அட்டகாசமான புதிய வசதியுடன் டாடா டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் அட்டகாசமான புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அட்டகாசமான புதிய வசதியுடன் டாடா டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

பட்ஜெட் கார் மார்க்கெட்டில் டாடா டியாகோ மற்றும் டிகோர் செடான் கார்கள் மதிப்பு வாய்ந்த மாடல்களாக இருந்து வருகின்றன. இந்த நிலையில், சந்தைப் போட்டியை மனதில் வைத்து, டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் மதிப்பை கூட்டும் விதத்தில் கூடுதல் அம்சம் சேர்க்கப்பட்டு இருக்கிறது.

அட்டகாசமான புதிய வசதியுடன் டாடா டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இரண்டு கார் மாடல்களிலுமே முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. பிஎஸ்-6 எஞ்சினுடன் வரும் டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில்தான் இந்த வசதி கொடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், முன்னதாகவே பிஎஸ்-4 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடல்களிலேயே சத்தமில்லாமல் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

அட்டகாசமான புதிய வசதியுடன் டாடா டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டரில் நடுவில் வேகத்தை காட்டும் ஸ்பீடோமீட்டர் திரையும், இடது புறத்தில் எஞ்சின் சுழல் வேகம் குறித்த தகவலை வழங்கும் டாக்கோமீட்டரும், வலதுபுறத்தில் எரிபொருள் மானியும் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

அட்டகாசமான புதிய வசதியுடன் டாடா டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

மேலும், வண்டி ஓடிய தூரம், நிகழ்நேர எரிபொருள் செலவு, கார் கதவு திறந்திருப்பது குறித்த எச்சரிக்கை என பல்வேறு தகவல்களை இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மூலமாக பெற முடியும்.

அட்டகாசமான புதிய வசதியுடன் டாடா டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களின் விலை உயர்ந்த எக்ஸ்இசட் ப்ளஸ் மற்றும் எக்ஸ்இசட் ப்ளஸ் ஆட்டோமேட்டிக் ஆகிய இரண்டு வேரியண்ட்டுகளில் மட்டுமே இந்த டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் வசதி அளிக்கப்படுகிறது.

MOST READ: வெறும் ரூ. 2.83 லட்சம்தான்: நானோவிற்கு அடுத்த மலிவு விலை ரெனோ கார்... ஆனால் அதீத திறனுடையது!

அட்டகாசமான புதிய வசதியுடன் டாடா டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

இந்த கார்களின் எக்ஸ்இ, எக்ஸ்எம், எக்ஸ்இசட் ஆகிய வேரியண்ட்டுகளில் சாதாரண வகை அனலாக் மானிகளுடன் கூடிய இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர்தான் வழங்கப்படும். விலை உயர்ந்த வேரியண்ட்டுகளை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு இது மிகச் சிறந்த மதிப்பை வழங்கும்.

MOST READ: 11ம் வகுப்பு மாணவன் கண்டுபிடித்த சூப்பர் கண்ணாடி... இதில் இருக்கும் ஆச்சரியம் என்னவென்று தெரியுமா?

அட்டகாசமான புதிய வசதியுடன் டாடா டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

டாடா டியாகோ மற்றும் டிகோர் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் 1.05 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 83 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். பெட்ரோல் மாடல்கள் மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். டீசல் எஞ்சின் அதிகபட்சசமாக 68 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்ததும். டீசல் மாடல் மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வில் மட்டுமே கிடைக்கும்.

MOST READ: ஹீரோ, ஹோண்டா நிறுவனங்கள் ஆச்சரியம்: மகிழ்ச்சியின் உச்சத்தில் சுஸுகி... சோதனையிலும் ஓர் சாதனை!

அட்டகாசமான புதிய வசதியுடன் டாடா டியாகோ, டிகோர் கார்கள் விற்பனைக்கு அறிமுகம்!

விலை விபரம்

டாடா டியாகோ காரின் பெட்ரோல் டாப் வேரியண்ட் ரூ.5.85 லட்சத்திலும், டீசல் டாப் வேரியண்ட் ரூ.6.15 லட்சத்திலும் வந்துள்ளது. டிகோர் பெட்ரோல் டாப் வேரியண்ட் ரூ.6.99 லட்சத்திலும், டீசல் டாப் வேரியண்ட் ரூ.7.89 லட்சத்திலும் கிடைக்கிறது.

Tata Tiago Price
Variant Prices
XZ+ Petrol MT Rs 5,84,993
XZ+ Petrol MT Dual Tone Rs 5,91,993
XZA+ Petrol AMT Rs 6,29,993
XZA+ Petrol AMT Dual Tone Rs 6,36,993
XZA+ Diesel MT Rs 6,14,993
XZA+ Diesel MT Dual Tone Rs 6,76,993
Tata Tigor Price
Variant Prices
XZ+ Petrol MT Rs 6,99,994
XZA+ Petrol MT Rs 7,44,994
XZ+ Diesel MT Rs 7,89,994
Most Read Articles

English summary
Tata Motors has silently launched the Tiago and Tigor with a fully digital instrument cluster.
Story first published: Thursday, October 3, 2019, 12:42 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X