டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

டாடா டியாகோ காரின் விஸ் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

பண்டிகை காலத்தை முன்னிட்டு கூடுதல் சிறப்பம்சங்கள் கொண்ட இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலை டாடா மோட்டார்ஸ் அறிமுகம் செய்துள்ளது. கடந்த 2018ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டடியாகோ விஸ் எடிசன் மாடலில் இருந்து பல்வேறு கூடுதல் சிறப்பம்சங்களை இந்த கார் பெற்றிருக்கிறது.

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

கடந்த முறை கருப்பு வண்ணக் கூரை மற்றும் சிவப்பு வண்ண அலங்கார அம்சங்களுடன் வந்தது. ஆனால், இந்த முறை டைட்டானியம் க்ரே என்ற விசேஷமான சாம்பல் வண்ணத்தில் கருப்பு வண்ணக் கூரையுடன் வந்துள்ளது. மேலும், இந்த முறை ஆரஞ்ச் வண்ணத்திலான அலங்கார அம்சங்களை பெற்றுள்ளது.

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

முன்புற க்ரில் அமைப்பு, சைடு மிரர்கள், அலாய் வீல்களில் ஆரஞ்ச் வண்ணத்திலான அலங்காரம் செய்யப்பட்டு இருப்பதால், வெளிப்புறத்தில் தனித்துவமான தோற்றத்தை பெற்றிருக்கிறது. புதிய வீல் கவர்களும் கொடுக்கப்படுகின்றன.

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

உட்புறத்தில் சாம்பல் மற்றும் ஆரஞ்ச் வண்ண அலங்கார அம்சங்கள் உள்ளன. ஏசி சிஸ்டத்தின் குளிர்காற்றை கேபினுக்குள் செலுத்தும் ஏர் வென்ட்டுகளை சுற்றிலும் ஆரஞ்ச் வண்ணம் தீட்டப்பட்டுள்ளது. அதேபோன்று, கியர் லிவர், உட்புற கதவு கைப்பிடிகளில் விசேஷ கருப்பு வண்ண அலங்காரம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

பிரிமீயம் ஃபேப்ரிக் சீட் கவர்களும், அதில் ஆரஞ்ச் வண்ண நூல் தையல் வேலைப்பாடுகளும் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ளன. இதனால், உட்புறம் பார்ப்பதற்கு மிகவும் பிரிமீயமாக காட்சித் தருகிறது.

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

டாடா டியாகோ விஸ் எடிசன் காரில் டியூவல் ஏர்பேக்குகள், சீட் பெல்ட் அணிவதை எச்சரிக்கும் வசதி, ரியர் பார்க்கிங் சென்சார்கள், அனைத்து சக்கரங்களுக்கும் பிரேக் பவரை சரி விகிதத்தில் செலுத்தும் இபிடி, பிரேக் பிடிக்கும்போது சக்கரங்களில் பிரேக் பேட் இறுகிக் கொள்ளாமல் தவிர்க்கும் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம் ஆகிய முக்கிய பாதுகாப்பு வசதிகள் இடம்பெற்றுள்ளன.

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

டாடா டியாகோ காரின் எக்ஸ்இசட் வேரியண்ட்டில் இடம்பெற்றிருக்கும் அனைத்து வசதிகளும் இந்த ஸ்பெஷல் விஸ் எடிசன் மாடலிலும் இடம்பெற்றிருக்கிறது. இந்த மாடலில் 2 டின் ஆடியோ சிஸ்டம், யுஎஸ்பி போர்ட் வசதி, புளூடூத் வசதி, ஆக்ஸ் போர்ட் வசதிகள் உள்ளன. தவிரவும், ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் சுவிட்சுகள், ரியர் பார்சல் செல்ஃப், எலெக்ட்ரிக் அட்ஜெஸ்ட் வசதியுடன் சைடு மிரர்கள், ரிமோட் சென்ட்ரல் லாக்கிங் சிஸ்டம் ஆகியவை இடம்பெற்றிருக்கின்றன.

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலானது பெட்ரோல் மாடலில் 1.2 லிட்டர் எஞ்சின் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 85 எச்பி பவரையும், 114 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த எஞ்சினுடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கிறது.

டாடா டியாகோ விஸ் எடிசன் விற்பனைக்கு அறிமுகம்: முழு விபரம்!

ரூ.5.40 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் புதிய டாடா டியாகோ விஸ் எடிசன் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. டியாகோ எக்ஸ்இசட் வேரியண்ட்டை விட ரூ.10,000 மட்டும் கூடுதல் விலையில் வந்துள்ளது. பண்டிகை காலத்தில் பட்ஜெட் கார் வாங்க இருப்பவர்களுக்கு இது நிச்சயம் சிறந்த தேர்வாக அமையும் என்று எதிர்பார்க்கலாம்.

More from DriveSpark

Article Published On: Friday, October 4, 2019, 14:16 [IST]
English summary
Tata Motors has launched the Tiago Wizz Edition hatchback in the Indian market. The new Tata Tiago Wizz Edition is priced at Rs 5.40 lakh, ex-showroom (Delhi). This makes it Rs 10,000 more than the standard variant it is based on.
 
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+