டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது.. முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா

டாடா நிறுவனம் டிகோர் மாடலின் எலக்ட்ரிக் வேரியண்ட் காரை தனி நபர்களுக்கு டெலிவரி செய்யும் பணியை துவக்கியுள்ளது. அதன்படி டிகோர் எலக்ட்ரிக் காரினை முதல் ஆளாக மும்பையை சேர்ந்த வாடிக்கையாளர் ஒருவர் டெலிவரி செய்துள்ளார்.

டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது... முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா?

எலக்ட்ரிக் வெர்சனுக்கு மாற்றப்பட்ட டிகோர் மாடலின் டாப் வேரியண்ட்டான எக்ஸ்டி+ காரை தான் அவர் வாங்கியுள்ளார். இந்திய எக்ஸ்ஷோரூமில் டிகோரின் இந்த டாப் வேரியண்ட் எலக்ட்ரிக் காரின் விலை ரூ.10.75 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது... முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா?

டிகோர் என்ஜின் கார்களின் பரிமாண அளவுகளை எந்தவொரு மாற்றமுமின்றி கொண்டுள்ள இந்த டிகோர் எலக்ட்ரிக் காரின் நீளம், அகலம், உயரம் மற்றும் வீல்பேஸ்களின் அளவுகள் முறையே 3,992 மிமீ, 1,677 மிமீ, 1,537 மிமீ மற்றும் 2,450 மிமீ என உள்ளன. இந்த எலக்ட்ரிக் கார் கிட்டத்தட்ட டிகோர் டீசல் வேரியண்ட்டிற்கு இணையாக 1,126 கிலோ எடை கொண்டதாக உள்ளது.

டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது... முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா?

21.5KWH பேட்டரியை கொண்ட இந்த எலக்ட்ரிக் காரின் மோட்டார் 40 பிஎச்பி பவரையும் 105 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் ஆற்றல் கொண்டது. எந்தவொரு தடையும் இல்லாத ட்ரைவிங்கிற்காக சிங்கிள்-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் யூனிட் இந்த காரில் பொருத்தப்பட்டுள்ளது.

டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது... முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா?

முழு சார்ஜிங் ஆக 12 மணிநேரம் எடுத்துக்கொள்ளும் வழக்கமான சார்ஜர், வெறும் 2 மணிநேரங்களில் பேட்டரியை 80 சதவீதம் நிரப்பிவிடும் விரைவான சார்ஜர் என இரு சார்ஜிங் தேர்வுகளை இந்த டிகோர் எலக்ட்ரிக் கார் கொண்டுள்ளது. இந்த காரின் பேட்டரிக்கு மூன்று வருட/ 1.25 லட்சம் கிமீ உத்தரவாதமும் வழங்கப்பட்டுள்ளது.

டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது... முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா?

அதிக மைலேஜை பெறுவதற்காக, இந்த எலக்ட்ரிக் காரின் அதிகப்பட்ச வேகத்தை 80 kmph அளவில் டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. இந்த காரினை ஒரே சார்ஜில் சுமார் 213 கிமீ வரையில் இயக்க முடியும். இதனால் இந்த கார் குறிப்பாக நகர்ப்புற பயன்பாட்டிற்கு மிகவும் சவுகரியமாக இருக்கும்.

டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது... முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா?

காரின் உட்புறத்தில், எட்டு ஸ்பீக்கர்களுடன் இணைக்கப்பட்ட இன்போடெயின்மெண்ட் அமைப்பு, 5.0 இன்ச் தொடுத்திரை, டர்ன்-பை-டர்ன் நாவிகேஷன், மியுசிக் ஷேரிங், பின்புற பார்க்கிங் அசிஸ்ட் மற்றும் அதிக அளவில் காலியிடங்கள் உள்ளன. பாதுகாப்பு அம்சங்களாக இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் ப்ரேக்கிங் அமைப்பு, கார்னரிங் ஸ்டாபிலிட்டி கண்ட்ரோல் மற்றும் எளிதில் விபத்துகளை ஏற்படுத்தா வண்ணம் வடிவமைக்கப்பட்ட உடல் அமைப்பு போன்றவை உள்ளன.

டாடா டிகோர் இவி காரின் டெலிவரி துவங்கியது... முதல் கார் எந்த நகரத்தில் டெலிவரி செய்யப்பட்டது தெரியுமா?

டாடா நிறுவனம் டிகோர் எலக்ட்ரிக் காரின் டெலிவரியை துவங்கியிருப்பது எலக்ட்ரிக் கார் பிரியர்களுக்கு கண்டிப்பாக மகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கும். டாடா டிகோர் இவி காரின் விலை இந்திய எக்ஸ்ஷோரூமில் ரூ.9.44 லட்சத்தில் இருந்து ரூ.12.59 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த விலை சிறிது அதிகம் தான். உங்களது நகரத்தில் இந்த எலக்ட்ரிக் கார் எந்த விலையில் விற்கப்படுகிறது என்பதை அறிய அருகில் உள்ள டீலர்ஷிப்பை அணுகவும்.

Most Read Articles
English summary
Tata Tigor Electric Vehicle Deliveries Begin For Private Buyers: First EV Delivered In Mumbai
Story first published: Friday, November 29, 2019, 19:51 [IST]
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X