இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

கொடூரமான சாலை விபத்தில், உயிரை காப்பாற்றிய டாடா காருக்கு பயணிகள் நன்றிக்கடன் செலுத்தியுள்ளனர். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

இந்தியாவை சேர்ந்த டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சிறந்த கட்டுமான தரத்துடன் (Build Quality) கூடிய வலுவான கார்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்த சூழலில், பிரஷாந்த் நீகம் மற்றும் ராகுல் பாட்டீல் என்ற இருவர், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள ஒரு மெயில், இணையதள வாசிகளின் கவனத்தை வெகுவாக ஈர்த்துள்ளது.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

மிக சிறப்பான பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய வலுவான காரை உருவாக்கியதற்காக டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு இந்த மெயில் மூலம் அவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். டாடா டியாகோ (Tata Tiago) காரைதான், பிரஷாந்த் நீகம் மற்றும் ராகுல் பாட்டீல் ஆகிய இருவரும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர். நடந்தது இதுதான்.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

பிரஷாந்த் நீகம் மற்றும் ராகுல் பாட்டீல் ஆகியோரின் டாடா டியாகோ கார், கடந்த ஏப்ரல் 13ம் தேதி நள்ளிரவு கோர விபத்தில் சிக்கியுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம் சாங்லி பகுதியில் இந்த விபத்து நடைபெற்றுள்ளது. இந்த விபத்தில் டாடா டியாகோ கார் பலத்த சேதமடைந்து நொறுங்கி விட்டது. ஆனால் டாடா டியாகோ காரில் இருந்த சிறப்பான பாதுகாப்பு வசதிகள் மற்றும் அதன் வலுவான டிசைன் காரணமாக, பயணிகள் யாருக்கும் பெரிய அளவில் காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

இதனால் பெரும் மகிழ்ச்சியடைந்த பிரஷாந்த் நீகம் மற்றும் ராகுல் பாட்டீல் ஆகிய இருவரும் டியாகோ காரை புகழ்ந்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு மெயிலை தட்டி விட்டுள்ளதாக காடிவாடி தளம் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த மெயிலில் அவர்கள் கூறியிருப்பதாவது: உங்களுக்கு (டாடா மோட்டார்ஸ்) மீண்டும் மீண்டும் நன்றி சொல்லி கொள்ள விரும்புகிறோம்.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

இதுபோன்ற பாதுகாப்பான மற்றும் வலுவான கார்களை உருவாக்குவதற்காக கடுமையாக பணியாற்றி வரும் டாடா குழுவுடன் நாங்கள் எப்போதும் இணைந்திருப்போம் என்பதை உறுதியாக சொல்லி கொள்கிறோம். எங்களை போன்ற சாமானியர்களின் உயிரை காக்க பாதுகாப்பான கார்களை உருவாக்கும் உங்கள் பணி தொடரும் என நம்புகிறோம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

மஹாராஷ்டிர மாநிலம் மும்பையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அதிகம் விற்பனையாகும் மாடல்களில் ஒன்றாக டியாகோ உள்ளது. டாடா மோட்டார்ஸ் நிறுவனம் சமீபத்தில் டாடா டியாகோ காரின் என்ஆர்ஜி (NRG) மற்றும் ஜேடிபி (JTP) வெர்ஷன்களை அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

இந்த சூழலில் டியாகோ காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய டாடா மோட்டார்ஸ் நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. இதன்படி அப்டேட் செய்யப்படவுள்ள புதிய டாடா டியாகோ காரின் தோற்றத்தில் சிறிய அளவிலான மாற்றங்கள் மட்டுமே செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது புதிய அலாய் வீல்கள், மாற்றியமைக்கப்பட்ட க்ரில், புதிய ஹெட்லேம்ப்ஸ் ஆகியவை வழங்கப்படலாம்.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

ஆனால் மெக்கானிக்கலாக எவ்வித மாற்றமும் செய்யப்படாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் புதிய டியாகோ காரும் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுடன் விற்பனை செய்யப்படும் என்பதை புரிந்து கொள்ளலாம். டாடா டியாகோ பெட்ரோல் காரில், 1.2 லிட்டர், DOHC Revotron 3-சிலிண்டர் இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 6,000 ஆர்பிஎம்மில் 85 பிஎஸ் பவரையும், 3,500 ஆர்பிஎம்மில் 114 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. அதே சமயம் டாடா டியாகோ காரின் டீசல் வெர்ஷனில், 1.05 லிட்டர் 3-சிலிண்டர் Revotorq இன்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

இந்த இன்ஜின் அதிகபட்சமாக 4,000 ஆர்பிஎம்மில் 70 பிஎஸ் பவரையும், 1,800-3,000 ஆர்பிஎம்மில் 140 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தக்கூடியது. இதில், 5 ஸ்பீடு மேனுவல் டிரான்ஸ்மிஷன் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. டாடா டியாகோ காரின் பெட்ரோல் வெர்ஷன் லிட்டருக்கு 23.84 கிலோ மீட்டர் மைலேஜையும், டீசல் வெர்ஷன் லிட்டருக்கு 27.28 கிலோ மீட்டர் மைலேஜையும் வழங்குகின்றன. இது அராய் சான்று அளித்த மைலேஜ் ஆகும்.

இந்தியாவிற்கே பெருமிதம்.. கொடூர விபத்தில் உயிர் காத்த டாடாவிற்கு பயணிகள் காட்டிய நன்றிக்கடன் இதுதான்

அப்டேட் செய்யப்படவுள்ள புதிய டாடா டியாகோ காரில், டிரைவர் ஏர் பேக், ரிவர்ஸ் பார்க்கிங் சென்சார்கள், ஹை-ஸ்பீடு அலர்ட் மற்றும் சீட் பெல்ட் ரிமைண்டர் உள்ளிட்ட பாதுகாப்பு வசதிகள் ஸ்டாண்டர்டாக இடம்பெறவுள்ளன. முன்னதாக பல முறை இது போன்ற விபத்துக்களில் சிக்கியுள்ள டாடா டியாகோ, பயணிகளை பத்திரமாக பாதுகாத்திருப்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் டாடா நெக்ஸான் காரும் கூட பலமுறை பயணிகளின் உயிரை பாதுகாத்துள்ளது. டாடா நெக்ஸான்தான் குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் 5 ஸ்டார் பாதுகாப்பு ரேட்டிங் பெற்ற முதல் இந்திய கார் என்பது குறிப்பிடத்தக்கது.

Article Published On: Saturday, April 20, 2019, 19:05 [IST]
English summary
Tata Tiago Saved Passengers In A Horrific Accident. Read in Tamil
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+