்டின் பிரெண்டன் கிரீன் என்பவரால் உருவாக்கப்பட்டு, தென்கொரிய நாட்டின் வீடியோ கேம் நிறுவனமான ப்ளூஹோல் நிறுவனம் கடந்த 2017ம் ஆண்டு பப்ஜி கணினி பதிப்பினை வெளியிட்டது இது சிறப்பான வரவேற்பை பெறாத நிலையில். கடந்த 2018ம் ஆண்டு மார்ச் மாதம் மொபைல் பதிப்பினை அறிமுகம் செய்தது பப்ஜி கார்ப்பரேஷன் நிறுவனம். பப்ஜி வெளிவந்த நாள் முதல் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது உலகம் முழுவதும் பப்ஜி புகழ் பெற்று மொபைல் கேம் நிறுவங்களில் முதல் இடத்தை பிடித்தது.

டாடா நெக்ஸானையும் விட்டு வைக்காத பப்ஜி: வீடியோ

இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை பப்ஜி அடிமையாக்கியது இதனால் கொலை, தற்கொலை போன்ற சம்பவங்கள் நிகழ்ந்ததால் பல நாடுகளில் பப்ஜி தடை செய்யப்பட்டது. இந்தியாவிலும் குஜராத் மாநிலத்தின் சில நகரகங்களில் பப்ஜி விளையாட தடைசெய்யப்பட்டது. இருப்பினும் இளைஞர்களை பப்ஜி மோகம் விட்டு வைக்கவில்லை.

டாடா நெக்ஸானையும் விட்டு வைக்காத பப்ஜி: வீடியோ

பப்ஜி பைகள்,டி-சர்ட்டுகள் என இளைஞர்களை வெகுவாக பப்ஜி கவர்ந்தது. நண்பர்களுடன் அல்லது உலகத்தில் முகம் தெரியாத நபர்களுடன் இனைந்து விளையாடும் வகையில் உள்ள பப்ஜி வடிவமைப்பே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பப்ஜி பைகள்,டி-சர்ட்டுகள் என இளைஞர்களை வெகுவாக பப்ஜி கவர்ந்தது. நண்பர்களுடன் அல்லது உலகத்தில் முகம் தெரியாத நபர்களுடன் இனைந்து விளையாடும் வகையில் உள்ள பப்ஜி வடிவமைப்பே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. பப்ஜி விளையாட்டினால் பல மோசமான சம்பவங்கள் நிகழ்ந்தாலும் புது நண்பர்கள், காதல் திருமணம் போன்ற சில நல்ல சம்பவங்களும் நடந்துள்ளதாக இளைஞர்கள் வட்டாரம் கூறிவருகின்றனர்.

டாடா நெக்ஸானையும் விட்டு வைக்காத பப்ஜி: வீடியோ

இந்த பப்ஜி மோகம் தற்போது டாடா நெக்ஸான் காரையும் விட்டுவைக்கவில்லை, மும்பை நகரை சேர்ந்த வினை கபூர் என்பவர் கார்களை கஸ்டமைஸ் செய்து வருகிறார், இவர் கஸ்டமைஸ் செய்யும் கார்களை விடியோவாக இணையதளத்தில் வெளியிடுகிறார். தற்போது அவர் பப்ஜி கேம்களின் ஸ்லோகன்கள் மற்றும் லோகோக்களை கொண்டு டாடா நெக்ஸான் காரினை வடிவமைத்துள்ளார். இதன் விடியோவினை அவர் வெளியிட்டுள்ளார்.

டாடா நெக்ஸானையும் விட்டு வைக்காத பப்ஜி: வீடியோ

அந்த வீடியோவில் பப்ஜி கேம்களின் ஸ்லோகன்கள் மற்றும் லோகோக்களை கொண்டு காரின் சைடு டோர்கள், பெனட் போன்ற இடங்களில் ஸ்டிக்கரிங் செய்து வடிவமைத்துள்ளார், மேலும் ரியர் மிரரில் பப்ஜி வரும் மேப் மற்றும் ரியர் பம்பரின் கீழ் தோட்டாக்களும் வைத்து டிசைன் செய்துள்ளார். காரின் பூட் ஸ்பெஸில் பப்ஜி கேமில் வருவது போன்ற புல் தரை மற்றும் லூட் பாக்ஸினை வைத்துள்ளார். இந்த கஸ்டமைஸ் கேமர்களுக்கு சிறப்பு விருந்தாக அமையம் என தெரிகிறது. குறிப்பாக பப்ஜி பிரியர்களை இந்த டிசைன் வெகுவாக கவர்ந்துள்ளது.

இந்த பப்ஜி கஸ்டமைஸ் செய்ய மொத்தமாக ருபாய் 4,500 செலவாகும் என வினை கபூர் கூறியுள்ளார், டாட்டா நெக்ஸான் எஞ்சின் அதிகபட்சமாக 108.5 பிஎச்பி பவரையும், 170 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இது பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் தேர்வுகளில் கிடைக்கிறது. தற்போது இந்த புதிய பப்ஜி கஸ்டமைஸ் கேம் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. பப்ஜி ரசிகர்கள் இனி தங்கள் காரிலும் இதை செய்ய ஆர்வம் காட்டுவார்கள் என்பது நிச்சயம்.

Most Read Articles
English summary
Pupb Modified Tata Nexon: Read More in Tamil
Story first published: Friday, May 3, 2019, 13:05 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X