டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெறுகிறது!

வாடிக்கையாளர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த, டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெற இருக்கிறது. கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெறுகிறது!

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மிகவும் வெற்றிகரமான எஸ்யூவி மாடலாக டாடா சஃபாரி நீண்ட காலமாக சந்தையில் இருந்து வந்தது. 1998ம் ஆண்டு அறிமுகம் இந்த எஸ்யூவிக்கு ஒரு நேரத்தில் வாடிக்கையாளர்களின் முதன்மையான தேர்வுகளில் ஒன்றாக இருந்தது. இதையடுத்து, சஃபாரியின் புதிய தலைமுறை மாடலாக 2012ம் ஆண்டு ஸ்டோர்ம் எஸ்யூவி அறிமுகம் செய்யப்பட்டது.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெறுகிறது!

இந்த நிலையில், கால மாற்றத்திற்கு தக்கவாறு சந்தையில் பல நவீன எஸ்யூவி கார் மாடல்கள் வந்தததால், சஃபாரி ஸ்ட்ரோம் எஸ்யூவிக்கான வரவேற்பு வெகுவாக குறைந்தது. கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்தம் 165 சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவிகள் மட்டுமே விற்பனையாகி உள்ளன.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெறுகிறது!

இந்த நிலையில், க்ராவிட்டாஸ் என்ற புதிய 7 சீட்டர் எஸ்யூவியை டாடா மோட்டார்ஸ் வரும் பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்ய இருக்கிறது. இதற்கு வழிவிடும் வகையில் பழமையாவிட்ட சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவியின் உற்பத்தியை டாடா மோட்டார்ஸ் நிறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெறுகிறது!

டீலர்களில் இருப்பில் உள்ள சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவிகளை விற்று தீர்ப்பதற்கான நடவடிக்கைகளில் தீவிரம் காட்டப்பட்டு வருகின்றன. மேலும், டெல்லி உள்ளிட்ட நகரங்களில் டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவியை வாடிக்கையாளர்களுக்கு டெஸ்ட் டிரைவ் செய்யும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெறுகிறது!

இந்த எஸ்யூவிக்கு புதிய முன்பதிவும் நிறுத்தப்பட்டுவிட்டது. எனவே, கிட்டத்தட்ட டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவியின் சகாப்தம் முடிந்துவிட்டதாகவே கருதலாம். பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளும் சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவியின் வரலாற்றுக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெறுகிறது!

இந்த 7 சீட்டர் எஸ்யூவியானது குடும்பத்தினர் ஒன்றாக பயணிப்பதற்கும், ஆஃப்ரோடு பயன்பாட்டை விரும்புவோருக்கும் சிறப்பான மாடலாக இருந்து வந்தது. இந்த எஸ்யூவியில் 2.2 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெறுகிறது!

இந்த எஞ்சின் இரண்டு விதமான ட்யூனிங்கில் கிடைத்து வந்தது. அதாவது, 148 பிஎச்பி பவரையும், 320 என்எம் டார்க் திறனையும் வழங்கும் வகையில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்தது. இரண்டாவது மாடலில் 154 பிஎச்பி பவரையும், 400 என்எம் டார்க் திறனையும் வழங்கும் திறனுடன் 6 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் கிடைத்து வந்தது.

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவி சந்தையிலிருந்து விடைபெறுகிறது!

டாடா சஃபாரி ஸ்டோர்ம் எஸ்யூவியில் ஹார்மன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், மல்டி பங்ஷன் ஸ்டீயரிங் வீல் சிஸ்டம், ரியர் ஏசி வென்ட்டுகள், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்ிகங் சிஸ்டம், எஞ்சின் இம்மொபைலைசர், சீட் பெல்ட் வார்னிங் சிஸ்டம், அல்ட்ராசோனிக் ரிவர்ஸ் பார்க்கிங் சிஸ்டம் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Source: Team BHP

Most Read Articles
English summary
According to report, Tata Motors has stopped production of legendary Safari Storme SUV due to poor sales figures.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X