சீன நிறுவனத்தின் உதவியை நாடும் டாடா... நாட்டின் ஜாம்பவான் நிறுவனத்திற்கு வந்த சோகம்..
நாட்டின் ஜாம்பவான் நிறுவனமான டாடா, சீன நாட்டைச் சேர்ந்த நிறுவனங்களின் உதவியை நாட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

இந்தியா வாகன உலகின் ஜாம்பவான் என்று போற்றப்படும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் அண்மைக் காலங்களாக கடும் விற்பனைச் சரிவைச் சந்தித்த வருகின்றது. இதனால், அந்நிறுவனம் தற்போது கடும் நிதி இழப்பில் சிக்கி தவிக்கின்றது. ஆகையால், அதன் நிதி சுமையும் கணிசமாக அதிகரித்துள்ளது.
அந்தவகையில், செப்டம்பர் 30 நிலவரப்படி, அதன் இந்தியா வணிகத்திற்கான மொத்த கடன் ரூ. 23 ஆயிரம் கோடிக்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.

அதேசமயம், அந்நிறுவனத்தின் மற்றுமொரு பிராண்டாக செயல்படும் ஜாகுவார் லேண்ட் ரோவர் வணிகத்தையும் இத்துடன் சேர்த்தால், மொத்த கடன் சுமார் 95.5 ஆயிரம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக காணப்படுகின்றது.

அதேசமயம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வணிக வாகன விற்பனை நல்ல வரவேற்பைப் பெற்றதாக இருக்கின்றது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக பயணிகள் வாகனங்களின் வணிகம் மட்டும் அந்நிறுவனம் விரும்பியபடி விற்பனையைப் பெறவில்லை.
இந்நிறுவனத்தின் சந்தை பங்கு கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரை 4.59 சதவீதமாக குறைந்துள்ளது. முந்தைய ஆண்டின் (2018) காலகட்டத்தில், சந்தை பங்கு 6.19 சதவீதமாக காணப்பட்டது.

இந்த காலகட்டத்தில், விற்பனை 86,412 யூனிட்டுகளாக குறைந்து, -39 சதவீதத்தைப் பெற்றுள்ளது. இதனால், நவம்பர் 2019 இல், டாடா மோட்டார்ஸ் நாட்டின் சிறந்த கார் தயாரிப்பாளர்களின் பட்டியலில் ஆறாவது இடத்தைப் பிடித்து பின் தங்கியது. இதன் ஆண்டு முதல் ஆண்டு விற்பனை -43.14 சதவீதத்தை அடைந்தது. கடந்த ஆண்டு நவம்பரில் 18,290 யூனிட்டுகளாக இருந்த விற்பனை 2019 நவம்பரில் 10,400 ஆக குறைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் இந்த விற்பனை வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. அதில், ஒன்று புதிய நிறுவனங்களின் அறிமுகம். அடுத்த இடங்களில் உற்பத்திக்கான விலையுயர்வு மற்றும் புதிய மாசு உமிழ்வு விதி உள்ளிட்டவை இருக்கின்றன.
ஆகையால், இந்த வீழ்ச்சியில் தப்பிப்தற்காக புதிய யுக்தியை கையாள டாடா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்தவகையில், சீனாவின் முக்கிய நிறுவனம் ஒன்றுடன் அது கைகோர்க்க உள்ளது.

இந்த கூட்டணியில் புதிய தொழில்நுட்பங்களைப் பரிமாறிக் கொள்ளுதல், புதிய எஞ்ஜின்களுக்கான ஆர்&டி, மின்சார வாகனங்கள் மற்றும் புதிய வாகனங்களுக்கான பிளாட்பாரங்களை பகிர்ந்துக்கொள்ளவும் திட்டமிடப்பட்டுள்ளது.

டாடா மோட்டார்ஸுடன் கூட்டு சேருவது சீன நிறுவனங்களுக்கு சாதகமாக இருக்கும், ஏனெனில் அந்நிறுவனம் ஏற்கனவே பெரிய உற்பத்தி வசதிகளையும் நாடு தழுவிய டீலர் நெட்வொர்க்கையும் கொண்டுள்ளது. எம்ஜி மோட்டாருக்கு (சீனாவைச் சேர்ந்த எஸ்.ஏ.சி மோட்டார் கார்ப்பரேஷனுக்குச் சொந்தமானது) பிறகு, மற்ற சீன கார் தயாரிப்பாளர்களும் இந்தியாவில் களமிறங்க காத்துக் கொண்டிருக்கின்றனர்.

அந்தவகையில், கிரேட் வால் மோட்டார்ஸ் மற்றும் சாங்கன் ஆட்டோமொபைல் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் வெகுவிரைவில் கால்தடம் பதிக்க இருக்கின்றன. ஆகையால், இவை ஏதேனும் ஒன்றுடன் டாடா மோட்டார்ஸ் புதிய கூட்டு வைப்பதற்கான முயற்சியில் ஈடுபடலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுபோன்று வாகன உற்பத்தி நிறுவனங்கள் இணைந்து செயல்படுவது இந்தியாவிற்கு புதிதல்ல. இதற்கு பல இதுபோன்ற பல்வேறு நிறுவனங்கள் இணைந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது.
அந்தவகையில், நடப்பாண்டின் ஆரம்பத்தில் எரிபொருள் இயந்திரங்கள் மற்றும் மின்சார வாகனங்களை மேம்படுத்துவதற்காக மஹிந்திரா அண்டு மஹிந்திரா மற்றும் ஃபோர்டு மோட்டார் ஆகிய இரு நிறுவனங்களும் புதிய கூட்டணியை தொடங்கின.

அதேசமயம், டாடா நிறுவனமும் கடந்த 2017 ஆம் ஆண்டில் ஃபோக்ஸ்வாகன் ஏஜி-யுடன் இணைந்து செயல்படுவதற்கு ஆர்வம் காட்டியது. இருப்பினும், அந்த திட்டங்கள் பலனளிக்கவில்லை. இந்தியா போன்ற பெரும் நாடுகளில் புதிய வர்த்தகத்தை தொடங்குவது அல்லது விரிவுபடுத்துவது நல்ல பலனை அளிக்கலாம்.
Source: livemint.com


Click it and Unblock the Notifications








