டாடா சுமோ எஸ்யூவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது?

டாடா சுமோ விற்பனையிலிருந்து விலக்கிக் கொள்ளப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா சுமோ எஸ்யூவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது?

அம்பாசடர் கார் போன்று பட்டணம் முதல் பட்டிதொட்டி வரை நீக்கமற நிறைந்திருந்த கார் மாடல் டாடா சுமோ. எஸ்யூவி ரகத்தில் அதிகம் பேர் பயணிக்கும் வசதியுடன் குறைவான பட்ஜெட்டில் கிடைத்து வந்தது. இதனால், தனிநபர் மார்க்கெட்டைவிட டாக்சி மார்க்கெட்டில் அதிகம் பயன்படுத்தப்பட்டது.

டாடா சுமோ எஸ்யூவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது?

மேலும், அனைத்து தரப்பு மக்களாலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட கார் மாடலாகவும் இருந்து வந்தது. இந்த நிலையில், சுமார் 25 ஆண்டுகளாக இந்தியர்களின் மனம் கவர்ந்த போக்குவரத்து சாதனமாக விளங்கிய டாடா சுமோ அந்திம காலத்தை நெருங்கிவிட்டது.

டாடா சுமோ எஸ்யூவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது?

இந்த சூழலில், புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகள் மற்றும் பிஎஸ்-6 மாசு உமிழ்வு பிரச்னைகளால் நீண்ட காலமாக மார்க்கெட்டில் இருந்து வந்த கார்கள் சந்தையிலிருந்து விலக்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில், டாடா சுமோ விற்பனையிலிருந்து விலக்கப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

டாடா சுமோ எஸ்யூவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது?

பெருநகரங்களில் டாக்சி பயன்பாட்டில் அதிகம் இருந்தாலும், தமிழகத்தின் ஊரக பகுதி மக்களின் சொகுசு வாகனமாக வலம் வந்தது. அதிகம் பேர் பயணிக்கும் வாய்ப்பு, சிறந்த எரிபொருள் சிக்கனம், திறன் வாய்ந்த எஞ்சின் போன்றவை இதனை ஊரக மக்கள் விரும்புவதற்கு முக்கிய காரணமாக இருந்தது.

டாடா சுமோ எஸ்யூவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது?

கடந்த 2011ம் ஆண்டு சுமோ விக்டா மாடலுக்கு பின்னர் சுமோ கோல்டு மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. இந்த எஸ்யூவியில் 3.0 லிட்டர் டீசல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 250 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

டாடா சுமோ எஸ்யூவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது?

இந்த எஸ்யூவி ரக கார் லிட்டருக்கு 14.7 கிமீ மைலேஜை வழங்கும் என்று சான்றளிக்கப்பட்ட மாடல். நடைமுறையில் லிட்டருக்கு 10 கிமீ என்ற அளவிற்கு குறையாமல் மைலேஜ் தரும் திறன் பெற்றிருந்தது. இதுவும் வாடிக்கையாளர்களை கவர்வதற்கு முக்கிய காரணம்.

டாடா சுமோ எஸ்யூவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது?

டாடா சுமோ கார் ரூ.7.52 லட்சம் முதல் ரூ.8.96 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் கிடைத்து வந்தது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் புதிய பிளாட்ஃபார்மில் கார்களை உருவாக்குவதற்கு முடிவு செய்து, பழைய பிளாட்ஃபார்மில் உருவாக்கப்பட்ட கார்களுக்கு விடைகொடுத்து வருகிறது.

டாடா சுமோ எஸ்யூவியின் சகாப்தம் முடிவுக்கு வந்தது?

இந்த பட்டியலில் டாடா சுமோ காரும் இடம்பெற்றுவிட்டது. இத்துடன் சேர்ந்து டாடா போல்ட் காரின் விற்பனையும் நிறுத்தப்பட்டு இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. டாடா போல்ட் காரின் இடத்தை டாடா அல்ட்ராஸ் கார் நிரப்ப இருக்கிறது. கூடிய விரைவில் புதிய டாடா அல்ட்ராஸ் கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. ஆனால், டாடா சுமோ காருக்கு மாற்றான மாடல் வராது என்று தெரிகிறது.

More from DriveSpark

Article Published On: Monday, April 8, 2019, 14:33 [IST]
English summary
According to reports, Iconic Tata Sumo SUV has discontinued in India due to new safety and emission norms.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+