அட்டகாசமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா டியாகோ கார்!

டாடா டியாகோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலில் அசத்தலான புதிய அம்சங்கள் இடம்பெற இருக்கின்றன. அந்த விஷயங்களை இந்த செய்தியில் காணலாம்.

அட்டகாசமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா டியாகோ கார்!

புதிய விதிமுறைகள் மற்றும் சந்தைப் போட்டியை மனதில் வைத்து தனது பெரும்பாலான கார்களுக்கு புதுப்பொலிவு கொடுக்கும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் இறங்கி இருக்கிறது. அந்த வகையில், புதுப்பொலிவுடன் கூடிய டாடா டியாகோ கார் விரைவில் வர இருக்கிறது.

அட்டகாசமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா டியாகோ கார்!

இந்த காரில் பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்கள் இடம்பெற இருப்பது தெரிய வந்துள்ளது. அதில், முக்கிய அம்சமாக டாடா டியாகோ காரில் முழுமையான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் அமைப்பு கொடுக்கப்பட இருக்கிறது.

அட்டகாசமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா டியாகோ கார்!

ஸ்பை படத்தில் வேகத்தை தெரிவிக்கும் ஸ்பீடோ மீட்டர் தகவல் திரை நடுவில் அமைய பெற்றிருக்கிறது. தவிரவும், அதன் அருகிலேயே கார் ஓடிய தூரத்தை காட்டும் டிஜிட்டல் ஓடோமீட்டர், எரிபொருள் மானி உள்ளிட்ட தகவல்களை காட்டுகிறது.

அட்டகாசமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா டியாகோ கார்!

தவிரவும், புதிய டாடா டியாகோ காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான பெட்ரோல் எஞ்சின் தேர்வு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. தற்போது இந்த காரில் வழங்கப்படும் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 84 பிஎச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

அட்டகாசமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா டியாகோ கார்!

டாடா டியாகோ காரில் தற்போது வழங்கப்படும் மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் புதிய மாடலிலும் தக்க வைக்கப்படும். இந்த கார் லிட்டருக்கு 23.84 கிமீ மைலேஜே வழங்க வல்லதாக இருக்கிறது. புதிய மாடலில் இன்னமும் மேம்படும் என எதிர்பார்க்கலாம்.

அட்டகாசமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா டியாகோ கார்!

புதிய கிராஷ் டெஸ்ட் விதிமுறைகளுக்கு ஒப்பாக டாடா டியாகோ காரின் கட்டமைப்பு மற்றும் பாதுகாப்பு அம்சங்களிலும் குறிப்பிடத்தக்க மேம்பாட்டு பணிகள் செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

அட்டகாசமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா டியாகோ கார்!

தற்போது இந்த புதிய மாடல் சாலை சோதனகளுக்கு உட்படுத்தப்பட்டு இருக்கிறது. பண்டிகை காலத்திற்கு முன்னதாக இந்த கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

அட்டகாசமான புதிய அம்சங்களுடன் வருகிறது புதிய டாடா டியாகோ கார்!

புதிய டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் க்ளஸ்ட்டர் மற்றும் பிஎஸ்-6 எஞ்சின் தேர்வுகள் மூலமாக கூடுதல் மதிப்பு வாய்ந்த மாடலாக டாடா டியாகோ கார் மாறும். ரெனோ க்விட், மாருதி செலிரியோ, வேகன் ஆர் உள்ளிட்ட கார் மாடல்களுடன் போட்டி போடும்.

Image Courtesy: Honestatomobile

Article Published On: Saturday, August 3, 2019, 12:22 [IST]
English summary
According to reports and spy images, The Tata Tiago facelift will get all new digital instrument cluster, BS-Vi compliant engine and additional safety features.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+