ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

டாடா ஹாரியர் அடிப்படையில் வர இருக்கும் புதிய 7 சீட்டர் எஸ்யூவியின் பெயர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

கடந்த ஜனவரியில் டாடா ஹாரியர் எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் நல்ல வரவேற்பை பெற்றாலும், கியா செல்டோஸ், எம்ஜி ஹெக்டர் உள்ளிட்ட மாடல்களின் வரவால், கடும் நெருக்கடியை சந்தித்து வருகிறது.

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

இந்த நிலையில், ஹாரியர் எஸ்யூவியின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள புதிய 7 சீட்டர் மாடலை கடந்த மார்ச் மாதம் ஜெனிவா மோட்டார் ஷோவில் டாடா மோட்டார்ஸ் காட்சிப்படுத்தி இருந்தது. பஸ்ஸார்டு என்ற பெயரில் இந்த மாடல் குறிப்பிடப்பட்டது.

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவி தொடர்ந்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டு வந்தன. இந்த நிலையில், மிக விரைவில் இந்த புதிய 7 சீட்டர் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்ய இருக்கிறது.

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதத்தில், இந்த எஸ்யூவியின் டீசருடன் சேர்த்து, பெயர் விபரத்தையும் டாடா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்த எஸ்யூவிக்கு க்ராவிட்டாஸ் என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

மேலும், டீசர் வீடியோவில் வரும் பிப்ரவரி மாதம் இந்த புதிய எஸ்யூவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய எஸ்யூவியின் அறிமுகம் குறித்து டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு தலைவர் மாயங்க் பரீக் கூறுகையில்," எங்களது வாடிக்கையாளர்களுக்கு அடுத்த ஒரு சிறந்த எஸ்யூவி மாடலை வழங்க இருப்பதில் பெருமிதம் கொள்கிறோம்.

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

சொகுசு, செயல்திறன் போன்ற அனைத்து விதத்திலும் டாடா க்ராவிட்டாஸ் ஓர் உன்னத அனுபவத்தை வாடிக்கையாளர்களுக்கு வழங்கும். வரும் பிப்ரவரியில் அறிமுகம் செய்யப்படும்போது, சந்தையில் மிக முக்கிய இடத்தை இந்த எஸ்யூவி பெறும் என்று நம்புகிறோம்," என்று தெரிவித்துள்ளார்.

MOST READ: பாஸ்ட்டேக்கால் வாகன உரிமையாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்... இதற்கெல்லாம் தீர்வு என்ன தெரியுமா?

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

டாடா ஹாரியர் எஸ்யூவியை போன்றே முகப்பு டிசைன் இடம்பெற்றிருக்கும். அதேநேரத்தில், 7 சீட்டர் மாடலுக்கு தக்கவாறு நீளத்திலும், டிசைனிலும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. ஹாரியர் எஸ்யூவியைவிட க்ராவிட்டாஸ் எஸ்யூவி நீளத்தில் 63 மிமீ வரையிலும், அகலத்தில் 72 மிமீ வரையிலும், உயரத்தில் 80 மிமீ வரையிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

MOST READ: சென்னையில் ஏத்தரின் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தொழிற்சாலை...

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

இந்த எஸ்யூவியில் வீல் பேஸ் மட்டும் 2,741 மிமீ என்ற அளவில் தக்கவைக்கப்பட்டுள்ளது. மேலும், 18 அங்குல அலாய் வீல்கள், பனோரமிக் சன்ரூஃப் ஆகியவை கூடுதல் சிறப்பம்சமாக வழங்கப்பட இருக்கின்றன.

MOST READ: மாஸ்டர் பிளான்... மோடி-நிதின் கட்கரியின் அதிரடியால் இந்தியாவில் நடந்த அதிசயம்... என்ன தெரியுமா?

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

புதிய டாடா க்ராவிட்டாஸ் 7 சீட்டர் எஸ்யூவியில் 2.0 லிட்டர் டர்போசார்ஜ்டு டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 170 பிஎச்பி பவரையும், 350 என்எம் டார்க் திறனையும் வழங்கும். 6 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையானதாக வர இருக்கிறது.

ஹாரியர் 7 சீட்டர் எஸ்யூவிக்கு புதிய நாமகரணம் சூட்டியது டாடா மோட்டார்ஸ்!

புதிய டாடா க்ராவிட்டாஸ் எஸ்யூவி வரும் பிப்ரவரி மாதம் நடக்க இருக்கும் ஆட்டோ எக்ஸ்போவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக தெரிய வந்துள்ளது. ரூ.15 லட்சம் ஆரம்ப விலையிலிருந்து எதிர்பார்க்கலாம். விரைவில் வரும் எம்ஜி ஹெக்டர் எஸ்யூவியின் 7 சீட்டர் மாடல், மஹிந்திரா எக்ஸ்யூவி500 எஸ்யூவி ஆகியவற்றிற்கு போட்டியாக இருக்கும்.

Most Read Articles

English summary
Tata Motors has revealed the name of new 7 seater SUV based on Harrier and it will be launched at 2020 Auto Expo.
Story first published: Wednesday, November 27, 2019, 11:32 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X