டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

டாடா நிறுவனம் அதன் டியாகோ மற்றும் டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதியை அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

டாடா நிறுவனம் ஹேட்ச்பேக் ரகத்தில் டியாகோ காரையும், காம்பேக்ட் செடான் ரகத்தில் டீகோர் காரையும் விற்பனைச் செய்து வருகின்றது. இந்த இரண்டு மாடல்களிலும், தொழில்நுட்ப வசதியை கூட்டும் விதமாக ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் கனெக்டிவிட்டி ஆப்பினை அந்த நிறுவனம் இணைத்துள்ளது. இந்த புதிய வசதியானது, ஐபோன் மற்றும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் போன்களை காருடன் கனெக்ட் செய்ய உதவும்.

டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

டாடா மோட்டார்ஸ் தயாரிப்புகளின் விற்பனையில் இந்த இரண்டு மாடல்களும் பெரும் பங்களிப்பை அளித்து வருகின்றது. ஆகையால், இந்த இரண்டு மாடல்களிலும் புதிய டாப்-எண்ட் ட்ரிம் மாடலாக எக்ஸ்இசட்+ மாடலை டாடா நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்தது. இதைத்தொடர்ந்து, தற்போது மீண்டும் ஓர் புதிய வசதியை இந்த நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.

டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

டாடா டியாகோ ஹேட்ச்பேக் மாடல் ஒவ்வொரு மாதமும் 6 ஆயிரம் முதல் 8 ஆயிரம் யூனிட்கள் வரை விற்பனையாகி வருகின்றன. இதேபோன்று, டீகோர் மாடலில் 2 ஆயிரம் முதல் 3 ஆயிரம் யூனிட்கள் விற்பனையாகி வருகின்றன. இந்த இரண்டு மாடல்களும் சந்தையில், மலிவான விலையில் கிடைக்கும் தரமான கார்களாகப் பார்க்கப்படுகின்றன.

டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

டியாகோ காரை டாடா நிறுவனம் இந்தியாவில் ரூ.3.2 லட்சம் என்ற ஆரம்ப விலையில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தது. தற்போது இந்த கார் விலையுயர்வுப் பெற்று ரூ. 4.34 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனையாகி வருகிறது. இந்த விலையுயர்வு காரின் மதிப்பிற்கு ஏற்புடையதாக இருக்கிறது.

டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

டியாகோ கார் மூன்று விதமான எஞ்ஜின்கள் கொண்ட ஆப்ஷனில் கிடைக்கின்றது. அந்த வகையில், 1.2 லிட்டர், 3 சிலிண்டர், நேட்சுரல்லி அஸ்பையர்ட் பெட்ரோல் எஞ்ஜின் பொருத்தப்பட்ட வேரியண்ட் 84பிஎச்பி பவரையும், 115 என்எம் டார்க்கையும் வழங்கும். 1.1 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜட் டீசல் எஞ்ஜின் 69 பிஎச்பி பவரையும், 140 என்எம் டார்க் திறனையும் வழங்கும். இதேபோன்று, 1.2 லிட்டர், 3 சிலிண்டர், டர்போசார்ஜட் பெட்ரோல் எஞ்ஜின் 112 பிஎச்பி பவரையும், 150 என்எம் டார்க் திறனையும் வழங்குகிறது.

டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

இந்த அனைத்து வேரியண்ட்களிலும் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது. மேலும், கீழமை பெட்ரோல் எஞ்ஜின் கொண்ட வேரியண்டில் 5 ஸ்பீடு ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷனாக வழங்கப்படுகிறது.

டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

டியாகோவில் பொருத்தப்பட்டுள்ள அதே எஞ்ஜின்தான் டீகோரிலும் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இரண்டு கார்களிலும் பூட்ரூம் கொள்திறனில் மாற்றங்கள் எதுவும் இல்லை. டாடா டியாகோ ஜேடிபி காரில் 242 லிட்டர் கொள்திறன் கொண்ட இடவசதி கொண்ட பூட் ரூம் பகுதியும், டிகோர் ஜேடிபி மாடலில் 419 லிட்டர் கொள்திறன் கொண்ட பூட்ரூம் இடவசதியும் உள்ளன.

டாடா டியாகோ-டீகோர் மாடல்களில் புதிய நவீன வசதி அறிமுகம்!

தற்போது புதிய அப்கிரேஷனைக் கொண்ட புதிய மாடல் டியாகோ ஜேடிபி கார் ரூ.6.39 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும், டீகோர் ஜேடிபி ரூ. 7.29 லட்சம் என்ற ஆரம்ப விலையிலும் விற்பனைக்கு கிடைக்கின்றது.

Article Published On: Saturday, April 20, 2019, 9:08 [IST]
English summary
Tata Tiago & Tigor Now Get Apple CarPlay Smartphone Connectivity System. Read In Tamil.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+