நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது மூன்று மாடல்களின் சில வேரியண்ட்களின் உற்பத்தியை நிறுத்தி உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

சபாரி, ஜெஸ்ட் மற்றும் போல்ட் மாடல்களின் சில வேரியண்ட்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் விற்பனையில் இருந்து விலக்கியுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து ரஸ்லேன் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

கட்டாயமாக இடம்பெற வேண்டிய பாதுகாப்பு வசதிகள் இல்லாத சபாரி, ஜெஸ்ட், போல்ட் மாடல்களின் வேரியண்ட்கள்தான் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்காத இந்த வேரியண்ட்களின் உற்பத்தியையும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நிறுத்திவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இருந்தபோதும் கூட பழைய ஸ்டாக்குகள் காலியாகும் வரை இந்த வேரியண்ட்கள் விற்பனை செய்யப்படும் என கூறப்படுகிறது.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

டாடா சபாரியை பொறுத்தவரை, பேஸ் எல்எக்ஸ் மற்றும் டாப் விஎக்ஸ் 4x4 வேரியண்ட்கள் விற்பனையில் இருந்து விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. அதே சமயம் டாடா போல்ட் மற்றும் ஜெஸ்ட் கார்களின் எக்ஸ்இ மற்றும் எக்ஸ்எம் வேரியண்ட்கள் (பெட்ரோல், டீசல்) விற்பனையில் இருந்து விலக்கப்பட்டுள்ளன.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

ஸ்டாக் முடிந்தபின்பு இவை விற்பனையில் இருந்து முழுமையாக விலக்கி கொள்ளப்பட்டு விடும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் மேற்கண்ட 3 மாடல்களின் எஞ்சிய வேரியண்ட்கள் அனைத்தும் தொடர்ந்து விற்பனையில் இருக்கும்.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

ஏனெனில் அரசால் கட்டாயமாக்கப்பட்டுள்ள ஏர் பேக்குகள், இபிடி உடனான ஏபிஎஸ் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகளை அவை பெற்றுள்ளன. இதுதவிர இந்த வேரியண்ட்களில், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார் வசதி கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

புதிய பாதுகாப்பு விதிமுறைகளுக்கு இணங்க வேண்டும் என்பதற்காக இந்த சிறிய அளவிலான பாதுகாப்பு அப்டேட்டை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் செய்துள்ளது. டாடா சபாரி, ஜெஸ்ட் மற்றும் போல்ட் ஆகிய மாடல்களின் விற்பனை சமீப காலமாக மந்தமாக இருந்து வருகிறது.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

இந்திய மார்க்கெட்டில் இந்த கார்களுக்கான டிமாண்ட் குறைந்து கொண்டே வருவதே இதற்கு முக்கியமான காரணம். இருந்தபோதும் அவற்றை உற்பத்தியில் இருந்து முழுமையாக விலக்காமல் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தொடர்ந்து விற்பனையிலேயே வைத்துள்ளது.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

இதனிடையே டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறிய டீசல் இன்ஜின்களின் உற்பத்தியை நிறுத்தவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளே இதற்கு காரணம்.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

எதிர்வரவுள்ள மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் மற்றும் க்ராஸ் டெஸ்ட் விதிகள் அமலுக்கு வருவதற்கு முன்பாக சில மாடல்களை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் உற்பத்தியில் இருந்து விலக்கி கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

ஆனால் அந்த மாடல்கள் எவை? எவை? என்பதை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இருந்தபோதும் தனது லைன் அப்பில் உள்ள பழைய மற்றும் வயதான மாடல்களின் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் கைவிட்டு விடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நீங்கள் மிகவும் நேசித்த இந்த டாடா கார்கள் இந்தியாவில் இருந்து பிரியாவிடை பெற்றன... காரணம் இதுதான்...

இதன் மூலமாக தனது புதிய மாடல்களுக்கு வழி ஏற்படுத்தி கொடுக்க டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது லைன் அப்பை முழுவதுமாக சீரமைக்க முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனவே அடுத்த சில மாதங்களில், டாடா மோட்டார்ஸின் லைன் அப்பில் பல்வேறு அதிரடியான மாற்றங்கள் நிகழவுள்ளன.

More from DriveSpark

Article Published On: Monday, May 27, 2019, 15:08 [IST]
English summary
Tata Motors Discontinue Certain Variants Of Safari, Zest And Bolt Models In India. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+