தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?

தமிழ் திரையுலகில் அதிகம் பயன்படுத்தப்படும், அதிலும் வில்லன்களுக்கு மிகவும் பிடித்தமான காருக்கு இந்த ஆண்டில் நிகழவிருக்கும் சோகம் குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?

அண்மைக் காலங்களாக வாகன தயாரிப்பு நிறுவனங்கள், அதன் பிரபலமான சில மாடல்களை விற்பனையில் இருந்து விலக்கிக் கொள்வதாக அறிவித்து வருகின்றன. அந்த வகையில், மாருதி சுஸுகி நிறுவனம், அதன் புகழ்வாய்ந்த ஆம்னி மற்றும் ஆல்டோ உள்ளிட்ட சில மாடல்களை விற்பனையில் இருந்து விலக்கிக்கொள்வதாக அறிவித்தது. மாருதி சுஸுகியின் இந்த அறிவிப்பு, அதன் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?

இந்நிலையில், தமிழ் திரையுலகில் அதிகம் பயன்படுத்தப்பட்ட காராக இருந்து வரும் டாடா சுமோவின் உற்பத்தியை முடக்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த செய்தியை ரஷ்லேன் இணையதளம் வெளியிட்டுள்ளது.

தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?

டாடா சுமோ பெரும்பாலும், தமிழ் சினிமாவின் சண்டைக் காட்சி அல்லது ஹூரோயினைக் கடத்த செல்வது உள்ளிட்ட சில காட்சிகளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன்காரணமாகவே, இந்த கார் பிரபலம் மற்றும் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தையில் பெற்றது. அவ்வாறு, சுமோ ஒரு திரைப்படக் காட்சியில் வருகிறது என்றால், சிங்கிளாக எல்லாம் வராது, ஒரு பட்டாளத்தையே அதனுடன் அழைத்துவரும். அவ்வாறுதான் சினிமா காட்சிகள் அந்த காருக்கு முக்கியத்துவம் அளித்திருந்தது.

தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?

இத்தகைய சிறப்பு வாய்ந்த காரின் உற்பத்தியை முடக்க இருப்பதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது. டாடாவின் இந்த அறிவிப்பால், தமிழ் திரையுலகம் மற்றும் அதன் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர் என்றே கூறலாம். மேலும், டாடா சுமோவுடன் போல்ட் ஹேட்ச்பேக் காரின் உற்பத்தியையும் டாடா நிறுவனம் முடக்கியுள்ளது.

தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?

டாடா உட்பட வாகன தயாரிப்பு நிறுவனங்களின் இந்த திடீர் அறிவிப்பிற்கு காரணமாக புதிய பாதுகாப்பு மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதியே காரணமாக இருக்கின்றது. புதிய பாதுகாப்பு விதியானது வருகின்ற அக்டோபர் மாதம் முதல் அமலுக்கு வர இருக்கிறது. அதேபோன்று, மாசு உமிழ்வு புதிய விதிமுறை வருகின்ற 2020ம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் நடைமுறைக்கு வர இருக்கிறது. இந்த புதிய விதிமுறைகளுக்கு டாடா சுமோ மற்றும் போல்ட் ஈடு கொடுக்காது என்பதன் காரணத்தால் விற்பனையில் இருந்து விலக்கப்படுகின்றன.

தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?

டாடா சுமோவை அந்த நிறுவனம், கோல்டன் நிறத்தில் அப்கிரேட் செய்யப்பட்ட வெர்ஷனாக கடந்த 2011ம் ஆண்டு அறிமுகம் செய்தது. இந்த காரில் 4 சிலிண்டர் கொண்ட எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இது 84 பிஎச்பி பவரை 3,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். அதேபோன்று, 250 என்எம் டார்க்கை 1,000 ஆர்பிஎம்-இல் வெளிப்படுத்தும். மேலும், இதில் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கார் ரூ.7.52 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகியது.

தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?

சுமோ உடன் போல்ட் ஹேட்ச்பேக் காரின் உற்பத்தியையும் டாடா நிறுவனம் முடக்கியுள்ளது. இந்த காரினை அந்த நிறுவனம் கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற வாகன கண்காட்சியில் அறிமுகம் செய்திருந்தது. இந்த கார் எக்ஸ்1 என்ற பழைய மாடல் காரின் பிளாட்பார்மில் வைத்து உருவாக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, டாடா நிறுவனம் நானே, ஜெஸ்ட் மற்றும் சஃபாரி உள்ளிட்ட சில கார்களின் உற்பத்தியையும் நிறுத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழ் சினிமா வில்லன்களுக்கு மிகவும் பிடித்த காருக்கு நிகழவிருக்கும் சோகம்: எந்த கார் என தெரியுமா...?

டாடா நிறுவனத்தின்மூலம் பல்வேறு புதிய மாடல்கள் தற்போது விற்பனைக்கு வந்துவிட்டதால் அதற்கு முன்பாக விற்பனைக்கு வந்த மாடல்களின் விற்பனை கணிசமாக சரிய துவங்கின. ஆகையால், பழைய மாடல் கார்களை புதிய விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிப்பதைவிட, புதிய மாடல்களை அதிக சக்தி மற்றும் நவீன யுக்திகளுக்கு ஏற்ப தயாரிக்கும் முயற்சியில் டாடா நிறுவனம் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் டாடா நிறுவனம் தற்போது டியாகோ, டிகோர், நெக்ஸான், ஹேரியர் மற்றும் அல்ட்ராஸ் உள்ளிட்ட புதிய மாடல்களை சந்தையில் களமிறக்கி வருகிறது.

Most Read Articles
English summary
Tata Sumo, Bolt Discontinued. Read In Tamil.
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X