விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டியது டாடா டியாகோ கார்!
கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா டியாகோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் என்ற புதிய வடிவமைப்பு கொள்கையில் உருவாக்கப்பட்ட இந்த கார் அந்நிறுவனத
டாடா டியாகோ கார் விற்பனையில் புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

கடந்த 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டாடா டியாகோ கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் இம்பேக்ட் டிசைன் என்ற புதிய வடிவமைப்பு கொள்கையில் உருவாக்கப்பட்ட இந்த கார் அந்நிறுவனத்தின் கேம் சேஞ்சர் மாடலாக மாறியது.

குறுகிய காலத்தில் வாடிக்கையாளர்களின் மனதை வென்ற இந்த கார், விற்பனையில் தொடர்ந்து சிறப்பான வரவேற்பை பதிவு செய்து வருகிறது. இந்த நிலையில், டாடா டியாகோ காரின் விற்பனை 2 லட்சம் என்ற புதிய மைல்கல்லை எட்டி இருக்கிறது.

டாடா டியாகோ கார் வாடிக்கையாளர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றதற்கு பல்வேறு காரணங்களை அடுக்கலாம். அடக்கமான விதத்தில் நவீன டிசைன் தாத்பரியங்களுடன் வந்தது முதல் காரணம்.

அண்மையில் டியாகோ காரின் எக்ஸ்இசட்ப்ளஸ் வேரியண்ட்டில் கூடுதல் சிறப்பம்சங்கள் சேர்க்கப்பட்டு வந்தது. இந்த மாடலில் 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், 15 அங்குல அலாய் வீல்கள் சேர்க்கப்பட்டன.

பிற உயர் வேரியண்ட்டுகளில் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், ஹார்மன் மியூசிக் சிஸ்டம் உள்ளிட்டவை கூடுதல் மதிப்பை வழங்கின. ஏர்பேக், ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்களும் இந்த காருக்கான வரவேற்பை அதிகரித்தது.

பெட்ரோல் மற்றும் டீசல் மாடல்களில் கிடைக்கிறது. பெட்ரோல் மாடலில் இருக்கும் 1.2 லிட்டர் ரெவோட்ரான் எஞ்சின் அதிகபட்சமாக 85 பிஎச்பி பவரையுமம், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். டீசல் மாடலில் இருக்கும் 1.05 லிட்டர் எஞ்சின் அதிகபட்சமாக 70 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும்.

இந்த காரின் பெட்ரோல், டீசல் மாடல்கள் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி எனப்படும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கிறது.

டாடா டியாகோ கார் ரூ.4.21 லட்சம் என்ற மிக சவாலான விலையில் கிடைக்கிறது. மாருதி வேகன் ஆர், ஹூண்டாய் சான்ட்ரோ, ரெனோ க்விட் உள்ளிட்ட பட்ஜெட் கார்களுடன் நேரடியாக போட்டி போடுகிறது.


Click it and Unblock the Notifications








