புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்!

இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் கருத்துக்கள் மற்றும் எதிர்பார்ப்புகளுக்கு தக்கவாறு கூடுதல் சிறப்பம்சங்களுடன் இந்த இரண்டு மாடல்களையும் அறிமுகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ்.

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்!

அதன்படி, புதிய டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் விசேஷ வண்ணத்திலான சைடு மிரர்கள், கருப்பு வண்ண சுறா துடுப்பு ஆன்டென்னா ஆகியவை இடம்பெற்றுள்ள. க்ரில் அமைப்பும் பியானோ பிளாக் என்ற விசேஷ கருப்பு வண்ணத்திலும், ஜேடிபி பேட்ஜும் வழங்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்!

புதிய மாடல்களில் டைமண்ட் கட் அலாய் வீல்கள், பானட் ஸ்கூப், புதிய பம்பர் அமைப்புகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இது காரின் தோற்றத்தை மேலும் மெருகூட்டுவதாக அமைந்துள்ளது.

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்!

டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களில் ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த 5.0 அங்குல தொடுதிரைக்கு பதிலாக, புதிய 7.0 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஆப்பிள் கார் ப்ளே மற்றும் ஆன்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகளும் உள்ளன. ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கன்ட்ரோல் சிஸ்டமும் இடம்பெற்றுள்ளது.

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்!

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனஐயும் வழங்கும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்!

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்களில் புரொஜெக்டர் ஹெட்லைட்டுகள், சைடு ஸ்கர்ட்டுகள், ரூஃப் மவுண்ட் ஸ்பாய்லர், டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ரியர் பார்க்கிங் சென்சார்கள், சீட் பெல்ட் ரிமைன்டர் மற்றும் ஹை ஸ்பீடு அலர்ட் சிஸ்டம் ஆகியவை உள்ளன.

புதிய டாடா டியாகோ ஜேடிபி மற்றும் டிகோர் ஜேடிபி மாடல்கள் அறிமுகம்!

புதிய டாடா டியாகோ ஜேடிபி காருக்கு ரூ.6.69 லட்சம் விலையும், டிகோர் ஜேடிபி மாடலுக்கு ரூ.7.59 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையிலும் விற்பனைக்கு கிடைக்கும். பழைய டியாகோ ஜேடிபி மாடலைவிட ரூ.30,000 கூடுதல் விலையிலும், பழைய டிகோர் ஜேடிபி மாடலைவிட ரூ.20,000 கூடுதல் விலையிலும் இந்த புதிய மாடல்கள் விற்பனைக்கு வந்துள்ளன.

Article Published On: Wednesday, August 14, 2019, 17:01 [IST]
English summary
Tata Motors has just launched the updated versions of the Tiago JTP and Tigor JTP models in the Indian market. The new Tata Tiago JTP is now priced at Rs 6.69 lakh while the Tata Tigor JTP is offered with a price tag of Rs 7.59 lakh. All prices are ex-showroom (Delhi).
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+